மொறு மொறு வெண்டைக்காய்

தேதி: March 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையானது
தாய் தென்புரா மாவு (அ) கார்ன் ப்ளார் மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்


 

வெண்டைக்காயை கழுவி விட்டு ஒரு இன்ச் நீளத்துக்கு ஒரே சீராக வெட்டி கொள்ளவும்.
வெட்டிய வெண்டைக்காயில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தென்புரா மாவு (அ) கார்ன் ஃப்ளார் மாவு போட்டு நன்கு பிரட்டி கால் மணி நேரம் ஊற விடவும்.
பிறகு எண்ணெயை காய வைத்து மொத்தமாக அள்ளி போடமால் தனித்தனியாக போட்டு நல்ல மொறுகலானதும் எடுத்து எண்ணெயை வடித்து சாப்பிடவும்.


இது தயிர் சாதத்திற்கு ரொம்ப நன்றாக இருக்கும். எங்க வீட்டில் பொரிக்கும் போது சும்மாவே உள்ள போய்விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தாய் தென்புரா மாவா....அது என்ன ஜலீலாக்கா?

ஜலீஜா.....மொறு மொறு வெண்டைக்காயை படிக்கும்போதே தெரிகிறது நன்றாக இருக்கும் என்று. ஒரு ஸ்மால் சஜஷன்...சொல்லலாமா? வெண்டைக்காயை தீக்குச்சி சைஸுக்கு (ஃபிங்கர் சிப்ஸ் போல ) நீள நீளமாக நறுக்கி பொரித்து எடுத்தால் சீக்கிரமாகவும் பொரியும் எண்ணெயும் குறைவாக செலவாகும். என்ன.... நான் சொல்வது சரியா ஜலீலா?

ஜலீலாக்கா,இங்க எனக்கு frozen வென்டைக்காய் தான் கிடைக்கும்.அதில் செய்ய முடியுமா? (தாய் தென்புரா மாவு) இது cornflour தானே?

ஹிபா கரெக்ட்டா இனி பெயர் மாறாது, கே ஆரை எடுத்து விட்டு உங்க மகள் பெயரையாவது போடுங்கள்,
அதுவும் கார்ன் மாவு மாதிரி தான். புரோஜன் தெரியல, ஆனால் ரொம்ப நேரம் போட்டு விடவேண்டாம் கொழ கொழ என் ஆகிவிட போகுது, உடனே மசாலா போட்டு சிரிதுநேரம் ஊறியதும் உட்னே பொரித்து விடுங்கள், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் போடுங்கள் அகலமான ஆப்ப கிடாய் மாதிரி என்றால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

சரி அக்கா,அப்படியே ஆகட்டும்.
அக்கா.இப்போ தான் இங்க ஏதோ போனா போகுதுனு கொஞ்சம் வெயில் எட்டி பார்க்குது.அதனாலே ஆத்திக்காவை ஒரு குட்டி ரவுன்டு கூட்டிட்டு போறேன்,மீண்டும் நாளை சந்திக்கும் வரை பைய்-பைய்.