உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

தயிர் வடை

 


தேவையான பொருட்கள்

  • உழுந்து - 1 கப் (2 மணிநேரம் ஊறவைத்தது)
  • உப்பு - 3/4 ஸ்பூன்
  • எண்ணை பொரிக்க - 1 கப்
  • தயிருக்கு
  • ---------------
  • கெட்டி தயிர் - 1 கப்
  • இஞ்சி பொடியாக துருவியது - 1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 1
  • சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது - 4
  • அலங்கரிக்க
  • ------------------
  • பூந்தி - 1/4 கப்
  • பொடியாக அரிந்த மல்லி இலை - 1 ஸ்பூன்
  • கேரட் துருவல் - 1 ஸ்பூன்

செய்முறை

  • இப்பொழுது ஊறிய உழுந்தினை நன்கு மை போல கெட்டியாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  • பின் எண்ணையை காயவைக்கவும்
  • பின் உழுந்து வடைக்கு தட்டுவது போல் கைய்யை தண்ணீரில் நனைத்து மாவை எடுத்து ஆள் காட்டி விரலாலும் கட்டை விரலாலும் நடுவில் ஒரு குழி இட்டு அப்படியே காய வைத்த எண்ணையில் இட்டு பொரித்து வைக்கவும்
  • பின் பொரித்த வடைகளை 2 கப் தண்ணீரில் சிறிது உப்பு இட்டு அதில் இட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.பின் பிழிந்து எடுக்கவும்
  • பின் தயிரில் இஞ்சி,பச்சை மிளகாய் ,சின்ன வெங்காயம் சேர்த்து கலந்து அதில் பிழிந்து எடுத்த வடையை இட்டு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
  • பரிமாறும்பொழுது அதன் மேல் பூந்தி,கேரட் துருவல்,மல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாற சுவையான அழகான வெள்ளை வெளேர் தயிர் வடை ரெடி

குறிப்பு:

இங்கு ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் உழுந்து வடை இப்படி தான் செய்வார்கள்.ஆனால் இதில் நான் துருவல் தான் சேர்த்துள்ளேன்...அவர்கள் இஞ்சி ,மிளகாயை அரைத்தே சேர்த்திருப்பார்கள். .ரொம்ப நாள் பரீஷனத்திற்கு பின் செய்முறையை கண்டுபிடித்தேன்..தாளிப்பு போதும் என்று நினைப்பவர்கள் அலங்காரப் பொருட்களுக்கு பதில் எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து ஊறுங்கள்.

வழங்கியவர்

தளிகா


comments
( நீங்க நானா (அ) நான் நீங்களான்னு)
மார்ச் 27, 2008 - 1:44am - வழங்கியவர் Jaleela Banu

தளிக்கா சொல்லி வைத்த மாதிரி ( நீங்க நானா (அ) நான் நீங்களான்னு) தெரியல சொல்லி வைத்த மாதிரி அப்பட்டியே இருக்கு ஆனால் இந்த ரெஸிபி நான் கொடுக்கவில்லை நோன்பில் மட்டும் தான் செய்வேன் என் பெரிய பையனுக்கு இது ரொம்ப பிடிக்கும்.தயிர் வடை குறிப்பு அருமை
ஜலீலா

ரூபி கண்ணு
மார்ச் 28, 2008 - 4:10am - வழங்கியவர் kr

வாவ்!இது என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஸ்னாக்.இது கொஞ்சம் டிஃப்ரன்ட்டா இருக்கு ரூபி கண்ணு. செய்து பார்த்துட்டு கன்டிப்பா சொல்ரேன்,சரியா.
ம்ம்ம்ம்.......முணுமுணுப்பு கேட்குது இங்க வரை,என்னடா இந்த ஹிபா, தளிகாஸ் சிக்கன் ரோஸ்ட்டுகே இன்னும் பினூடத்தை காணோம்,இதத்தான் செஞ்சி கிழிக்கப்போராலாக்கும்னு.......
என்னத்த சொல்ல இங்க 15 நாலா,ஹலால் சிக்கன் கிடைக்கலேப்பா..ஆனா,இந்த ரெசிப்பி(தயிர் வடை) இந்த வாரம் செய்யனும்னு முடிவு செஞ்சிட்டோமில்ல....

என்னுடைய
மார்ச் 28, 2008 - 4:56am - வழங்கியவர் kamali laxman

என்னுடைய இனியா தோழிக்களூக்கு வணக்கம், நான் அருசுவை பகுதிக்கு புதியவள்.i am living in silanka now.

with love,
kamali

ஹாய் கமலி
மார்ச் 28, 2008 - 5:15am - வழங்கியவர் seyedkatheeja

புது வரவான உங்களை வருக வருக என்று அறுசுவை தோழிகள் சார்பில் வரவேற்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.

urud vadai
மார்ச் 28, 2008 - 1:11pm - வழங்கியவர் thalika

ஓஹோ சற்று முன் தான் இங்கே பதிவு இருப்பதை பார்த்தேன்..அதான் ஜலீலாக்கா பூர்வ ஜென்ம பந்தம்...எங்க வீட்டுக்கு பெரிய பைய்யனுக்கும் இது ரொம்ப இஷ்டம்(ஆத்துக்காரர்)
ஹிப அதுக்கென்ன நேரம் கெடச்சா செய்யலாம் இல்லாட்டி இனி எப்பவவது செய்யலாம்..
இன்னொரு டிப்ஸ் - என் ஃப்ரென்ட் சொல்லி செஞ்சு பார்த்தேன்...உழுந்து வடை செய்ய நேரம் இல்லை ஆனால் சாப்பிடனும்னு ஆசையா...ப்ரெட் ஸ்லைcஎஸை சதுரங்களாக வெட்டி எண்ணையில் பொரித்து ஊற விட வேண்டாம் அப்படியே தயிரில் போட்டு சாப்பிட்டால் உழுந்து வடை போலவே இருக்கு

தளிகாவின் தயிர் வடை.
ஜூன் 12, 2008 - 3:14am - வழங்கியவர் kr

ரூபி,இன்று கொஞம் பிசி,ஏன்னு சொல்லு.ம்ம்ம்...நானே சொல்ரேன்,உன்னுடைய தயிர் வடை செய்தேன்.இனி தான் சாப்பிடனும்.

விட்டுப்போன நோன்பு வைத்தேன்.இஃப்தாருக்கு செய்தேன்.பார்ப்பதர்க்கு சூப்பரா இருக்கு.கன்டிப்பா நல்லா இருக்கும்.

நம்ம அருசுவையில் இருந்து ரத்னா கஃபே சாம்பார் என்று ஒரு ரெசிப்பி இருக்கில்ல அதுவும் செய்தேன்.டின்னருக்கு இட்லி,இந்த சாம்பார்,சட்னி உன்னுடைய உள்ளி சம்மந்தி.தேங்காய் சம்மந்தி தான் செய்யலாம்னு... ஆனால் தேங்காய் தற்சமயம் லேது......

ஆஹா..... தயிர் வடை.
ஜூன் 18, 2008 - 10:33pm - வழங்கியவர் kr

ரூபி,
தயிர் வடை சூப்பரோ சூப்பர்..........

உடனே சொல்லனும் என்று நினைத்தேன்,நேரம் இல்லாதது தான் காரணம்.ஆனால் இதை செய்து வைத்துள்ளேன்,நோன்பு திறந்து தான் சாபிடனும்னு சொன்னேன் தானே,நேரம் இல்லைனு பின்னூடம் கொடுக்கலைனு யாருக்கு தெரியும்,தளிகாவின் தயிர் வடை நல்லா இல்லை போல,அதனால தான் சாப்பிட்டுவிட்டு பின்னூட்டதைக்கானோம் என்று யாரும் எண்ணிவிடக்கூடாதே.

இது எல்லோரும் கண்ன்டிப்பா செய்து பாருங்க.ரொம்ப நல்லா இருந்தது.இட்லி,தோசைக்கு உளுந்து அரைக்கும் போதே கொஞ்சம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து செய்தால் சுலபமும் கூட.

பூந்தியும்,கேரட்டும் துருவி போடேன்.தாளிக்கவும் செய்தேன்.

ரூபி,,இதை எழுத எழுத நாக்கு ஊறுது....வாவ்...நல்லா எஞ்சாய் பண்ணி சாப்பிட்டோம்.நன்றி ரூபி,இந்த ரெசிப்பிக்கு.

நிஜம் தான்
ஜூன் 18, 2008 - 10:51pm - வழங்கியவர் thalika

நிஜம் தான் நானும் பிடிக்கவில்லை போல என்று நினைத்து விட்டேன்...சில குறிப்பு நமக்கு பெயர் வாங்கி தந்தாலும் அதனை அடுத்தவர்கள் செய்தால் அது போல வராது அது மாதிரி ஹிபாவுக்கு உழுந்து வடை பிடித்திருக்காது என நினைத்தேன் இப்பொழுது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி ஹிபா