தேவையானப் பொருட்கள்
- பாலக் - 1 கட்டு(உள்ளங்கைய்யால் தண்டுபகுதியை பிடிக்க முடியுமளவு கட்டு)
- துவரம் பருப்பு - 1/4 கப்
- தேங்காய்ப் பால் அல்லது தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 1
- ஜீரகம் - 1/2 ஸ்பூன்
செய்முறை
- இப்பொழுது பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
-
- பின் அதில் அரிந்த பாலக் கீரையை சேர்த்து 5 நிமிடம் வேக விடுங்கள்..
-
- பின் தேங்காயையும் ,சின்ன வெங்காயம்,ஜீரகம் சேர்த்து மைய்யாக அரைத்து வெந்த பருப்பு கீரையுடன் சேர்த்து மேலும் 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
-
- இதற்கு தாளிப்பு கூட தேவையில்லை.
-
- குழம்பு போல் வேண்டுமானால் தேங்காய்பாலை கொஞ்சம் கூடுதல் சேர்த்துக் கொள்ளுங்கள்,எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து ஊற்றுங்கள்.
-
- இது கொஞ்சம் கெட்டியாக கூட்டு போல் இருக்க வேண்டும்
குறிப்பு
சிறு குழந்தைகளுக்கு ப்லென்டரில் இட்டு ஒரு சுற்று சுற்றி சாதத்துடன் பிசைந்து கொடுங்கள்.கான்ஸ்டிபேஷன் ப்ரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுத்தால் நல்ல பலன் தெரியும்