www.arusuvai.com
பச்சமிளகாய் ரசம்
இந்த ரசம் செய்வது ரொம்ப ஈஸி. டேஸ்டும் புதுவிதமாக நன்றாக இருக்கும்
தேவையானப் பொருட்கள்
- துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப்,
- தக்காளி - 1,
- புளி -ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
- பச்சமிளகாய் - 2,
- பூண்டு - 2 பல்,
- கறிவேப்பிலை, மல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- பருப்புத்தண்ணீரில் கரைத்த புளித்தண்ணீரை சேர்க்கவும்.
- பச்சமிளகாயையும் தக்காளியையும் பிசைந்துவிடவும்.
- பூண்டுபல்லை தட்டி போடவும்.
- உப்பு சேர்த்து , கடுகு பெருங்காயம் தாளித்துகொட்டி கொதிக்கவிடவும்.
- இறக்கும்போது கறிவேப்பிலை, மல்லி சேர்க்கவும்.