பிட்ஸா

தேதி: March 27, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

இலங்கைத் தமிழரான <a href="experts/2552" target="_blank"> திருமதி. நர்மதா </a> அவர்கள் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

இது மிகவும் சுவையான மற்றும் சத்தான பிட்ஸா. ஆட்டாமா, ஓட்மீல் சேர்ப்பதால் சாதாரண பிட்ஸாவைவிட நார்ச்சத்து அதிகம். கார்போஹைட்ரேட்டின் அளவும் குறைவு.

 

பிட்ஸா சாஸ் செய்வதற்கு
தக்காளி - 2
தக்காளி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
பார்மெஜான் சீஸ் - 2 மேசைக்கரண்டி
பேசில் - 1 தேக்கரண்டி
ஒரெகானோ - 1 தேக்கரண்டி
உள்ளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - சிறிது
உப்பு - சிறிது
ரொட்டி செய்வதற்கு:
ஆட்டா மா/கோதுமை மா - 3/4 கப்
ஓட்ஸ் மீல் - 1 கைப்பிடி
ஈஸ்ட் - 1/4 தேக்கரண்டி
சீனி - 1/4 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
பிட்ஸா மேலே சேர்ப்பதற்கு:
பிட்ஸா சாஸ் - 1/2 கப்
பார்மஜான்/மொட்சரில்லா சீஸ் - 1/4 கப்
நீளமாக வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
நீளமாக வெட்டிய பெல் பெப்பர் - 1 மேசைக்கரண்டி
வட்டமாக வெட்டிய தக்காளித் துண்டுகள் - 5 அல்லது 6
மிளகாய் ஃப்ளேக்ஸ் - ஒரு சிட்டிகை
காய்ந்த பேசில் - ஒரு சிட்டிகை
காய்ந்த ஒரெகானோ - ஒரு சிட்டிகை


 

தக்காளியை துண்டங்களாக நறுக்கிப் போட்டு, தண்ணீரில் அவித்து மசிக்கவும்.
பின்னர் அதனுள் ஏனைய பொருட்களைச் சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்ததும் நெருப்பை குறைத்து சிம்மில் 15 - 30 நிமிடங்களுக்கு விடவும். (மூட வேண்டாம் - கலவை சிறிது கெட்டியாவதற்கு).
இப்போது பிட்ஸா சாஸ் ரெடி. இதனை சிறிது ஆறவிட்டு பிட்ஸா ரொட்டியில் தடவி விரும்பிய toppings வைத்து பேக் செய்யலாம்.
மிதமான சுடு தண்ணீரில் ஈஸ்டைப் போட்டு சீனியையும் சேர்த்து கரைத்து 10 நிமிடங்கள் வைக்கவும். மாவினுள் உப்பு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இதனுள் ஈஸ்ட் கரைசலை சேர்த்து குழைக்கவும். இதனுடன் ஓட்ஸ் மீலையும் சேர்த்து சப்பாத்தி மாவிலும் சிறிது இளக்கமாக குழைக்கவும்.
ஒரு எண்ணெய் பூசிய பாத்திரத்தில் போட்டு மூடி 1 - 2 மணித்தியாலங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைக்கவும்.
வெங்காயம், பெல் பெப்பரை வெறும் சட்டியில் போட்டு மெல்லிய நெருப்பில் வாட்டவும்.
ஒரு அலுமினியம் ஃபாயிலில் அல்லது மேசையில் மாவு தூவி அதன் மேல் மாவுருண்டையை வைத்து கைகளால் அல்லது உருட்டு கட்டையால் 12 - 13 அங்குல சப்பாத்தியாக தேய்த்து பிட்ஸா தட்டில் போட்டு மீண்டும் மூடி 1/2 மணித்தியாலங்கள் வைக்கவும்.
(அவனை 425 Fஇல் முற்சூடு பண்ணவும்.) பின்னர் தேய்த்த மாவின் மேல் பிட்ஸா சாஸை சீராக பரப்பவும்.
அதன் மேல் வாட்டிய வெங்காயம், தக்காளி, பெல் பெப்பரை தூவவும்.
பின்னர் அதன் மேல் சீஸை (பார்மஜான்/மொற்சரில்லா/இரண்டும்) தூவவும்.
முற்சூடு பண்ணிய அவனில் 15 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி பொங்கும் வரை வைத்து எடுக்கவும். சுவையான பிட்ஸா தயார். மிளகாய் பிளேக்ஸ், பேசில், ஒரெகானோ தூவி சிறிது ஆறவிட்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.

பிட்ஸாவிற்கு மேல் போடும் topping ல் விரும்பியதை சேர்க்கலாம். காளான், சோயாமீற்(சோயா உருண்டை), ஃபெனல், ஆட்டிசோக், ஸ்பினாச் என சேர்க்கலாம். தண்ணியாக இல்லாது இறுக்கமாக இருக்கும் பழைய கறிகளை கூட வைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

i prepared this pizza...
ino words to explain how superb it was.
1 doubt i have is..
i want to prepare this as lunch.
can i store it in fridge preparing at night itself.
how long we can store this pizza and how to reheat ??
ccan this be done in normal oven to reheat.

waiting for ur reply..cos i think to prepare for my husband b'day ..

நன்றி பாலம்மு. & தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் இந்த பதிவைப் பார்த்தேன். உங்கள் கணவரின் பிறந்தநாளுக்காக கேட்டிருந்தீர்கள். உடனே பதில் தராததையிட்டு கவலையாக உள்ளது.

நான் உடனுக்குடன் செய்வதால் குளிரூட்டியில் வைக்கலாமா எண்டு தெரியாது. ஆனால் பிற்சா க்ரஸ்டை (crust) குளிரூட்டியில் வைத்து எடுக்கலாம். பொதுவாக தக்காளி ஸோஸை உடனுக்குடன் பூசுவதுதான் நல்லது என்று சொல்வார்கள். அதை பூசி வைத்தால் மாவுடன் ஊறி ஒரு மாதிரி சொகி ஆகிவிடும். ஆனால் எல்லாவற்றையும் தயார் செய்து டீ-ஃபிரீசரினுள் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
-நர்மதா :)

அட்மினுக்கு,
நலமாக உள்ளீர்களா? இன்றுதான் யாரும் சமைக்கலாமில் இடம்பெற்ற எனது குறிப்புகளை ஒவ்வொன்றாக பார்க்கிறேன். ஏதாவது பின்னூட்டங்கள், கேள்விகள் வந்துள்ளதா என்று. :) (குழந்தை நன்கு நித்தா கொள்கிறாள்)

எனக்கு ஒரு சந்தேகம். சமீபத்திய பதிவுகள் பக்கத்தில் யாரும் சமைக்கலாமில் இடம் பெறும் எனது குறிப்புகளுக்கு பின்னூட்டங்கள் வந்தால் ஒன்றுமே வருகுதில்லையே. ஏன்? அதை அட்மின் வழங்குவதாலா? அப்படித்தான் நினைக்கிறேன். ஏதாவது பின்னூட்டம் வந்திருந்தால் அதையும் சமீபத்தைய பதிவுகளில் போடும்படி ஏதாவது செய்ய முடியுமா. நிறைய நன்றிகள் விட்டுப் போயுள்ளது :)
-நர்மதா :)

தங்கைக்கு,

நலமா? குழந்தை எப்படி இருக்கின்றது?

நீங்கள் சொல்லியிருக்கும் காரணம்தான். யாரும் சமைக்கலாம் குறிப்புகளுக்கு பின்னூட்டம் வந்திருந்தால் அவற்றை சமீபத்திய பதிவுகள் வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ளுதல் இயலாது. சமீபத்திய பதிவுகளில் உங்கள் பெயரில் நீங்கள் சேர்க்கும் பதிவுகள், குறிப்புகள் சம்பந்தமாக ஏதேனும் வந்திருந்தால் மட்டுமே அறிய முடியும். இந்த குறிப்புகளை நாங்கள் சேர்ப்பதால் அதை நீங்கள் அறிய இயலாது.

அப்படித்தான் நினைத்தேன். இதற்கு ஒண்டும் செய்யேலாதா?
குழந்தை நல்ல இருக்கிறா. நன்றி.
-நர்மதா :)
PS:எப்பொழுது புதிய தளம் வரும். புது 'நீங்களும் செய்யலாம்' குறிப்புகள் எப்பொழுது வரும் ? (கண்டிப்பாக எனது இல்லை :) மற்றவர்களினது...:))

இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று இல்லை. சில மாற்றங்கள் செய்யலாம். ஆனால் அதை செய்ய வேண்டுமா என்று யோசிக்கின்றேன். நிறைய மாற்றங்களுடன் புதிய தளத்தை தயாரித்து வருவதால், இந்த தளத்தில் எதுவும் செய்யவில்லை. இப்போதைக்கு வருகையாளர்களை திருப்திபடுத்துவதற்காக சமையல் குறிப்புகள் மட்டும் சேர்த்து வருகின்றோம்.

புதிய தளத்தினை மாற்றி மாற்றி ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றேன். எப்போது முடிக்கப் போகின்றேன் என்று தெரியவில்லை. மற்ற வேலைகளும் அதிகமாகிவிட்டன. நீங்களும் செய்யலாம் குறிப்புகளையும் இந்த தளத்திலேயே மீண்டும் கொடுக்க ஆரம்பித்துவிடலாமா என்பதை பற்றி யோசித்து வருகின்றேன். உங்களது குறிப்புகள் நிறைய இருக்கின்றன. விரைவில் ஏதேனும் ஒரு முடிவு எடுக்கின்றேன்.

ஹலோ மேடம், நான் இன்று பிட்ஸா செய்தேன் நன்றாக வந்தது, நன்றி.
எனக்கு ஒரு சந்தேகம், சாஸ் முன்னதாகவே தயார் செய்து வைத்து கொண்டால் நல்லதா எத்தனை நாட்கள் வரை அது நன்றாக இருக்கும்,
தயவுசெய்து பதில் கொடுங்கள்

சாஸ் முதலே தயாரித்து வைத்தால் பிரிட்ஜில் கை படாமல் தண்ணீர் படாமல் இருந்தால் ஒரு வாரம் வரை வைக்கலாம்.
பிட்ஸா முதல் நாள் செய்து மறுநாள் கூட ஹீட் செய்து சாப்பிடலாம். மைக்க்ரோவோவில் இரண்டு நிமிடம் வைத்தால் போதும்.
ஜலீலா

Jaleelakamal

அன்பின் லல்லி, நான் உடனுக்குடன் செய்வதால் குளிரூட்டியில் வைக்கலாமா எண்டு தெரியாது. ஜலீலாக்கா சொன்னால் சரியா இருக்கும். செய்து பாருங்கள். நன்றி ஜலீலாக்கா. ப்தில் சொன்னமைக்கு.
-நர்மதா :)

நர்மதா இப்போதுதான் பார்த்தேன்.இதில் சேர்க்க வேண்டிய நிறயப்பொருட்கள் என்னிடம் இல்லாததால் நாளை செய்து பாத்து சொல்கிறேன். பீசா செய்து பழக வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை சோயாமீற் போடுவதென்றால் தண்ணில ஊறவச்சு போடவேனுமா அல்லது அப்படியே போடலாமா?

சுரேஜினி, சோயா மீற்றை கறி செய்துதான் போடுறனான் (பொதுவாக மிச்சமாகும் கறி:) ) அப்படியே அல்லது தண்ணில ஊற வச்சு போட்டா சுவை நன்றாக இராது. வேணுமானால் ஊறவைத்து உப்பு மிளகாதூள் பிரட்டி அரைபதமாக பொரித்தும் போட்டு பாருங்கள். மொருமொருப்பாக இருக்கும். நான் செய்து பார்க்கவில்லை. செய்து பார்த்ததும் சொல்கிறேன். (இப்போதைக்கு இல்லை)
-நர்மதா :)

நர்மதா 2 தடவை செய்துவிட்டேன்.சூப்பரா வந்திச்சு. நாந்தான் செய்தேனா என்று ஆச்சரியமாகிவிட்டது.என்னையும் பிட்ஸாசெய்ய வைத்ததற்கு நன்றி.சோயாமீற் கறியை கிரைண்டரில் ஒரு அடி அடித்துவிட்டு போட்டேன்.நல்லாவே இருந்த்திச்சு.நன்றி நர்மதா.

ஜலீலா அக்கா, நர்மதா மன்னிக்கவும், நான் இன்று தான் உங்களது கருத்தினை பார்த்தேன்,
மிக்க நன்றி. அடிக்கடி இப்படி நிறைய சந்தேகம் வரும் கேட்கறேன் தீர்த்து வையுங்கள்.