பச்சைமிளகாய் ரசம்

தேதி: March 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப்
தக்காளி - ஒன்று
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை, மல்லி, உப்பு - தேவையான அளவு


 

பருப்புத்தண்ணீரில் கரைத்த புளித்தண்ணீரை சேர்க்கவும். பச்சை மிளகாயையும் தக்காளியையும் பிசைந்து விடவும். பூண்டு பல்லை தட்டி போடவும்.
உப்பு சேர்த்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டி கொதிக்க விடவும்.
இறக்கும்போது கறிவேப்பிலை, மல்லி சேர்க்கவும்.


இந்த ரசம் செய்வது ரொம்ப ஈஸி. டேஸ்டும் புதுவிதமாக நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று இந்த பச்சை மிளகாய் ரசம் செய்தேன். சுவை டாப். சும்மவே குடித்தேன்.. யம்மி..யம்மி..

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமாம் தனிஷா..!! இந்த ரசம் குடிப்பதற்கும் நன்றாக இருக்கும். மேலும் செய்வதும் ஈஸியாக இருக்கும். சுவைத்துப்பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றிகள்...!!

இந்த ரசம் செய்வதும் ஈசி டேஸ்ட் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் மாலதிமேம்..

வாழு, வாழவிடு..

மாலதி மேம்,
போன வாரம் கலாட்டா கிச்சனுக்காக உங்களோட ரசம் செய்திருந்தேன். எப்பவும் செய்வதுப்போல ரசப்பொடி எல்லாம் போடாமல், வித்தியாசமாக ரொம்ப டேஸ்டியா இருந்தது. என் கணவருக்கு (அவர் ஒரு ரசப்பிரியர் :)) மிகவும் பிடித்து இருந்தது!. அருமையான இந்த குறிப்புக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ