ஃபர்னிச்சர்ஸ் வாங்க போகலாமா!!!,

அறுசுவை அன்புள்ளங்களுக்கு எனது அன்பு வணக்கம். இந்த முறை எழுத எடுத்துக் கொண்ட தலைப்பு வீட்டிற்கு வாங்கும் பொருட்களைப் பற்றியது. வேலைமாற்றம், திருமணம், அல்லது புதுமனை குடிபுகுதல், போன்று பல்வேறு காரணங்களுக்காக புதிய இடத்திற்க்கு குடிபோகின்றோம்.அதிலும் வெளிநாடுகளுக்கு குடிபோனால் விட்டிற்க்கு தேவையான அனைத்து சாமான்களையும் வாங்குவது கட்டாயமாகிவிடும். ஆரம்பத்தில் காலியான வீட்டில் உட்கார ஒரு இருக்கைகூட இல்லாத காரணத்தால் அவசர அவ்சரமாக ஸ்டோருக்குச் சென்று எதையாவது வாங்கிவந்து வீட்டை நிரப்புவதால் ஏற்ப்படும் பிரச்சனைகளை முக்கியமாக பணவிரயம் மற்றும் மன உலைச்சல்களை தவிர்க்க இந்த பதிவு உதவும் என்று நம்புகின்றேன். வீட்டிற்க்கு வாங்கும் எந்த பொருளையும் அதிலும் முக்கியமாக ஃபர்னிச்சர்ஸ்ஸை வாங்கும் பொழுது சிறிது சிரத்தை எடுத்து கவனம் செலுத்தாவிட்டால் பிறகு அவைகளை வாங்கும் போது இருந்த சந்தோசம் நாளடைவில் குறைந்து அதனோடு நமது அறியாமையும் வெளிப்படுவதை நன்கு அறியமுடியும். ஆகவே இந்த பிரச்சனைகளை முறியடிக்கும் பொருட்டு இந்த தலைப்பில் ஒருசில குறிப்புகளை எழுதியுள்ளேன்.

1.வீட்டிற்க்கு தேவையான ஃபர்னீச்சர்ஸ் என்று பார்த்தால் சோபா, மேசை நாற்காலி,பெட் ரூம் செட், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான பொருட்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் வாங்குவது ஒரு விதத்தில் வேலை மிச்சமாகவும் பணம் கூட மிச்சமாக இருக்கும் போன்ற தோற்றமளித்தாலும் அவசர கோலம் அள்ளித் தெளித்ததுப் போல் தான் ஆகிவிடும். ஆகவே பொருமையை இந்த நேரத்தில் தான் கையாள வேண்டும். முதலில் சமையலுக்கு வேண்டிய பொருட்கள் என்று பார்த்தால் ஒருசிலவாவது நாம்முடன் எடுத்துச் செல்வது நல்லது. அதிலும் ஒரு சிறிய குக்கர், ஒரு சில பாத்திரம், ஒருசில தட்டு கிண்ணம்,டம்ளர்ஸ்,கரண்டி இவைகள் இருந்தால் போதும் எவ்வளவு நாளானாலும் சமாளிக்கலாம்.

2.அடுத்து சமையலுக்கு அடுத்தபடி உணவிற்க்கு அடுத்தபடி வேறேன்ன உறக்கம் தானே, ஆகவே மற்ற பொருட்கள அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலில் படுக்கை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் தரம், பிறகு அறையின் அளவு இவை இரண்டையும் பார்த்து வாங்க வேண்டும். நல்ல தரமான பெட் பத்து வருடங்களுடன் கூடிய உத்திரவாதத்துடன் கிடைக்க கூடும். ஆகவே நல்ல தரமான படுக்கையை மட்டும் முதலில் வாங்கி விட வேண்டும்,அப்போ தலகானி/தலையணை, ஜமுக்காளம் வேண்டாவா என்று கேட்பது என் காதில் விழுகின்றது,அதையும் சேர்துக்கோங்க. அதன்பிறகு பெட் ரூம் செட்டை டிரஸ்ஸருடன் கூடியதாக பின்பு நிதானமாக வாங்கிக் கொள்ளலாம்.

3.அடுத்து வரவேற்பறைக்கு தேவையான சோஃபா வாங்கும் படலத்தை தொடங்கலாம். சோஃபவை தேர்வுச் செய்வதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் அளவு பிறகு தான் அதன் தோற்றத்தை தேர்வுச் செய்ய வேண்டும். அழகாக இருக்கின்றதென்று அறையின் மொத்த இடத்தையும் அடைத்துக் கொள்வதுப் போன்ற சோஃபா செட்டுகளை தவிர்க்கலாம். அடுக்குமாடி கட்டிடமாக இருந்தால் அதற்கேற்றார் போலவும், தனிவீடாக இருந்தால் அதற்கேற்றார் போலவும் பார்த்து சோஃபாவின் அளவைத்தேர்வுச் செய்து வாங்கவேண்டும். சோஃபா என்றால் இரண்டு சீட்டர், மூன்று சீட்டர் என்று தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனி தனி இருக்கைகள் கொண்ட சோஃபாக்களை வாக்கி பிடித்த டிசைனில் போட்டுகூட வரவேற்ப்பு அறையை அலங்கரிக்கலாம். எல்லாவற்றையும்விட விலை அதிகமுள்ள ஃபர்னிச்சர்ஸ் அதிக நாட்கள் உழைக்கும் என்றோ விலை குறைவு என்றால் சீக்கிரம் பழுதடையும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதையும் அக்கரையுடன் பராமரிப்பதில் தான் அதன் ஆயுளைக் கூட்ட முடியும் என்பது என்கருத்து.

4.குழந்தைகள் இருக்கும் வீடானால் சோஃபாவின் மெட்டீரிலயைப் பார்த்து வாங்குவது நல்லது. மேலும் சோஃபா உறைகளை பிரித்தெடுத்து சுத்தம் செய்வதுப் போன்று ஜிப் வைத்த இருக்கைகளுடன் கூடிய குஷன்களாக பார்த்து வாங்க வேண்டும்.இல்லாவிடில் லெதர் சோஃபாக்கள் வாங்கிவிட்டால் பராமரிப்பதும் எளிது அழுக்கும் சேராது.

5.மேலும் ஒரு வரவேற்பு அறையை மேலும் அழகூட்டி காட்டுவது சோஃபாவின் நடுவில் போடும் காஃபி டேபுள் அல்லது சென்டர் டேபிள். ஆகவே இவைகளின் அளவு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல் சோஃபாவின் அளவிற்க்கு அதன் உயாத்திற்க்கு ஏற்றதாக அமைய வேண்டும். சில செட்டுகளில் விலைக்காக வேண்டி அல்லது இலவசம் என்று ஏதோ ஒரு சென்டர் டேபிளை அதற்கு சம்பந்தமில்லாமல் வைத்திருப்பார்கள், ஆகவே அவைகளை தவிர்த்து விடுவது நல்லது. குழந்தைகள் இருக்கும் வீடானால் கண்ணாடி, மற்றும் இரும்பினாலான ஃபர்னிச்சர்ஸ்ஸை தவிர்த்துவிடுவது நல்லது.

6.பிறகு மேசை நாற்காலிகளை வாங்கு போதும் இவைகளிலும் விலையை விட அளவு மிக முக்கியம். அதேப்போல் மேசையை விட நாற்காலிகளின் இருக்கை கனமானதாக இருப்பது நல்லது, மேசையைப் போடும் இடத்தைப் பொருத்து வட்ட வடிவில் மேசை இருப்பது அழகாக இருக்கும். ஆனால் இடவசதி குறைவாக இருந்தால் கட்டாயம் செவ்வக வடிவம் தான் நல்லது.மேலும் மேசைகளின் அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் கூடிய வகையிலான எக்ஸ்பான்டபிள் மேசை வாங்குவதால் பிரச்சனை வராது.

7.பெட்ரூம் செட்டை வாங்கும் போதும் நல்ல நேரம் எடுத்து நிதானமாக பல இடங்களுக்குச் சென்று விலையையும் ஒப்பிட்டு பார்த்து பொருமையாக வாங்கிக் கொள்ளலாம். கட்டில் மற்றும் டிரஸ்ஸர் போன்ற பெட்ரூம் செட்டுகள் எப்படி இருந்தாலும் இவைகள் போடும் அறைகளும் பொதுவாக ஸ்டேன்டர்ட் சைஸ்ஸில் இருப்பதால் இதற்கு அளவைப் பற்றிய பிரச்சனையிருக்காது ஆகவே பிடித்த டிசைனில் வாங்கி அறையை அழகுப் படுத்தலாம்.

8.குழந்தைகளுக்கு வாங்கும் படுக்கைகளைப் பொருத்தவரை,அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு சிறிது காலம் கழித்து மாற்றவேண்டிய சூழ்நிலைகள் வரும் என்பதால் தரத்தை விட வசதி அதிகம் கொண்டதாக இருப்பது நல்லது.கட்டிலின் அடியில் டிராயர்ஸ்களுடன் கூடியதாக பார்த்து வாங்குவது நல்லது அதில் அவ்ர்களின் விளையாட்டு சாமான்கள் போன்ற அவர்களின் உடமைகளை தரை முழுவதும் சிதறியிருக்காமல் அதில் போட்டு வைத்து விடலாம். இவை ஒரே அறையில் இரண்டு குழந்தைகள் தங்க வேண்டுமானால் அவர்களின் வசதியை அதிகரிக்கலாம்.
அடுக்காக இருக்கும் பங்க் பெட் இடத்தை எடுக்காது, ஆனால் குழந்தைகள் அதை நாம் நினைப்பதுப் போல் எஞ்சாய் செய்வதில்லை என்று தான் கூறுவேன். மேல் தட்டில் படுப்பவருக்கு நன்றாக காத்தோட்டமாக இருக்கும் கீழ் படுத்துள்ளவருக்கு புழுக்கமாக இருக்கும், அதேப்போல் குளிர் காலத்தில் மேலே தூங்குபவருக்கு குளிர் அதிகமாக இருக்கும் சரியாக தூங்க முடியாது ஆனால் கீழே சுகமாக இருக்கும்.ஆகவே என்னை பொருத்தவரை குழந்தைகள் நல்ல காற்றோட்டமாக தூங்க சிங்கிள் காட் தான் சிறந்ததும் பாதுகாப்பும்கூட.

9.அதேப்போல் குழந்தைகள் எழுத படிக்க தேவைப்படும் மேசை நாற்காலியை பெட் ரூமில் போடுவதைத் தவிர்த்து வீட்டின் மற்ற பகுதியில் இடத்தை ஒதுக்கிதரலாம்,படுக்கை அறை தூங்க மட்டும் தான் என்ற விசயத்தை குழந்தையிலிருந்தே போதித்துவிட்டால் பெரியவர்கள் ஆனாலும் தூங்கும் நேரத்தை அர்த்தமுள்ளதாக செலவழித்து ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று தான் கூறுவேன்.

10.அடுத்ததாக காலணிகளுக்கென்று வீட்டின் நுழைவாயிலில் ஒன்று பொதுவான ஸ்டேன்டும், அவரவரின் அறைகளில் தனியாக ஒரு ஸ்டேன்டும் இருப்பது நல்லது. இதனால் நுழைவாயிலில் உண்டாகும் இடநெருக்கடியைத் தவிர்த்து அந்த இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமாக பொருட்கள் வாங்கப் போகும் போது கவனம் கொள்ள வேண்டியது வீட்டின் நுழைவாயில். சில வீடுகளின் உட்புறம் பெரியதாக இருக்கும் ஆனால் நுழைவாயில் அல்லது அவைகளை எடுத்துச் செல்லும் படிகட்டுகள் குறுகலாக இருந்து நமது காலைவாரிவிடும் என்பதால் அதை கவனத்தில் வைத்துக் கொண்டு சோஃபாவை தேர்வுச் செய்ய வேண்டும். துணி அளக்கும் டேப் அல்லது ஏதாவதொரு நூலைக் கொண்டு முன்னதாக எல்லாவற்றையும் அளவெடுத்துச் சென்றால் பிரச்சனை வரவே வாய்ப்பிருக்காது.

12.மேலும் ஸ்டோர்களின் ரிடர்ன் பாலிசியை பற்றி கேட்டு தெரிந்துக் கொள்வது நல்லது, ஏனெனில் மேனுஃபேக்சர்ஸ் பிராப்ளம் மட்டும் அல்லாமல் சில நேரத்தில் கடையில் அங்கு அழகாக தெரிந்த பொருள் நமது வீட்டிற்கு மேட்சாக இருக்காது அப்போது தயங்காமல் அந்த ரிடர்ன் பாலிசியை பயன்படுத்திக் கொள்ள உதவும்.

அப்பாடி......ஒருவழியாக காலியான ஒரு வீட்டை சாமான்கள் போட்டு எப்படி நிரப்புவது என்று ஐடியாக்களைக் கூறிவிட்டேன், ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஒரு வீட்டில் அன்பு என்ற முக்கியமான ஃபர்னிச்சர் அங்கு வாழும் ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கையாக அமர அல்லது அமர்த்த வேண்டும், அவ்வாறு இல்லாமல் இந்த உயிரற்ற வெறும் பொருட்களை மட்டும் வீடு நிறைய அடைத்து வைப்பதில் ஒரு பயனுமில்லை, அன்பும் சந்தோசமும் இல்லாத வீட்டில் அவைகள் எவ்வளவு இருந்தாலும் வெறும் காலி வீட்டிற்கே சமமானது என்பது என் கருத்து.என்னங்க நான் சொல்வது சரிதானே?

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. வீட்டில் அனைவரும் நலமா. என்ன கொஞ்ச நாள் உங்களை காணோமே என்று பார்த்தேன் வந்து ஒரு நல்ல ஆலோசனையை கூறிவிட்டீர்கள் இது எல்லோருக்கும் உதவக்கூடிய ஒரு ஆலோசனை மிக்க நன்றி மேடம் நீங்க இது போல எங்களுக்கு நிறைய ஆலோசனைகளை கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஒரு வீட்டில் அன்பு என்ற முக்கியமான ஃபர்னிச்சர் அங்கு வாழும் ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கையாக அமர அல்லது அமர்த்த வேண்டும், அவ்வாறு இல்லாமல் இந்த உயிரற்ற வெறும் பொருட்களை மட்டும் வீடு நிறைய அடைத்து வைப்பதில் ஒரு பயனுமில்லை, அன்பும் சந்தோசமும் இல்லாத வீட்டில் அவைகள் எவ்வளவு இருந்தாலும் வெறும் காலி வீட்டிற்கே சமமானது என்பது என் கருத்து.என்னங்க நான் சொல்வது சரிதானே? இது மிகவும் சரியான கருத்து மேடம்.

அன்புடன் கதீஜா.

அப்பப்பாஅ எப்படி உங்களல இப்படி முடியுது??அப்பா என்னமா ஐடியா கொடுக்கரீங்க..சான்ஸ் கெடச்சா உங்க வீட்டுக்கு ஒரு விசிட் அடிச்சுடனும்.
ஆனால் நீங்க சொன்ன இந்த அடியாக்கள் எல்லாம் எனக்கு இப்ப தான் மெல்ல மூளையில் உதிக்குது....அன்னைக்கி இஷ்டத்துக்கு எதையெதையோ வாஙிகிப் போட்டாச்சு..பல பாத்திரமும் எதுக்குன்னே தெரியாம வாங்கி வேஸ்டா இருக்கு..அதை களையவும் முடியாது...ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்Bஒது கொண்டு போய் தளிடுவேன்..அதாவது குக்கர் ஒரு விஷேஷ வீட்டுக்கு குர்மா செய்யலாம்..அவ்வளவு பெரிசு...அதை பாத்து பாத்து நானே சிரிச்சுக்குவேன்.
அதே போல் சோஃபா 3+2+2 வாங்கி அதில் 2+2 அப்படியே மூலையில் எங்களை பாத்து முறைக்கிது...இத்தனைக்கும் ஹால் அவ்வளவு பெரிசு கூட இல்லை
இப்ப சில தப்புதண்டா பன்னிட்டு அனுபவம் கொஞ்சம் வந்தப்ப தான் ச்சே நாம புதுசா வர்ரப்பா யாராவது கொஞ்சம் ஐடியா கொடுத்திருந்தா நல்ல வாங்கியிருக்கலாமேன்னு யோசிப்பேன்.
ஆனால் இவ்வளவு கோர்வையா எழுத உங்களை விட்டா யாருமே இல்லை...நிறைய புக்ஸ் படிப்பீங்களா..நல்ல படிக்கும் பழக்கம் இருந்தால் தான் இவ்வளவு அழகாக எழுத முடியும்...
உங்க வீட்க்ல எல்லோரும் கொடுத்துவச்சவங்க.

அன்பு தோழி மனோகரி,
நலமா? அடிக்கடி காணாமப் போயிடறீங்க, சரி போகட்டும், திரும்பி வந்ததும் நல்ல பதிவு கொடுக்கிற ஒரே காரணத்திற்காக மன்னித்து விடலாம்.
புது வீட்டுக்கான ஃபர்னிச்சர் வாங்கணும்னு யோசிச்சுகிட்டு இருந்த நேரத்தில் நல்ல யோசனைகள்.
உண்மை. ஃபர்னிச்சரை மட்டும் நிறைத்தால் வீடாகாது, அன்பால் நிரப்ப வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
டைகரின் நலம் எப்படி?
மீண்டும் பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்