கீமா பிரியாணி

தேதி: March 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மட்டன் கீமா - கால் கிலோ
பாசுமதி அரிசி - 2 டீ கப் (30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்தது)
பட்டை - ஒரு இன்ச் துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 3 அல்லது சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி


 

முதலில் நெய்யை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மேலும் வதக்கி கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் மட்டன் கீமா சேர்த்து சுமார் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
பின் அதில் ஊறவைத்து வடித்த அரிசி சேர்த்து கொதிக்க விடுங்கள்
ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு குறைந்த தீயில் 40 நிமிடம் வேக விடுங்கள்.
கடைசி 10 நிமிடத்திற்கு முன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடுங்கள்.
சுவையான கீமா பிரியாணி தயிர் சட்னியுடன் சூப்பராக இருக்கும்


இது பொதுவாக பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். எதுவும் வாயில் சிக்காமல் ப்ளையினாக மணமாக இருப்பதால் அவர்களுக்கு பிடிக்கும். ஒரு சிறிய குடும்பத்திற்கு பிரியாணி ஆசை வரும்போதெல்லாம் செய்து சாப்பிட எளிதானது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதனை கடைசியில் ரைஸ் குக்கரில் வைக்கலாமா?? இதுவரை திறந்த பாத்திரத்தில் பிரியாணி செய்ததில்லை...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் இதுவரை ரைஸ் குக்கரிலும் செய்ததில்லை..ஜலீலாக்கா மர்ழியால்லாம் ரைஸ் குக்கரில் தான் செய்வாங்களாம்..நான் ஸ்டிக் பெரிய பாத்திரத்தில் பிரியாணி இது போல சமைத்தால் சமமாக வேகும் அடிப்பிடிக்காது இலா

இலா வைக்கலாம் சூப்பரா வரும்..போடுங்க அதோட எனக்கு ஒரு பார்சல் பிளீஸ்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கீமா பிரியாணி ஒரு பார்சல் டோர் டெலிவரி மவுண்ட் ரோடுக்கு...
தேங்ஸ் ரூபி மர்லி... இதுவரை நான் மட்டன் பிரியாணியே செய்தது இல்லை... இந்த வாரம் 3 நாள் லீவு இருக்கு அதனால் செய்யலாம்ன்னு நினைக்கிறேன்.
கீமா மட்டனை விட சுலபமாக வேகுமா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அய்யோ சார்தா கண்ணு கோபம்லாம் இல்லை ஜோக்காதன் சொல்லி இருக்கேன்...அய்யோ இப்படி தப்பா எடுத்திட்டீங்களே மனசு கஸ்டமாகிட்டு போங்கப்பா..தலைப்பிலேயே ஈ ந்னு இழிச்சுட்டு இருக்கேன் பார்கலயா?

இலா ஆமாம் கீமா சிக்கனை போல ஈஸியா வேகும் ஆனால் நானும் இதுவரை கீமாவில் கிரேவிதான் செய்து இருக்கேன் பிரியாணி செயதது இல்லை..தளி புதுமையா யோசிக்குறே குட் குட்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹல்லோ மர்லியாவோட அக்கா பாருங்க , இந்த மர்லியா தங்கச்சியை கொஞ்சம் என்னன்னு கேளுங்க. விளையாட்டுக்கு சொன்னா கோபமா எழுதியிருக்கேன்னு சொல்றாங்க.
நீங்க இவங்களை தனியா கூப்பிட்டு ஒரு கதை சொல்லுங்க.

கீமா என்றால் கொந்திய கறியா? மர்லியா என்ன பண்றீங்க.

நீங்க ஆமாம் கொத்திய கறியைதான் இங்கு கீமான்னு சொல்லுறாங்க...ஆனால் இவ்வாறு செய்யுறப்ப ரொம்ப கொத்தி இருக்காம பார்த்துக்கனும் ஏன்னா சென்னையில் ரொம்ப கொத்திடுறாங்க..சார்தா பதில் போடுங்க ஏன் தப்பா எடுத்தீங்கன்னு?பேட் கேர்ள்

,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓஹ் கொத்தியிருப்பதால் சுலபமா வேகும்.ஆமாம் ரொம்ப பொடியா நறுக்கியிருந்தால் அதை கழுக முடியாது..நல்ல 6 முறையாவது கழுகி சுத்தமாக்கனும்..பொடியா இருந்தா வடிகட்டும் கண் வழியே ஒழுகி போய்விடும்..
மர்லி இது நான் கண்டுபுடிச்சதில்ல..என் நெயிபர் ஆன்டி சொல்லித் தந்தது..நல்லா இருந்தது..அவங்க நாம செய்யும் பிரியாணி மாதிரி அதிகம் செய்யாம சும்மா 1 கப் அரிசியால் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு செய்வாங்க...நானும் அதனால் இப்ப எதுவும் நியாபகம் வராட்டி உடனே 1 கப் அரிசி சேர்த்து கீமா பிரியாணி தான்.
இப்பப்ப பட்டை கிராம்பு கூட தாளிக்காம தக்காளிக்குப் பிறகு கரம் மசாலா தூள் சேர்த்து செய்வேன் மகளுக்கும் சாப்பிட ஈசி

சிலர் கறியை அதிகம் கழுவினால் சுவை போயிடும்னு கழுக மாட்டாங்க..எனக்கு அதை பார்த்தால் குமட்டும் அப்படி பட்ட வீட்டுக்கு போனால் அய்யோ கறியா எனக்கு பிடிக்காதே ஒன்லி வெஜ் தான்னு எஸ்கேப் :-)

அதிக சுத்தம் பார்ப்பேன் இந்த கறி விஷயத்தில்..யார் கழுகினாலும் அவங்க மனசு புண்படுமேன்னு சும்மா இருந்துட்டு அவங்க வெளியே போனதும் என் பங்குக்கும் நன்கு உற்று பார்த்து கழுகிடுவேன் அப்பதான் மனசு கேட்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இரண்டு மர்லியா அக்காக்களுக்கும் இதனால சொல்லிக்கிறேன் எனக்கு கோபமில்ல்லை இல்லவே இல்லை.
மர்லியா அக்கா பேரை கொஞ்சம் சொல்லுங்கப்பா. நான் நீங்க தான் விளையாடரீங்கன்னு நினைச்சு உங்க அக்கா த்ரெட் ஓபன் பண்ணிய போது "என்ன தசாவதராமா ந்னு கேட்டுட்டேன்.
இப்பதான் எனக்கு வெளங்குது.
மர்லியா உங்க மனசை கஷ்டப்படித்திருந்தா என்னை மன்னிசிடுங்க.

மர்ழியா கழுகலாம் ஒரு 6 அல்லது 8 தடவை மேக்சிமம்..அதுக்கு மேல கழுகினா சுவை போயி சக்கை போல ஆகிடும்..அதே போல் மீனும் வினேகர் எல்லம் போட்டு கழுகினா அதன் சுவையே கெட்டுவிடும்.
இங்கே கீமா ரொம்ப பொடியா இருக்கும்..அதனால் நான் கறி வாங்கி அதை கழுகிய பின் பொடியா நறுக்குவேன்.
என்டே பொன்னு ஷாரதே
மர்ழியாவாவது கோவமாவது..மர்ழி எழுத்தைக் கண்டால் என்ன ராக்காச்சி பொன்னோன்னு இருக்கும்..ஆனால் உண்மையில் ரொம்ப பஞ்ச பாவம்..வாயில் விரலை வச்சாலும் கடிக்க தெரியாது.டோன்ட் வரி

ஹா ஹா இபோதான் வாறேன்..சார்தா அது என் அக்கா..ஆமா தளி நானும் வாங்கி கழுவியபின் கட் பண்ணிட்டு ரிட்டன் ஒரு கழுகழுக்கு அப்புறம் ச்மைப்பேன்.ஆஆம் தளி கொஞ்சம் கையை தா அப்புறம் இப்படி சொல்லி..ஆமா அது என்னப்பா
ராக்காச்சி?

சார்தா என் அக்கா பெயர் பாத்திமா...என்னையும் அக்கான்னா சொல்லுறீங்க? வாங்க இந்த பக்கம்தானே ரெடியா இருக்கேன் உதைக்க...
தளி,கதீஜா,இலா,கே.ஆர் ஆப் லைன் செக் பண்னுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு