உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

பொரித்த குழம்பு



தேவையானப் பொருட்கள்

  • முருங்கைக்காய் - 2
  • செள செள - ஒன்று
  • அவரைக்காய் - 100 கிராம்
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - 4
  • சின்ன வெங்காயம் - 10
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - அரை மூடி
  • கசகசா - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - 2 தேக்கரண்டி
முருங்கைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். செளசெளவை தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவரைக்காயின் இரண்டு ஓரங்களிலும் உள்ள நாரை நீக்கி விட்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து விட்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
step 1
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். குழம்புக்கு தேவையான மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
step 2
பின்னர் மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
step 3
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுதை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
step 4
கரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது கலவையுடன் நறுக்கி வைத்திருக்கும் அவரைக்காய், முருங்கைகாய், செளசெள ஆகியவற்றை தண்ணீரில் அலசி விட்டு போடவும்.
step 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
step 6
பிறகு காய்கறிகள் போட்ட தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து அதில் வதக்கியவற்றை போடவும்.
step 7
குழம்பை நன்கு கொதிக்க விடவும். 22 நிமிடம் கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவவும்.
step 8
இப்போது சுவையான பொரிச்ச குழம்பு தயார். முருங்கைகாய் மட்டும் வைத்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று காய்கறிகள் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
step 9
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.
step 10


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
brindacs looks very
மார்ச் 18, 2008 - 9:31pm - வழங்கியவர் brindacs

brindacs
looks very delecious can you tell me any other vegetable other than அவரைக்காய்

அருமையான குறிப்பு
மார்ச் 19, 2008 - 12:01am - வழங்கியவர் Jaleela Banu

டியர் சுமதி மேடம்
ரொம்ப நாள் கழித்து குறிப்பு போட்டு இருக்கிறீர்கள்.

ரொம்ப அருமையான குறிப்பு கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
நேற்றே போட்டு இருந்தால் இன்று செய்து இருப்பேன்.
எல்லா காயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு சவ் சவ் தவிர.
சரி அடுத்த வாரம் செய்து பார்க்கிறேன்.

இது ஸ்டெப் மாற்றி போட்டு உள்ளார்கள்.
கொதிக்கவீட்டு , தாளிப்பு கடைசியில் வரனும்.

ஜலீலா

கரெக்ட் ஸ்டெப்ஸ்
மார்ச் 19, 2008 - 11:32pm - வழங்கியவர் admin

ஜலீலா அக்கா, அவரது செய்முறையில் முதலில் வதக்கியவற்றை போட்டு பிறகுதான் வேகவைத்துள்ளார். நாங்கள் ஸ்டெப்ஸ் மாற்றிப் போடவில்லை. அந்த படத்தில் உள்ள காய்களைப் பார்த்தாலே தெரியுமே.. வதக்கியவற்றை போடும் படத்தில் காய்கள் வேகாமல் பச்சையாக இருக்கும்.

thanks
ஜூலை 23, 2008 - 3:44pm - வழங்கியவர் SWETHA11

really super thanks