அரேபியன் சாலட் & பிட்ஸா தோசை |
அறுசுவையில் 300க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலிலா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.
|
தேவையானப் பொருட்கள்
- சாலட் செய்வதற்கு:
- மையானிஸ் - ஒரு கப்
- முட்டை கோஸ் - அரை கப்
- கேரட் - கால் கப்
- லெட்யூஸ் இலை - ஒன்று
- ஒயிட் பெப்பர் - கால் தேக்கரண்டி
- உப்பு - கால் தேக்கர்ண்டி
- லெமென் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்
- அன்னாசிபழ துண்டு - அரை துண்டு
- கேப்ஸிகம் - ஒரு சிறிய துண்டு
- ====================
- பிட்ஸா தோசை செய்வதற்கு:
- தோசை மாவு - ஒரு கோப்பை
- பட்டர் - ஒரு தேக்கரண்டி
- குடைமிளகாய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- சோள மணிகள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- பட்டாணி - ஒரு டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - ஒன்று
- பூண்டு - மூன்று பல்
- தக்காளி - ஒன்று
- முட்டைக்கோசு - கால் கப்
- கேரட் - கால் கப்
- உப்பு - அரை தேக்கரண்டி
- சர்க்கரை - ஒரு பின்ச்
- சோயா சாஸ் - ஒரு துளி
- சில்லி சாஸ் - ஒரு துளி
- டொமேட்டொ கெட்சப் - தேவைக்கு
- துருவிய சீஸ் - தேவைக்கு
- ஒயிட் பெப்பர் - ஒரு பின்ச்
|
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். கேப்ஸிகம், அன்னாசி பழத்துண்டு பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலும் செய்யலாம்.
|
 |
அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி அதில் உப்பு, லெமென் ஜூஸ், ஒயிட் பெப்பர் சேர்த்து, மையானிஸையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
|
 |
இது பிரியாணிக்கு ஏற்றது, பரோட்டாவிற்கும் சாப்பிடலாம். மற்றபடி பிரெட், பன் போன்றவைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். சுவையானா அரேபியன் சாலட் ரெடி.
|
 |
இப்போது பிட்ஸா தோசை செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். காய்கறிகளை பொடியாக துருவி கொள்ளவும்.
|
 |
ஒரு பேனை காய வைத்து அதில் பட்டர் உருக்கி நறுக்கின வெங்காயம், குடைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
|
 |
பிறகு அனைத்து காய்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு லேசாக இரண்டு நிமிடம் வதக்கவும். அத்துடன் சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு, வொயிட் பெப்பர், சர்க்கரை போட்டு வதக்கவும்.
|
 |
இப்போது பிட்ஸா தோசைக்கு தேவையான தோசை மாவு, டொமேட்டோ கெட்சப், துருவிய சீஸ், வதக்கிய காய்கறி கலவை அனைத்தும் தயார்.
|
 |
தோசை மாவை ஊற்றி வட்ட வடிவமாக சுழற்றி தீயை சிம்மில் வைக்கவும். அதன் மேலே வதக்கிய காய்கறி கலவையை பரவலாக தூவி சமப்படுத்தவும்.
|
 |
டொமேட்டோ கெட்சப்பை அங்காங்கே தெளித்து சீஸை தூவி ஒரு தேக்கரண்டி பட்டர் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
|
 |
சுவையான பிட்ஸா தோசை ரெடி. தோசையை அப்படியே மடித்து மூன்றாக கட் பண்ணியும் சாப்பிடலாம்.
|
 |
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -