அமர்த்தபலம்

தேதி: March 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
மோர் - 3 கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயம் - குண்டு மணி அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

அரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை காம்பை கிள்ளி விடவும். கொத்தமல்லியை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் மோர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, தாளித்து அதனுடன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு ஒரு முறை வதக்கவும்.
அதன் பிறகு அதில் அரைத்து மோருடன் கலந்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பிறகு ஆய்ந்த கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனுடன், மேலே தூவி கெட்டியாக ஆகும் வரை 5 நிமிடம் நன்கு கிளறவும்.
5 நிமிடம் கைவிடாமல் கிளறிய பிறகு கலவை கெட்டியாக திரண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
ஒரு துணியை தண்ணீரில் தோய்த்து நன்கு பிழிந்து விட்டு ஒரு பலகையில் விரித்து விடவும். பிறகு செய்து வைத்திருக்கும் அமர்த்தபலத்தை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து துணியில் வட்டமாக வடை போல் தட்டவும்.
ஈரத்தை துணி உறிஞ்சியதும் ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொத்தமல்லி தழையை வைத்து பரிமாறவும். வெண்பொங்கலுடன் தண்ணீர் ஊற்றி மறுநாள் அந்த தண்ணீரை வடித்து எடுத்து அதை மோருக்கு பதிலாக அமர்த்தபலத்துடன் சேர்த்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்