உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

கார்ன் புலாவ்



தேவையானப் பொருட்கள்

  • வேக வைத்து உதிர்த்த சோளம் (அல்லது) ஸ்வீட் கார்ன் - 1 கப் (200 கிராம்)
  • (விருப்பமான) அரிசி - 2 கப்
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • நெய் - 1 தேக்கரண்டி
  • கல் உப்பு - 1 மேசைக்கரண்டி
  • அரைக்க:-
  • பெரிய வெங்காயம் - 1
  • இஞ்சி - சிறிது
  • பூண்டு - 5 பல்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • தனியா தூள் - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1
  • கொத்தமல்லி தழை - 1/4 கட்டு
  • தாளிக்க:-
  • பட்டை - சிறிது
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 1
  • பிரிஞ்சி இலை - சிறிது
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
step 1
அரைக்க கொடுத்துள்ளவற்றை தனியாகவும், தக்காளியை தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
step 2
அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைத்து, வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டு சிவக்காமல் வறுத்து வைக்கவும்.
step 3
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
step 4
பொரிந்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
step 5
வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
step 6
இப்போது வேக வைத்த கார்ன் (ஸ்வீட் கார்ன்) சேர்த்து கிளறவும்.
step 7
அத்துடன் வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறவும்.
step 8
அரைத்த தக்காளியை ஊற்றி, ஒன்றரை தம்ளர் தண்ணீரும் சேர்த்து கலக்கவும்.
step 9
உப்பு போட்டு நன்கு கலக்கி, குக்கரை மூடி, வெயிட் போட்டு, 1 விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து, 3 நிமிடம் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.
step 10
இப்போது சுவையான மணக்கும் கார்ன் புலாவ் ரெடி. இதனை தயிர் பச்சடியுடனோ, சிக்கன் க்ரேவி, தந்தூரியுடனோ சாப்பிட இன்னும் சுவை கூடும்.
step 11
அறுசுவையில் 400 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
step 12


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
சுவையான கார்ன் புலாவ்...
ஏப்ரல் 18, 2008 - 9:42am - வழங்கியவர் இலா

நேற்று கார்ன் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு நன்றி.... வழமை போல நெய் சேர்க்கவில்லை....

ராய்த்தாவுடன் மிக அருமையாக இருந்தது

--இலா

கார்ன் புலாவ்
நவம்பர் 27, 2008 - 10:14pm - வழங்கியவர் vinnie

செல்வி அக்கா கார்ன் புலாவை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என்னுடைய பையனுக்கும் மிகவும் பிடித்தது. நன்றி உங்களுக்கு.