இந்த சாதம் கொங்குநாட்டில் ரொம்ப ஃபேமஸ். கொங்குநாட்டில் இதை தெரியாவர்களே இருக்கமாட்டார்கள். குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி உண்ணும் உணவு இது. சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சாப்பிடவேண்டும். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போதும். மாங்காய் தொக்கு நல்ல மேட்ச்சிங்.
|
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 1 கப்
- துவரம்பருப்பு - 3/4 கப்,
- சி. வெங்காயம் - 10,
- ப. மிளகாய் - 2,
- வர மிளகாய் - 2,
- பூண்டு - 5 பல்
- நறுக்கிய தேங்காய் பல் - 1/2 கப்,
- மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்,
- தக்காளி - 2,
- கத்தரிக்காய் - 1,
- உருளைக்கிழங்கு - 1,
- கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு - தாளிக்க தேவையான அளவு.
- பொடிசெய்துகொள்ள
- -------------------
- மிளகு - 1/2 டீஸ்பூன்,
- சீரகம் - 1/2 டீஸ்பூன்,
- சோம்பு - 1/2 டீஸ்பூன்
|
செய்முறை
- சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கவும்.
- பச்சமிளகாய், வரமிளகாயை கீறி வைக்கவும்.
- கத்தரிக்காய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும்.
- குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, தாளித்து வரமிளகாய், பச்சமிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4 கப் தண்ணீர் ஊற்றவும்
- மிளகாய்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய் பல், கத்தரிக்காய், உருளைகிழங்கு, உப்பு சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் அரிசி பருப்பை போட்டு பொடி பண்ணி வைத்திருக்கும் மிளகு, சீரகம், சோம்பு பொடியைபோட்டு குக்கரை மூடவும்
- குக்கரில் ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு அடுப்பை ஸிம்மில் வைக்கவும்.
- சரியாக 10 நிமிடம் கழித்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
|
வழங்கியவர்
மாலதி மோகன்
 |
|
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -