முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு

தேதி: March 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

முருங்கைக்காய் - 2
தேங்காய் - அரை கப்
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி,
சின்னவெங்காயம் - 8
பாசிப்பருப்பு - கால் கப்
தாளிக்கும் வடகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

முதலில் பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய வெங்காயம் தாளித்து முருங்கைக்காயை போட்டு வேக விடவும்.
காய் வெந்ததும் வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து வேக விடவும்.
கொதித்து கூட்டு போல வந்ததும் கடைசியாக எண்ணெயில் வடகத்தை தாளித்து கொட்டி இறக்கவும்.


இந்த பொரிச்சக் குழம்பு சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சாதத்தில் கொஞ்சம் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த பொரிச்சகுழம்பில் முருங்கைக்காயுடன் 10 பலாக்கொட்டையையும் இரண்டாக நறுக்கி வேக வைத்து சேர்த்து சமைத்தால் அதன் ருசியே தனிதான். இதற்கு தொட்டுக்கொள்ள மீன் வறுவல் நல்ல காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த பொரிச்சக் குழம்பில் நீங்க சொல்வது போல் பலாக்கொட்டையும் சேர்த்து செய்தேன். நல்ல இருந்தது சுறாகுழம்புக்கும், இந்த கூட்டுக்கும் சுவை டாப்பா இருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

காரம் அதிகம் சாப்பிட்டு பழகாத நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பொரிச்சக்குழம்பு ரொம்ப பிடிக்கும்.. சாதத்தில் நெய்யும் பொரிச்சகுழம்பும் ஊற்றி பிசைந்து ஊட்டி விட்டு பாருங்களேன், விரும்பி சாப்பிடுவார்கள்....
தனிஷா..!! பலாக்கொட்டையும் கிடைத்து செய்தது சுவையை அதிகப்படுத்தி இருக்கும்....நன்றி...!!

ஆமா அக்கா என் மகளுக்கும் ஊட்டி விட்டேன். அவளுக்காக பொதுவாக இப்போது எல்லாத்திலேயும் காரம் குறைத்து விடுவேன். கணவருக்கும் மிக பிடித்து இருந்தது. நாளை மீண்டும் செய்வேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மாலதி மேடம் இந்த குழம்பு மிக அருமை.நான் தே.எண்ணெய் யூஸ் செய்யமாட்டேன்.அதுக்கு பதில் நல்லெண்ணெய் யூஸ் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.நன்றி உங்களுக்கு!!

உங்கள் குறிப்பில் இருந்து முருங்காய் பொரிச்சகுழம்பு பலாகொட்டையும் சேர்த்து செய்தேன் நல்லா இருந்தது.நல்ல குறிப்புக்கு நன்றி மேடம்.

அன்புடன்,
ஜாஸ்மின்.

ஏன் மேனகா தேங்காயெண்ணெய் யூஸ் பண்ணமாட்டீர்கள்? கொழுப்பு அதிகம் என்றா?
மற்ற ரீஃபயிண்ட் ஆயில் சேர்த்தாலும் நன்றாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். அலுக்காமல் சாப்பிடுவார்கள்..
நன்றி மேனகா..!!

ஜாஸ்மின்..!! இதில் கடைசியாக வடகம் தாளித்து சேர்ப்பது தனி சுவையையும் மணத்தையும் கொடுக்கும்.
வடகம் சேர்த்தீர்களா?
நன்றிம்மா..!!

ஹாய் மேடம் நலமா?ஆமாம் மேடம் வடகம் தாளித்து சேர்த்தேன்.ஊரில் இருந்து எடுத்து வந்தது.
எங்க கிராண்ட்மா செய்வாங்க.இதை நாங்கள் கறிவடம் என்போம்.உங்கள் குறிப்பின் படி வடகம் செய்து பார்க்கிறேன்(இங்கு உள்ள வெயிலுக்கு கொஞ்சகச்டம் முயர்ச்சிக்கிறேன்)நன்றி மேடம்.

அன்புடன்,
ஜாஸ்மின்.