Lobster எப்படி சமைப்பது?

Lobster எப்படி சமைப்பது என்பது தெரிந்தவர்கள் சொல்லுங்கலேன்.என்ன மசாலா ,எப்படி பிரை பன்னுவது,எனது சொல்லுங்களேன் ?plz .நான் இது வரை சமைத்தது இல்லை.

அன்புடன் பர்வீன்.

அன்பு பர்வீன், நானும் lobster சமைத்ததில்லை. அதை முதலில் கொதிக்கும் தண்ணீரில் போட்டுவிட்டு 15 நிமிடம் பாயில் செய்து ஆறியபின் அதன் ஓடுகளை எடுத்துவிட்டு, சதைப்பகுதியை துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும். நீங்கள் வழக்கமாக செய்யும் இறால் மசாலா, நண்டு மசாலா அல்லது க்ரேவி போல் செய்து பாருங்கள். ஏற்கனவே லாப்ஸ்டரை பாயில் செய்து விட்டதால் முதலில் கிரேவியை செய்து கொண்டு பிறகு அதில் லாப்ஸ்டரை சேர்த்து சிறுது நேரம் வைத்திருந்து இறக்கி விடுங்கள்.

சமைத்து பார்த்த மாதிரி அப்புறம் எதுக்கு இந்த பதில்னு கேக்கறீங்களா, இல்ல
நீங்க லாப்ஸ்டரை வாங்கிவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்களோ, உங்களுக்கு ஐடியா குடுக்கலாம்னுதான்:-)

ஹஹஹா.. வானதி ஒரே சிரிப்பு.
லாப்ஸ்டெரை நண்டு போலவே தான் சமைப்பாங்க...இவருக்கு ரொம்ம்ப இஷ்டம் ஆனால் அதை பாத்தாவே பேய் மாதிரி இருக்கு அதனால் சமைக மாட்டேன்னு சொல்லிட்டேன்.ஹோடெல்ல நண்டு போல தான் இருக்குமாம்

உங்கள் பதில் பார்த்து ரொம்ப சந்தோஷம் .நீங்க அக்கரையா லாப்ஸ்டெரை வச்சுட்டு நான் என்ன செய்திட்டு இருப்பேனோன்னு நினைச்சு ஒரு பக்கத்துவீட்டு தோழி போல எனக்கு உதவ நினைத்தமைக்கு ரொம்ப நன்றி வின்னி.என் கணவர் உன் அறுசுவைல கேலு என்று என்னை எலுதவைத்தார்.இங்கு ஹோட்டலில் ஒரு மசாலாவும் கொடுக்காமா வெறும் உப்பு மட்டும் போட்டு வேகவைத்து கொடுத்து விடுவார்களாம்.நேற்று மதியம் வரை பார்த்திட்டு ஒன்றும் புரியாம சரி என்று தளிக்காவின் இறால் மசாலா கொடுத்து செய்தேன்.ஆனால் ஓட்டுடன் செய்துவிட்டேன். வெந்த பின்பு ஓடு சுலபமா கழண்டு வருது.பார்க்கதான் அவ்லோ பெருசா இருக்கு சதைப்பற்று ரொம்ப குறைவு.எனக்காக பதில் டிப்ஸ் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி வின்னி.

அன்புடன் பர்வீன்.

தளிகா முலுசா அதை பார்க்கும் போது நான் பயந்திடுவேன்னு நண்பர் வீட்டிலேயே கட் செய்த்து கீளீன் செய்து கொண்டு வந்தாங்க.கட் செய்து பார்க்கும் போது ஒன்னும் தெரியல.உங்க இறால் மசாலா என் கணவரின் நன்பரின் வீட்டுக்கும் லாப்ஸ்டரை இதன்படி செய்ங்கன்னு எலுதி கொடுத்தேன்.அவங்களூக்கும் எப்படி செய்ரதின்னு தெரியல .எனக்கு மனசுல ஓரே பயம் இப்படி செங்கன்னு சொன்னோமே எப்படி இருக்குமோ தெரியலையேன்னு அப்பறம் நல்ல வேலை நேத்து சாபிப்பிடும் போது எங்கலுக்கு பிடித்திருந்தது.நான் நண்டு ,இறால்,பீஃப்,லாப்ஸ்டர் எதுமே சாப்பிடவும் மாட்டேன் .செய்யவும் மாட்டேன் இப்போ சாப்பிடவும் பழகி செய்யவும் பழகிட்டேன்.உங்கலுக்கும் எனது அன்பான நன்றி தளிகா.

அன்புடன் பர்வீன்

பர்வீன் சாரிப்பா...1 வாரமா இங்க இருந்த புக்ல(flavours) கவனிக்காம விட்டுட்டேன்..இன்னைக்கு பாத்தா எப்படி லாப்ஸ்டெர் க்லீன் பன்றதுன்னு இருக்கு....அதில் ஒரு பக்க ஷெல்லை அப்படியே கூர்மையான கத்தியால் வெட்டியிருக்கிரார்கள்..ஒரு பக்கம் அதனால் திறந்திருக்கு..உள்ள ஃபோர்கால் குத்தி சாப்பிடலாம்..

அட எதுக்குப்பா சாரி எல்லாம் பரவாயில்லை.உங்களுக்கு தெரிந்ததை தெரியாப்படுத்தனுன்னு எலுதனும்னு நினைப்பதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அன்புடன் பர்வீன்.

மேலும் சில பதிவுகள்