உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கடலை பக்கோடா

 


தேவையானப் பொருட்கள்

  • வறுத்தெடுத்த, தோலெடுத்த கடலை- 1 கப்
  • கடலை மாவு- 200 கிராம்
  • அரிசி மாவு- 200 கிராம்
  • மிளகாய்த்தூள்- 1 மே.க
  • பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்
  • பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • பொடியாக அரிந்த வெங்காயம்- அரை கப்
  • பொடியாக அரிந்த புதினா இலைகள்- அரை கப்
  • வெண்னெய்- 2 மேசைக்கரண்டி
  • தேவையான உப்பு
  • பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்

செய்முறை

  • அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும்.
  • சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.
  • சூடான எண்ணெயில் கடலைக் கலவையை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


comments
மனோ மேடம்,
மார்ச் 23, 2008 - 2:57pm - வழங்கியவர் asiya omar

வறுத்த கடலை என்றால் என்ன கடலை? வேர்க்கடலையா?பதில் தெரிவிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஆசியா உமர்!
மார்ச் 24, 2008 - 10:52pm - வழங்கியவர் Mrs.Mano

வேர்க்கடலையைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை முத்துக்களை வறுத்து, அவற்றின் மெல்லிய தோலையும் புடைத்து நீக்க வேண்டும்.