நம்மை அழகாக்கும் தக்காளி [anjali]

நம்மை அழகாக்கும் தக்காளி [anjali]

தக்காளிப் பழத்தால் எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் தக தகக்க வைத்து விடலாம். தக்காளியனாது முகச்சுருக்கத்தை விரட்டி இளமைனவராக மாற்றி விடும்.

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.

இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும்.

இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.

கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல் கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ர்லாக்ஸ் பிளீஸ் உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்த தக்காளி பேஸ்ட்!

உருளைக்கிழங்கு துரவல் சாறு டீஸ்பூன் தக்காளி விழுது அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால் சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.

தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.

முதலில முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்

நன்றி அஞ்சலி
தக்காளியின் ம்கிமை கண்டு வியந்தேன்.யாராவது அழகு குறிப்பு கேட்டால் நிச்சயமாக இதை FORWARD பண்ணுவேன்.நாளை முதல் நான் USE பண்ணி பார்க்கப்போறேன்

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hai,asiya omar,iam anjali. உங்கள் பாராட்டிற்க்கு மிக்க நன்றி.

naturebeuaty

எண்ணை வடியும் முகம் உள்ளவர்கள் கூட வாரம் ஒரு முறை தக்காளியை வட்ட வடிவமாக வெட்டி நல்ல முகம் முழுவதும் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகத்தை அலம்பவும்.
சூப்ப்பராக ஜொலிக்கும் முகம்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் அஞ்சலி,
இது தான் உங்களிடம் நான் பேசும் முதல் முறை...
தக்காளி பற்றி நிறைய சொல்லியுள்ளீர்கள்.. இது பெண்கள் மட்டும் பயன் படுத்தலாமா?? அல்லது ஆண்களுக்கு வேறு ஏதாவது ரேஷ்யோ உள்ளதா???
உடனடி பதில் ப்ளீஸ்..

ஹாய் Subha Jayaprakash, nannஅஞ்சலி.
ஆண்களுக்கும் பயன் படுத்தலாம்.இயற்கையான பொருள்களை கொண்டு செய்வதால் என்றேக்குமே பயமில்லை.சரியா!ட்ரை பண்ணி பார்க்கவும்.ok.bye.

naturebeuaty

மிகவும் நன்றி அஞ்சலி ட்ரை பண்ணிய பின் எழுதுகிறேன்

தக்காளி வைத்து இவ்வளவு அழகு குறிப்புகள் இருக்கா? இயற்கை முறையில செய்துகரது தான் எனக்கு பிடிக்கும் நிச்சயம் இதில் எனக்கு உபயோகப்படற குறிப்பு இருக்கு அதை செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றி அஞ்சலி.

hello,

thakkali face il use panninal ethuvum ahatha?

மேலும் சில பதிவுகள்