சுக்கு மல்லி காபி பொடி

தேதி: March 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

சுக்கு -- 50 கிராம்
மிளகு -- 15 கிராம்
சதகுப்பை -- 15 கிராம்
திப்பிலி -- 15 கிராம்
சித்தரத்தை -- 15 கிராம்
தேசாவரை குச்சி -- 15 கிராம்
கொத்தமல்லி -- 150 கிராம்
ஏலக்காய் -- 15 என்னம்


 

எல்லா பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து வைக்கவும். (அதை வெதுப்புவது என்பார்கள்)
சித்தரத்தை என்பது கட்டியாக இருக்கும், அதை வெதுப்பிய பின் நன்கு தட்டி உடைத்து நசுக்கியபின் பயன் படுத்தவேண்டும்.
பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவேண்டும்.
இது சுக்கு மல்லிகாபி பொடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hello Subha
Please advise what is சதகுப்பை & தேசாவரை குச்சி

Need more details. I am living in Australia

Thanks
Thangamani

God is great