தேவையானப் பொருட்கள்
- தூனா பிஷ் - 1 டின்
- பிரெட் ஸ்லைஸ் - 1 பாக்கெட்
- மயோனைஸ் - 4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- வெள்ளை மிளகு தூள் - தேவைக்கு
- கருப்பு மிளகு தூள் - சிறிது
- லெட்டூஸ் - தேவைக்கு
- பட்டர் - தேவைக்கு
- எழுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் முட்டையை அவித்து ஓட்டை நீக்கிவிட்டு இரண்டாக கட் பண்ணி வைக்கவும்.
-
- பிரெட்டிலும் பட்டர் தடவி தனியாக வைக்கவும்.
-
- மீனில் தண்ணீரை வடித்து விட்டு அதில் மயோனைஸ்,உப்பு, இரண்டு வகை மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி, எழுமிச்சை சாறு சேர்த்து கலந்துவைக்கவும்.
-
- பின் பட்டர் தடவிய ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் லெட்டூஸ் இலை வைத்து அதன் பின் மீன் கலவையை வைத்து மேலே சிறிது மிளகு தூள் தூவி அதன் மேல் பாதி முட்டையை வைத்து, பின் மேலே ஒரு லெட்டூஸ் வைத்து மற்றொரு பிரெட்டை வைத்து ஸாண்ட்விச் மேக்கரில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
-
- சுவையான எக் வித் தூனா ஸாண்ட்விச் தயார்.
குறிப்பு
குறிப்பு : ஸாண்ட்விச் மேக்கரில் அதிக நிமிடம் வைக்கக்கூடாது. பிரெட் முறுகிவிட்டால் இதன் டேஸ்ட்டே மாறிவிடும்.
இந்த தூனாவின் ஸ்மெஷாலிட்டியே இதன் ஸ்மெல் தான்.