தேவையானப் பொருட்கள்
- சுறா - 1/4 கிலோ
- பச்சை மிளகாய் - 5
- பட்டை - 1
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி - 1 அங்குலம்
செய்முறை
- சுறாவை குக்கரில் வேக வைக்கவும். பின்னர் ஆறியவுடன் உதிர்த்து விடவும்.
- பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி விடவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை, சோம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சியை நறுக்கி தட்டி போட்டு வதக்கி உதிர்த்த சுறாவை போட்டு நன்றாக கலக்கவும்.
- சிறிது நேரம் வதக்கிய பின் இறக்கவும். சுறா புட்டு தயார். தேவையென்றால் மல்லித்தழை தூவி பரிமாறலாம்.
குறிப்பு
சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
2 - 3 நபர்களுக்கு |
15 - 20 நிமிடங்கள் |