உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

வேர்க்கடலைப் பொடி

 


தேவையானப் பொருட்கள்

  • வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம்
  • கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு
  • உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு
  • சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய)
  • பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு
  • உப்பு, வறுக்க எண்ணெய்

செய்முறை

  • வேர்க்ககடலையை தோல் நீக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும்.
  • அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும்.
  • பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
  • தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம்.

குறிப்பு:

வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும்.

வழங்கியவர்

அன்னுராஜ்

random food image


comments
இதற்குப் பெருங்காயம்
மார்ச் 19, 2008 - 7:18am - வழங்கியவர் அதிரா

இதற்குப் பெருங்காயம் தூள் சேர்க்கக்கூடாதா. என்னிடம் தூள்தான் இருக்கிறது.பெருங்காயம் வாங்க முடியாது. ஆழாக்கு என்றால் என்ன அளவு? இதனை செய்து போத்திலில் நீண்டநாட்கள் வைத்துப் பாவிக்கலாம் என நினைக்கிறேன். வேர்க்கடலை என்றால் எது செய்தாலும் எனக்கு பிடிக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

hi athira
மார்ச் 20, 2008 - 1:41am - வழங்கியவர் அன்னு...

பெருங்காயத்தூளும் சேர்க்கலாம். கட்டி பெருங்காயம் என்றால் வாசனை தூக்கலாக இருக்கும். பொதுவாக பொடி வகைகளுக்கு கட்டி பெருங்காயம் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும். ஒரு ஆழாக்கு என்பது இருநூறு கிராமுக்கு சமம். எங்கள் வீட்டில் எதையும் அளந்து செய்யமாட்டார்கள். கண் அளவு, கை அளவு தான். நான் தான் ஒவ்வொன்றையும் அளந்து கொண்டிருப்பேன். நான் தரும் எல்லா ரெசிப்பியுமே என் அம்மா, பாட்டி, என் மாமியார் வழக்கமாகச் செய்வது தான். நான் யார் வீட்டுக்கு போனாலும் அங்கிருந்து ஒரு ரெசிப்பி கேட்டுக்கொள்வேன். எனவே என் குறிப்புகளில் உள்ள அளவுகள் மட்டும் தான் சில சமயம் தவறாக இருக்கலாமே தவிர எல்ல குறிப்புகளும் நான் தினசரி செய்யும் சாதாரண குறிப்புகள் தான். வேர்கடலைப்பொடி நல்ல வாசனையுடன் மிகவும் அருமையாக இருக்கும். செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

நன்றி அன்னு,
மார்ச் 20, 2008 - 5:19am - வழங்கியவர் அதிரா

நன்றி அன்னு,
நானும் வீட்டில் எதையுமே அளப்பதில்லை, எல்லாம் கண்மதிப்பம் தான். ஆனால் இப்போ அறுசுவை கூட்டாஞ்சோறில் இணைந்தபின் அளவை சரியாக கொடுப்பதற்காக ஒருமுறை செய்துவிட்டே குறிப்பு கொடுக்கிறேன். அதிலும் புதிதாக செய்யும் உணவாயின் அளப்பேன். ஏனெனில் எது கூடலாம் எது குறையலாம் என்று தெரியாததால். இங்கு பெருங்காயம் பற்றி கேட்டதற்கு காரணம். நான் பெருங்காயம் ரசம் செய்ய மட்டும்தான் பாவிப்பேன். மற்றபடி உணவிற்கு சேர்க்கப் பயம். உடலிற்கு நல்லதோ தெரியாது என்று கொஞ்சமாக சேர்ப்பேன். வாய்வுக் குணதை நீக்கும் என்கிறார்கள். நிட்சயம் செய்ததும் பதில் தருவேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்னு உங்கள்
மார்ச் 26, 2008 - 4:26am - வழங்கியவர் அதிரா

அன்னு உங்கள் கடலைப் பொடி செய்து பிறிச்சில் பத்திரமாக வைத்துவிட்டேன். அதிலும் ஒரு முறை நான் கண்டுபிடித்தேன், தேவையான அளவை எடுத்து அதற்குக் கொஞ்சம் எலுமிச்சைப் புளி சேர்த்தால் இன்னும் சுப்பராக இருக்கிறது. குறிப்புகளிற்கு நன்றி அன்னு

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்