புரோக்கோலி (Broccoli)அவியல்

தேதி: March 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

புரோக்கோலி - ஒன்று (பெரியது (500 கிராம்)
மாஜரீன் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தண்ணீர் - அரை டம்ளர்


 

புரோக்கோலியை அப்படியே பெரிய பெரிய மொட்டாக தண்டுடன் வெட்டவும். கீழ்த் தண்டையும் பாதியாக பிளந்து வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்டுப்பகுதி கீழே நிற்கும் படியாக மொட்டுக்களை அடுக்கவும்.
உப்பைத் தண்ணீரில் கரைத்து விடவும். மாஜரீனையும் போட்டு மூடியால் மூடி அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்தபின், 5 நிமிடங்கள் அடுப்பில் விடவும். பின் அடுப்பை அணைக்கவும்.
மேலும் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் மூடியை நீக்கி விடவும். ஒரு தடவை மெதுவாக குலுக்கி, பிரட்டி விடவும்.
தொடர்ந்து மூடியபடி இருந்தால் அவிந்து கரைந்துவிடும், சுவை போய் விடும். கடும் பச்சை நிறமாக இருந்தால் தான் சுவையாக இருக்கும். ஆறியதும் சாப்பிடலாம்.


தண்டை மெதுவாக குத்திப் பார்த்தாலே தெரிந்து விடும், அவிந்துவிட்டதா என்று. இதை பச்சையாக கூட உண்கிறார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பெரும்பாலும் குழந்தைகள் மரக்கறிகளை விரும்பி உண்பதில்லை. அவர்களுக்கு, இதனை இதே முறையில் செய்து பின்னேரங்களில் உண்ணக் கொடுக்கலாம். பாலூட்டும் தாய்மார், கர்ப்பிணித் தாய்மாருக்கு இது மிகவும் நல்லது. வெளிநாடுகளில் குழந்தை வயிற்றிலிருக்கும்போது இதனை உண்ணும்படி வைத்தியசாலைகளிலேயே சொல்கிறார்கள்.
இதனை உண்பதனால் ஆண்களுக்கு வரும் Prostate Cancer ஐக் கூடத் தடை செய்யமுடியும் என்று மருத்துவ ஆராச்சிகள் கூறுகின்றன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்,

விற்றமின் B3 & C
வ்போலிக் அசிட்(Folic acid)
கல்சியம்
மக்னீசியம்
பொஸ்பரஸ்
பைவர்(Fibre)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் இரண்டு மாத கர்பினி பெண். நான் brocolli சாப்பிடலாமா?

can i cook it in pressure cooker and leave it for one whistle?

thanks,
Girija Sriram

உபயோகமான தகவல் அதிரா. நன்றி.

‍- இமா க்றிஸ்

அன்பு சகோதரி, மாஜரின் என்றால் என்ன? தயவுசெய்து விளக்கவும்? அது எங்கு கிடைக்கும்?

அன்பு சித்திரலேகா,
மாஜரின்(margarine) என்பது, எல்லாக் குறோசறிகளிலும் கிடைப்பதுதான்.bread க்கு போடுவோமே அதுதான். இதற்குப் பதில் butter கூட பாவிக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா உங்களுடைய குறிப்பில் புரோகோழி (Broccoli)அவியல் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷியந்தி மிக்க நன்றி. நான் அடிக்கடி செய்து பிள்ளைகளுக்கு கொடுப்பேன். இத்துடன் கிழங்கும் சேர்த்துச் செய்து பின்னேரங்களில் கொடுப்பேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,

உங்கள் சமையல் இதோடுதான் ஆரம்பம். இன்றுதான் பின்னூட்டம் தருகிறேன்.
நான் எப்பொழுதும் கொஞ்சம் உப்பு மட்டும் சேர்த்து அவிப்பேன். இம்முறை அதிராவுக்காக மாஜரீன் சேர்த்து அவித்தேன். :)
நன்றாக இருந்தது.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா, மிக்க நன்றி..சந்தோஷமாக இருக்கெனக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா! சமைத்து அசத்தலாம் பகுதியில் போடுவதற்காகத்தான். இந்த சுலபமான சமையலை தெரிவு செய்தேன். நீங்கள் சொன்ன முறைப்படி செய்தேன்
நன்றாக வந்தது. செய்வதும் சுலபம்., சுவையும் நன்று.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.