வெஜிடபிள் கலவை கறி

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சௌசௌ - கால் கிலோ
பீன்ஸ் - கால் கிலோ
சேனைக்கிழங்கு - கால் கிலோ
கத்தரிக்காய் - கால் கிலோ
சிறிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
தேங்காய்ப்பால் - அரை கப்
நெய் - 4 மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் - 15
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்ற காய்களை கழுவி சுத்தம் செய்து இரண்டு அங்குல நீளத்துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் மிளகாய்வற்றல், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பெருங்காயத்தூள் போட்டு உருளைக்கிழங்கு தவிர மற்ற எல்லா காய்களையும் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடிவைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
நன்கு வெந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடிகளையும் போட்டு நன்கு கலக்கவும்.
அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்