www.arusuvai.com
சுக்கு மல்லி காபி பொடி
தலைவலி, உடல் சோர்வு, இருமல், தொண்டைவலி அனைத்தும் குணமாகும்.
தேவையானப் பொருட்கள்
- சுக்கு -- 50 கிராம்
- மிளகு -- 15 கிராம்
- சதகுப்பை -- 15 கிராம்
- திப்பிலி -- 15 கிராம்
- சித்தரத்தை -- 15 கிராம்
- தேசாவரை குச்சி -- 15 கிராம்
- கொத்தமல்லி -- 150 கிராம்
- ஏலக்காய் -- 15 என்னம்
செய்முறை
-
- எல்லா பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து வைக்கவும். (அதை வெதுப்புவது என்பார்கள்)
- சித்தரத்தை என்பது கட்டியாக இருக்கும், அதை வெதுப்பிய பின் நன்கு தட்டி உடைத்து நசுக்கியபின் பயன் படுத்தவேண்டும்.
- பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவேண்டும்.
- இது சுக்கு மல்லிகாபி பொடி.
-
-