www.arusuvai.com
மணத்தக்காளி கீரை கூட்டு
இது வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும், பிள்ளை பெற்றவர்களுக்கும் நல்லது.
தேவையானப் பொருட்கள்
- மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு
- பாசி பருப்பு - ஐம்பது கிராம்
- சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
- தக்காளி - ஐம்பது கிராம்
- எண்ணை - ஒரு தேக்கரண்டி
- நெய் - ஒரு தேக்கரண்டி
- காஞ்ச மிளகாய் - முன்று
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- பூண்டு - முன்று பல் (தட்டி கொள்ளவும்)
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால்தேக்கரண்டி
- உப்பு - முக்கால் தேக்கரன்டி
- தேங்காய் துருவியது - இரண்டு மேசை கரண்டி
செய்முறை
- மணத்தக்காளி கீரையை சுத்தமாக மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- பாசி பருப்பை லேசாக வருத்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
- குக்கரில் பாசிபருப்பையும், கீரையையும் போட்டு மஞ்சள் பொடி, கால் தேக்கரன்டி
- உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைகவும்.
- ஒரு வானலியில் எண்ணையை ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு,சீரகம்,வெந்தயம் போட்டு பூண்டையும்,காஞ்ச மிளகாயையும் தட்டி போட்டு வதக்கி சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பிறகு உப்பு அரை தேக்கரண்டி, தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து துருவிய தேங்காயையும் சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு நெய் விட்டு கிளறி விட்டு இரக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 person |
15 min |
20 min |