சிக்கன் கீமா பிரெட் டோஸ்ட்

தேதி: March 25, 2008

பரிமாறும் அளவு: 6 kids

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பிரெட் ஸ்லைஸ் - 12
சிக்கன் - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கால் கட்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி


 

சிக்கன் தனியாக வேகவைக்கவும்
சிக்கனில் அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், அரை தேக்கரண்டி மிளகு தூள், உப்பு கால் தேக்கரண்டி போட்டு நன்கு வேகவைத்து பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மீதி உப்பு, கரம் மசாலா தூள் போட்டு நன்கு கிளறி, சிக்கன் பொடித்ததை சேர்த்து கொத்தமல்லி தழையையும் சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
இது டோஸ்டரில் செய்வது:
இரண்டு ப்ரெட்டை எடுத்து அதில் சிக்கன் கலவையை பரவலாக வைத்து டோஸ்டரில் மேலும் கீழும் பட்டர் தடவி டோஸ்டரை மூடவும். இரண்டு நிமிடத்தில் வெந்து நல்ல க்ரிஸ்பியாக வரும்.


இது பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். காலை மாலை டிபனாகவும் சாப்பிடலாம். டூருக்கும் எடுத்து செல்லலாம்.
குழந்தைகளுக்கு சிக்கன் டோஸ்ட் என்றால் ரொம்ப பிடிக்கும். டோஸ்டர் இல்லாதவர்கள் தோசை தவாவில் பட்டர் போட்டு இரண்டு பிரெட்டையும் தனித்தனியாக லேசாக பொரித்தெடுத்து வெஜ் கலவையை பரவலாக வைத்து நல்ல அழுத்தி விட்டு மறுபடியும் இரண்டு பக்கம் மட்டும் பொன்முறுவலாக பொரித்தெடுத்து சாப்பிடவும்

மேலும் சில குறிப்புகள்