உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

எக் ஃபிரைடு ரைஸ்


ரெஸ்டாரெண்ட்களில் வாங்கும் ஃபிரைடு ரைஸில் சாதத்தை விட காய்கறிகளின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். இது போல் நாம் வீட்டில் செய்தால் நிறைய காய்களின் சத்தும் கிடைக்கும். அதே சமயத்தில் சுவையானதாகவும் இருக்கும். இது குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

தேவையானப் பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி - 350 கிராம்
  • முட்டை - 2
  • கோஸ் - 1/2 கப்
  • கேரட் - 1/2 கப்
  • பீன்ஸ் - 5
  • குடை மிளகாய் - 1
  • பெரிய வெங்காயம் - 1/2
  • ஸ்பிரிங் ஆனியன் - 1
  • பேபிகார்ன் - 5
  • ஆப்பிள் தக்காளி - 1/2
  • பச்சை மிளகாய் - 2
  • வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி
  • சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • மல்லி இலை - சிறிதளவு
கால் மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு என தண்ணீர் ஊற்றி உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, உதிரியாக ஆற வைக்கவும். கேரட்டை சற்று பெரிதாக துருவிக் கொள்ளவும். கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் சன்னமாக நறுக்கவும். பீன்ஸ், ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், பச்சை மிளகாய் ஆகியவற்றை சன்னமாக(வட்டமாகவும்) நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நீட்டமாக நறுக்கவும். (தக்காளியை நறுக்கிய பிறகு உள்ளே இருக்கும் ஜூஸ் மற்றும் விதை பகுதியை நீக்கி விடவும்.)
step 1
வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி, சூடாக்கி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து துருவல் போல் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
step 2
மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பீன்ஸை 1 நிமிடம் வதக்கி வைத்துக் கொள்ளவும்.
step 3
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
step 4
பிறகு ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், கோஸ், கேரட் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். ஒவ்வொன்றையும் சிறிது நேரம் வதக்கி பின்னர் அடுத்த பொருளை சேர்க்கவும்.
step 5
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.
step 6
அதன் பிறகு பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு முறை வதக்கி அஜினோமோட்டோ, சோயா சாஸ் சேர்க்கவும்.
step 7
இறுதியாக மீதியுள்ள உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
step 8
இந்த கலவையை சாதத்துடன் கலந்து(அதிகம் கிளர வேண்டாம்) பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி மூடி வைத்து குறைவான தீயில் 3 அல்லது 4 நிமிடம் வைக்கவும். இதற்கு மூடியுடன் கூடிய பாத்திரமாக இருந்தால் நன்று. இல்லையென்றாலும் பரவாயில்லை.
step 9
இப்போது சுவையான வெஜிடபிள் எக் ஃபிரைடு ரைஸ் ரெடி. கெட்சப் அல்லது டொமெட்டொ சாஸுடன் பரிமாறவும். இதில் பொடியாக பிரித்து எடுத்த காலிபிளவர், வேக வைத்த பட்டாணி, பீட்ரூட் போன்றவையும் சேர்க்கலாம். பீட்ரூட் சேர்க்கும் போது சாதத்தின் நிறம் மாறிவிடும். பிடிக்காதவர்கள் சேர்க்காமல் செய்யலாம்.
step 10
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் தயாரிப்பு இந்த ப்ரைடு ரைஸ்.
step 11


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
விளம்பரங்களுக்கும் இடம் கொடுங்க
மார்ச் 25, 2008 - 4:01am - வழங்கியவர் malathi

அட!.... யாரும் சமைக்கலாம் பகுதியில் அதற்குள் மற்றுமொறு புதிய குறிப்பா? கிட்டதட்ட டெய்லி புதுசு புதுசாக பட விளக்கத்துடன் கிடைக்கிறதே! அருசுவை பழையபடி நல்ல சுறுசுறுப்புடன் செயல்படத்தொடங்கிவிட்டது. நிறைய விளம்பரங்களுக்கும் இடம் தாருங்கள். அப்பதான் கட்டுபடியாகும்.

விளம்பரங்கள்
மார்ச் 25, 2008 - 4:29am - வழங்கியவர் admin

நன்றி சகோதரி. பார்வையாளர்களுக்கு தொந்திரவு கொடுக்காத அளவிற்கு விளம்பரங்கள் அறுசுவையில் வெளியாகும். தனி விளம்பரங்கள் கிடைக்கப்பெறும் வரை கூகிள் வழி விளம்பரங்கள் வெளியாகும். இவற்றின் மூலம் பெரிதாக வருமானம் கிடைக்காது. தற்போதைய சர்வருக்கு மாதம் செலுத்தும் தொகையில் பாதி கிடைத்தாலே பெரிய விசயம். இருந்தாலும், ஒன்றுமே இல்லாத இடத்தில் ஏதேனும் ஒரு வருமானம் என்ற அளவிற்கு இது பயன்படும். இதனைப் பார்த்து நேரடி விளம்பரம் தர பல நிறுவனங்கள் முன்வரும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. பார்க்கலாம்.

விளம்பரத்திற்கு அணுகலாமே
மார்ச் 25, 2008 - 5:00am - வழங்கியவர் malathi

இப்ப அருசுவையின் பார்வையாளர்களும் பங்களிப்பாளர்களும் அதிகமாகிவிட்டார்கள். ஸோ, நீங்க விளம்பரங்களை தாராளமாக அதிகப்படுத்தலாம். நேரடி விளம்பரங்களுக்கு நீங்க கம்பெனிகளை அணுகலாமே. உங்கள் ஊரில் உள்ள லோக்கல் கம்பெனிகள், மற்றும் ஹோட்டல்கள், சுத்தப்படுத்திய குடிநீர், ஊறுகாய், ஸ்வீட் ஸ்டால், பொடி வகைகள் தயாரிக்கும் கம்பெனிகளை அணுகி கேட்கலாமே. எந்த நிறுவனத்தையும் சேவையாக கருதி நடத்த முடியாது அல்லவா?

முயற்சி எடுத்து வருகின்றோம்.
மார்ச் 25, 2008 - 7:11am - வழங்கியவர் admin

தனி விளம்பரங்கள் பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டோம். கடந்த மாதங்களில் தொடர்ந்து இருந்து வந்த சர்வர் பிரச்சனையால், மற்ற விசயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது நிலைமை பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் பல்வேறு நிறுவனங்களை விளம்பரத்திற்காக அணுகியுள்ளோம். நிறைய பேர் ஆதரவும் தந்திருக்கின்றார்கள். சந்தைக்கு புதுசு பகுதியே ஒரு விளம்பர பகுதிதான். விரைவில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Hi Maha
மே 19, 2008 - 7:48am - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
Tried your fried rice and came out very well. Thanks to your clear explanations.

Hi Sri geetha
நவம்பர் 5, 2008 - 4:14am - வழங்கியவர் radhika_padma

very happy to see u in arusuvai.com.. just 2 months b4 i got married and learning cooking for the past two moths.. i just want to cook something with egg so verified this site and after seeing ur photo i was surprised really... Hope u might remember me...(12th std b-Radhika G(indhu's friend)

The recipie is really very useful, i will tel my opinion once i tried this. bye..