www.arusuvai.com
சிலிப்பி குடல் சூப்
அம்மை போட்ட சமயங்களில் இது செய்து தருவார்கள.
உடல் சூட்டை தணிக்கக்கூடியது.
தேவையானப் பொருட்கள்
- சிலிப்பி குடல் -- 1 கப்
- விளக்கெண்ணைய் -- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் -- 10 என்னம் (தட்டிப் போடவும்)
- மிளகுத்தூள் -- 3 சிட்டிகை
செய்முறை
-
-
- குக்கரில் கழுவி சுத்தம் செய்த சிலிப்பி குடலை போட்டு அதனுடன் விளக்கெண்ணைய், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் அனைத்தயும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் அதிகமான அளவு ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
- பின் குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பின் 3 விசில் வந்ததும், நிறுத்தி இறக்கவும்.
- பின் சூப்பை பரிமாறும் போது மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
- ரெடி.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
15 min |
15 min |