உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சுறா புட்டு

 


தேவையானப் பொருட்கள்

  • சுறா- 1/4 கிலோ
  • பச்சை மிளகாய்- 5
  • பட்டை- 1
  • சோம்பு- 1 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம்- 1
  • இஞ்சி- 1 அங்குளம்

செய்முறை

  • சுறாவை குக்கரில் வேக வைக்கவும்.பின்னர் ஆறியவுடன் உதிர்த்து விடவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி விடவும்.
  • வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்தவுடன் பட்டை சோம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சியை நறுக்கி தட்டி போட்டு வதக்கி உதிர்த்த சுறாவை போட்டு நன்றாக கலக்கவும்.
  • சிறிது நேரம் வதக்கிய பின் இறக்கவும். சுறா புட்டு தயார். தேவையென்றால் மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

குறிப்பு:

சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 / 3 நபர்களுக்கு 15 - 20 நிமிடங்கள்
  random food image


comments