வெஜ் ப்ரெட் டோஸ்ட்

தேதி: March 25, 2008

பரிமாறும் அளவு: 6 kids

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ப்ரெட் ஸ்லைஸ் - 12
காய் வேக வைக்க:
உருளைக்கிழங்கு - ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பீன்ஸ் - நான்கு (பொடியாக நறிக்கிக் கொள்ளவும்)
ஃப்ரோஸன் பட்டாணி - ஒரு டேபிள் ஸ்பூன்
ஃப்ரோஸன் கார்ன் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - ஒரு தேக்கரண்டி
வதக்கி கொள்ள:
வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கால் கட்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி


 

காய்களை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி தீயை சிம்மில் வைத்து ஏழு நிமிடம் வேக வைக்கவும். அதற்குள் தண்ணீர் சுருண்டு விடும் இல்லை என்றால் தண்ணீரை வற்ற விட்டு கொள்ள வேண்டியது.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், மீதி உப்பு, கரம் மசாலா போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி தழை, வெந்து சுருண்ட காய்கறிகள் சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
இது பிரெட் டோஸ்டரில் செய்வது:
இரண்டு ப்ரெட்டை எடுத்து அதில் காய்கறி கலவையை பரவலாக வைத்து டோஸ்டரில் மேலும் கீழும் பட்டர் தடவி டோஸ்டரை மூடவும். இரண்டு நிமிடத்தில் வெந்து நல்ல க்ரிஸ்பியாக வரும்.


இது பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். காலை, மாலை டிபனாகவும் சாப்பிடலாம். டூருக்கும் எடுத்து செல்லலாம்
டோஸ்டர் இல்லாதவர்கள் தோசை தவ்வாவில் பட்டர் போட்டு இரண்டு ப்ரெட்டையும் தனித்தனியாக லேசாக பொரித்தெடுத்து வெஜ் கலவையை பரவலாக வைத்து நன்கு அழுத்தி விட்டு மறுபடியும் இரண்டு பக்கம் மட்டும் பொன்முருகலாக பொரித்தெடுத்து சாப்பிடவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

குறிப்பை பார்த்த உடனே நாக்கு ஊருது ஜலீலாக்கா

அஸ்ஸலாமு அலைக்கும்

செப்ம்பருத்தி பூவே, சித்திரத்தை போல
என்ன கே ஆர் கரெக்ட்டா
நாவில் நீர் ஊருது என்று சொல்லகூடாது , போங்க உடனே செய்யுங்கள்.
செய்து உங்க கூட ஒரு வாண்டு இருக்காரே அவருக்கு கொடுங்க டெய்லி கேட்பார்.
ஜலீலா

Jaleelakamal

நான் நேற்றிலிருந்து பாக்ரேன்,எனக்கு மட்டும் பதில் போடரது இல்லை,ஜலீலாகா,உங்ககிட்ட நான் டூ.........கண்ணில் இருந்து கண்ணீரா கொட்டுது.........

அடடா கண்ணை தொடச்சிங்க, எவ்வளவு கன்ணீர் என்னுடைய கர்சீப் போதுமா, (அ) சுடிதார் துப்பட்டா வேனுமா?
நான் தான் பதில் போட்டுள்ளேனே. ஒரு சிரிய குழப்பம், கே ஆர் , செம்பருத்தியும் ஒன்றா ?
புரியலப்பா ஆகையால் தான் மாற்றி மற்றி பதில் போடுகிறேன், செம்பருத்தி மலேஷியாவில் அப்ப நீங்க சாரிப்பா நான் வேணும் நா முட்டி போடட்டுமா?

ஜலீலா

Jaleelakamal

இல்லைக்கா,இந்த கண்ணீரை துடைக்க ஒரு 16 கஜ சேலை வேணும்.நான் ஒரு பூவும் இல்லை.அவுங்க வேற,நான் வேற
அவருக்கு இல்லை,அவளுக்கு,,,,,எனக்கு மகள் தான் இருக்கிராள்.அவளும் உங்க இந்த பிரட் ரெசிப்பி சாப்பிட இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகும்.இப்போ தான் 10 மாதம். நாங்க செஞ்சி சாபிடரோம்,
அக்கா,பிளீஸ் என்னை வா,போ என்றோ கூப்பிடுங்கள்.சரியா?இல்லேனா நான் மறுபடியும் அலுவேன்.

இது எல்லோருக்கும் மரியதை கொடுத்து பேசுவது என் பழக்கம் இது தொட்டில் பழக்கம் தீடீருன்ன்னு மற்றமுடியாது.

நீங்க ஊரையாவது சொல்லனும், இல்லை பேரையாயாவது சொல்லனும்.
இப்படி கே ஆர் என்றால் எப்படி ஞாபகம் இருக்கும்.
ஆனா நெஜமாவே அழுது கே ஆர் விஜியான்னு நிரூபிச்சிட்டீங்க அஹா ஆஹா
ஜலீலாதீடீருன்ன்னு மற்றமுடியாது.

நீங்க ஊரையாவது சொல்லனும், இல்லை பேரையாயாவது சொல்லனும்.
இப்படி கே ஆர் என்றால் எப்படி ஞாபகம் இருக்கும்.
ஆனா நெஜமாவே அழுது கே ஆர் விஜியான்னு நிரூபிச்சிட்டீங்க அஹா ஆஹா
ஜலீலா

Jaleelakamal

இது எல்லோருக்கும் மரியதை கொடுத்து பேசுவது என் பழக்கம் இது தொட்டில் பழக்கம் தீடீருன்ன்னு மற்றமுடியாது.

நீங்க ஊரையாவது சொல்லனும், இல்லை பேரையாயாவது சொல்லனும்.
இப்படி கே ஆர் என்றால் எப்படி ஞாபகம் இருக்கும்.

ஆனா நெஜமாவே அழுது கே ஆர் விஜியான்னு நிரூபிச்சிட்டீங்க

அஹா ஆஹா
Jaleela

Jaleelakamal

ரொம்பவே சிரித்துவிடேன்,எனக்கு ரூபி,ஹிபா என்று பேர் வச்சிருக்காங்க,அப்படியே கூபிடுங்க.சரியா?ஊர் கோயம்புத்துருங்கோ!

ஏனுங்க அம்மணி நீங்க கோயப்புத்துருங்கலோ,தெரியாம சொல்லி புட்டங்கோய் ,
இனி அப்படியே கூப்பிடுறங்கோய்,
ஹிபா அன்பு தங்கையேயே யே
உங்க பெண்ணு நலமாங்கோய் /

//ஆஹா ஆஹா இத படித்து விட்டு இன்னும் சிரிங்க //

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா,
நேற்று இந்த சான்ட்விச் செய்தேன். சுவையாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்