மணத்தக்காளி கீரை கூட்டு

தேதி: March 24, 2008

பரிமாறும் அளவு: 3 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு
பாசி பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 50 கிராம்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - மூன்று பல் (தட்டி கொள்ளவும்)
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரன்டி
துருவிய தேங்காய் - இரண்டு மேசைக்கரண்டி


 

மணத்தக்காளி கீரையை சுத்தமாக மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
பாசி பருப்பை லேசாக வறுத்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் பாசி பருப்பையும், கீரையையும் போட்டு மஞ்சள் பொடி, கால் தேக்கரன்டி உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் போட்டு பூண்டையும், காய்ந்த மிளகாயையும் தட்டி போட்டு வதக்கி சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
பிறகு உப்பு அரை தேக்கரண்டி, தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து துருவிய தேங்காயையும் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு நெய் விட்டு கிளறி விட்டு இறக்கவும்.


இது வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும், பிள்ளை பெற்றவர்களுக்கும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஜலீலா,
எப்படி இருக்கிறீர்கள்? நான் செடியிலிருந்துதான் கீரை பிடுங்கப் போகிறேன். கட்டுக்குச் சமனாக வேறு ஏதாவது அளவு சொல்லுங்களேன். (கப் / கிராம்)
நன்றி
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

டியர் இமா எப்படி இருக்கீங்க நலமா?
ஒரு கட்டு டம்ளர் என்றால் ஒன்று, கப் என்றால் இரண்டு.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா, நான் நலம். சட்டென்று வந்து பதில் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி. விரைவில் உங்கள் குறிப்பை முயற்சித்து விட்டு எப்படி வந்தது என்று சொல்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்