உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ருசியான சாம்பார்

 

இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் சைடிஷ். ஹோட்டல் சாம்பார் சுவையிலேயே இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

  • துவரம்பருப்பு-ஒரு ஆழாக்கு
  • பெரிய வெங்காயம்-இரண்டு
  • தக்காளி-இரண்டு
  • கறிவேப்பிலை-சிறிதளவு
  • பூண்டு-பத்து பல்
  • பச்சை மிளகாய்-நான்கு
  • சாம்பார் வெங்காயம்-ஒரு கப்
  • புளி-எலுமிச்சை அளவு
  • உப்பு-தேவைக்கேற்ப
  • மிளகாய்ப்பொடி-இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள்-ஒரு சிட்டிகை
  • அரைக்க:
  • பெரிய வெங்காயம்-ஒன்று
  • தக்காளி-ஒன்று
  • தேங்காய்-அரை கப்
  • கொத்துமல்லி-ஒரு கப்
  • தாளிக்க:
  • கடுகு-ஒரு தேக்காரண்டி
  • கறிவேப்பிலை

செய்முறை

  • பிரஷர் பேனில் பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைய வேக வைத்து நன்கு மசிக்கவும்.
  • அரைக்க கூறிய பொருட்களை சிறிது நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நீர் சேர்த்து வேகவிடவும்.
  • அதில் புளிக் கரைசல், பச்சை மிளகாய்,உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • பிறகு மசித்த பருப்பு கலவையை அதில் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
  • அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • சாம்பாரை இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
  • கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

வழங்கியவர்

அன்னுராஜ்

சமைக்கும் நேரம்

அரைமணி நேரம்
random food image


comments