அழகிய கிப்ட் பாக்ஸ் செய்வது எப்படி?

தேதி: March 24, 2008

5
Average: 4.4 (5 votes)

அழகிய கிப்ட் பாக்ஸ் செய்வது எப்படி என்பது இங்கே படங்களுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

சார்ட்
கோல்டன் ரிப்பன்
க்ரேப் பேப்பர்
கத்திரிக்கோல்
சின்ன ரோஜா பூ
கம்
பெவிக்கால்

 

கிப்ட் பாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து கொள்ளவும். பாக்ஸின் மேல் பகுதி செய்ய 20 செ.மீ சதுரத்திற்கும், கீழ்பகுதி செய்ய 18 செ.மீ சதுரத்திற்கும் அட்டையை கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
சதுரமாக வெட்டி வைத்துள்ள சார்ட்டை நான்காக மடக்கிக்கொள்ளவும். மடக்கிய சார்ட்டை விரித்தால் அதில் நான்கு சதுரங்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு சதுரத்தையும் உள்ளே மடக்கி நான்கு முனைகளும் ஒன்றாக ஒரே இடத்தில் சேரும்படி மடக்கிக் கொள்ளவும்.
பிறகு படத்தில் உள்ளபடி இரண்டு முறை மடித்துக் கொள்ளவும். நான்கு மடிப்புகள் வரும்.
அதை மீண்டும் விரித்தால் நான்கு சதுரங்கள் கிடைக்கும். அதில் ஒவ்வொரு சதுரத்தையும் உள்வழியாக நான்கு முனைகளும் ஒன்று சேரும்படி மடிக்கவும்.
பிறகு மடித்தவற்றை விரித்து மேலே இருக்கும் முக்கோணம் போன்ற பகுதியில் நடுபகுதியை கத்திரிக்கோலால் வெட்டவும்.
ஒவ்வொரு முக்கோணமும் இரண்டாக பிரிந்து இருக்கும். அதன் ஒவ்வொரு முனையையும் மடக்கி மீண்டும் ஒரு முக்கோணமாக போல் செய்துக் கொள்ளவும். (படத்தில் உள்ளபடி)
இதே போல் வெட்டிய நான்கு முக்கோணத்தையும் மடக்கி 8 முக்கோணங்களாக ஆக்கிக் கொள்ளவும்.
எதிர் எதிரே உள்ள ஏதேனும் இரண்டு பக்கத்தை விரித்து விடவும். விரித்த இரண்டு பக்கங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று முக்கோணங்கள் இருக்கும். அதில் நடுப்பகுதியில் இருக்கும் எதிரெதிராய் உள்ள இரண்டு முக்கோணத்தை உள்பக்கமாக மடக்கவும். அதே போல் மற்றொரு பக்கத்தையும் மடக்கிக் கொள்ளவும்.
விரித்த இரண்டு பகுதியில் முதலில் ஒரு பகுதியை எடுத்து விரிக்காத பகுதியின் ஒரு புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் முக்கோண பகுதியை விரலால் உள்ளே வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடக்கிக் கொள்ளவும். அதைப் போல் மற்றொரு பகுதியிலும் மடக்கிக் கொள்ளவும். இப்போது பாக்ஸ் தயார்.
பாக்ஸ் ரெடியானதும் அடியில் தேவையான அளவு க்ரேப் பேப்பரை வைத்து அதன் மேல் பாக்ஸை வைத்து பேப்பரை மடக்கி கம் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
பாக்ஸை அலங்கரிக்க அதன் மீது கோல்டன் ரிப்பன் மற்றும் ரோஸ் வைத்து ஒட்டவும். இப்போது நாம் செய்தது கிப்ட் பாக்ஸின் மேல் பகுதி. இதைப் போல் கீழ் பகுதியும்(18 செ.மீ) செய்துக் கொண்டு அதில் கிரேப் பேப்பர் ஒட்டிக் கொள்ளவும்.
மிகவும் எளிதில் செய்யக் கூடிய அழகிய கிப்ட் பாக்ஸ் ரெடி. அடுத்த முறை நண்பர்களுக்கு கிப்ட் வழங்கும்போது இது போன்ற பெட்டியில் வைத்து வழங்கிடுங்கள். இந்த அழகிய கிப்ட் பாக்ஸை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகிய பெட்டியை செய்து காண்பித்தவர் யார் என்று சொல்லுங்களேன்

கிஃப்ட் பாக்ஸ்
ஆ சூப்பர் யாருப்பா இத செஞ்சீங்க சீகிரம் சொல்லுங்க, நிறைய ரெஸிபி பெயர் இல்லாமல் இருக்கு, பெயர் கொடுத்தால் தான் பின்னூட்டம் அனுப்ப வசதியா இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

இந்த கிப்ட் பாக்ஸினை செய்து காட்டியவர் செல்வி சிந்து அவர்கள். ஏற்கனவே வெளியாகியுள்ள தஞ்சாவூர் பாட் பெயிண்டிங்கை செய்து காட்டியவரும் இவரே. இவர் இது போன்ற கைவினைப்பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருபவர்.

நம்ம அழகுக் குறிப்பு தரும் சிந்துவா?சிந்து எங்கம்மா நீங்க?

இந்த சிந்து வேறு ஒருவர். இவர் நாகையில் வசிப்பவர். அவர் இலங்கையில் வசிக்கின்றார்.

ஹாய் சிந்து,
உங்கள் குறிப்பைப் பார்த்து இதே போல் கிஃப்ட் பாக்ஸ் செய்தேன். அழகாக வந்தது. ;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

--

இந்தப் படங்களையும் இன்று க்ளோஸ்ட் க்ரூப்பில் இணைத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

அழகா இருக்கு பாக்ஸ். வாழ்த்துக்கள்.
பார்க்கும் படி செய்த இமா ஆன்டிக்கு நன்றி.

Kalai

i did the box it very easy to make with help of ur instruction thank you friend

கடமையை என‌ செய்தால் வெற்றீ கிடைக்கும்
கடமையே என‌ செய்தால் தோல்வி கிடைக்கும்