தந்தூரி பிட்சா

தேதி: March 29, 2008

பரிமாறும் அளவு: சாப்பிடும் அளவை பொருத்து

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீசா மாவு தயாரிக்க:
மைதா மாவு - ஒரு கப்
சூடான பால் - கால் கப்
தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு
ஈஸ்ட் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.
உப்பு - கால் டீஸ்பூன்
பட்டர் - ஒரு டீஸ்பூன்
பில்லிங் தயாரிக்க:
சிக்கன் எலும்பில்லாதது - 200 கிராம்
உப்பு - ஒரு டீஸ்பூன்
தந்தூரி சிக்கன் மசாலா - ஒரு தேக்கரண்டி
காஷ்மீர் சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
மேலே தூவ:
பீசா சாஸ் (அ) டொமேட்டோ சாஸ் - 90 கிராம்
ப்ளாக் ஆலிவ் காய் - பத்து
க்ரீன் ஆலிவ் காய் - பத்து
குடை மிளகாய் - கால் கப்
வெங்காயம் - கால் கப் (பெரியதாக நறுக்கவும்)
தக்காளி - கால் கப் (பொடியாக நறுக்கவும்)
மொஜரெல்லா சீஸ் - முக்கால் கப்
பட்டர் - ஒரு டேபிள் ஸ்பூன்


 

முதலில் பீசாவுக்கு உண்டான மாவு தயாரிக்கவும்.
சூடான பாலில் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, பட்டர் போட்டு மூடி வைக்கவும்.
பிறகு அதில் மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பிசைந்து நான்கு மணி நேரம் வைத்தால் அது நன்கு உப்பி வரும். அதற்கு தகுந்தாற் போல் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஆலிவ் காய்களை நறுக்கி தயாராக வைக்கவும்.
சிக்கனில் தந்தூரி மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு பிரட்டி வைக்கவும்.
வெங்காயம், குடை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி தனித்தனியாக லேசாக வதக்கி வைக்கவும்.
இரண்டு ஆலிவ் காய்களையும் விதையை எடுத்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.
இப்போது மாவு நல்ல பொங்கி இருக்கும்.
அதை மறுபடியும் பிசைந்து இரண்டு பாகமாக பிரிக்கவும்.
திக்னெஸ் ஒன்றரை இன்ச் இருப்பது போல் சப்பாத்தி கட்டையில் தேய்த்து நடுவில் சிறிது பள்ளம் போலும், ஓரத்தில் சிறிது தடிமனாகவும் இருப்பதாக செய்யவும்.
ஒரு வட்ட வடிவ நாண்ஸ்டிக் கேக் செய்யும் பானில் வைத்து முதலில் பீசா சாஸ் (அ) டொமேட்டோ சாஸை ஓரத்தை தவிர சுற்றிலும் தடவவும்.
பிறகு செய்து வைத்துள்ள பில்லிங்கை வைத்து பரப்பி வைக்கவும். அதற்கு மேல் ஆலிவ் காய்கள், தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் தூவவும்.
சீஸை கடைசியில் தான் போடவும்.
ஓவனை இருபது நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை வைத்து மூடி பதினைந்து நிமிடம் பேக் செய்யவும்.
பிறகு வெளியில் எடுத்து சீஸ் முக்கால் கப்பில் பாதியை எடுத்து நல்ல தூவி மறுபடியும் ஐந்து நிமிடம் வைத்து ஓவனை ஆஃப் பண்ணி அப்படியே அந்த சூட்டில் சிறிது நேரம் விடவும். இதே மாதிரி மற்றொரு மாவிலும் செய்யவும்.
இப்போது உங்க பீசா ரெடி.


இதற்கு இவ்வளவு மெனக்கிட்டால் ருசிகரமாக சாப்பிடலாம். இன்னும் ஒரு ஈஸியான வழி கோதுமை மாவிலும் செய்யலாம். அன்று என்ன தயாரிக்கிறோமோ அந்த பில்லிங், காய்கறியோ, சிக்கனோ, மட்டனோ, இறால் கூட்டோ எதுவா இருந்தாலும் ஒரு கப் வைத்து கொள்ளுங்கள். மாவை குழைத்து அதில் கெட்சப்பை தடவி அந்த பில்லிங்கை தடவி வைக்க வேண்டியதுதான் கடைசியில் சீஸ் தூவி இறக்கவும். ரொம்ப அருமையாக வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

யக்கோவ் ஜலீலாக்கோவ் சூப்பர் குறிப்பு கொடுத்துட்டு இப்படி ஸ்பெல்லிங் மிஸ்டேக் பன்ரீங்களே இதுக்கு கண்டிப்பா பனீஷ்மென்ட் உண்டு..யாத்திரை முடிந்து திரும்பியதும் என் வீட்டுக்கு ஒரு பிட்சா அனுப்பி வைய்யுங்க..
பிஜ்ஜாவை பிட்சா என்றும்,கொட மிளகாயை குடை மிளகாய் என்றும்,இன்னும் சில இடங்களில் சிறு சிறு தவறுகள் உள்ளது அதனையும் சரிப்படுத்துங்க.
நான் சொல்ரேனேன்னு நீ என்ன பெரிய தமிழ்புலவரான்னு கேக்காதீங்க;-)..நானும் மிஸ்டேக் பன்னுவேன்..மற்றவர்கள் தாராளம் திருத்தி சொல்லலாm

தமிழ் புலவரே அஸ்ஸலாமு அலைக்கும்
அருசுவை மூலமாகாதான் தமிழ் டைப்பன்ன போய் தான் என் தமிழ் கொஞ்சம் பராவாயில்லை.
எல்லாம் பத்து பதினைந்து வருடம் முன் மறந்து போன தமிழ் மீண்டும் நானும் ஓவ்வொரு ரெஸிபியா பார்த்து திருத்த உள்ளேன்.

குடை என்பதை திருத்தி விட்டேன் வேறு எங்கு தவறு இருக்கு சொல்லுங்கள்

ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு ஜலீலாக்கா,
அக்கா 10 நாட்கள் லீவாமே நீங்க?
எங்க போறீங்க அக்கா?இந்த கேள்வி கேட்கலாமா?தளிகா ஏதோ யாத்திரைனு சொல்ராங்க,சொல்லுங்க அக்கா,நாங்க ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவோம்

வா அலைக்கும் அஸ்ஸலாம்

ஹிபா வெயிட் பண்ணுங்க , இன்னும் முடிவாகல
கிளம்பும் போது கண்டிப்பா சொல்லிட்டு போறேன்.
ஜலீலா

Jaleelakamal

பிஜ்ஜா என்னும்பொழுது ஒரு மாதிரியாக இருக்கு.
அது ஆங்கிலத்தில் படிக்க அப்படி தான் என்றாலும் சொல்லும்பொழுது பிட்சா என்று தான் சொல்ல வேண்டும்..அது தான் சரி
தக்காளி பொடியாக அரிந்தது அதை மாற்றுங்க..பிறகு செய்யனும் போகனும் என்பது போன்ற இடங்களில் செய்ய வேண்டும் போக வேண்டும் என்று எழுதலாம்..மன்றத்தில் சும்மா கூவம் ரேஞ்சில் கூட நான் பேசுவேன் ஆனால் எழுதும்பொழுது நாம இப்படி எழுதினால் படிக்க நல்ல இருக்கும்

தமிழ் புலவரே, அருசுவை தலை தளிக்காவே,
பிட்சா ஒகேவா
இப்ப பாருங்க இதற்கு மேல் எனக்கு பொருமை இல்லை.
இனி உங்களுக்காகவே பயந்து கரெக்டாக எழுதுவேன்.

வர்டா, லுஹர் தொழ போறேன்.

இந்த ரெஸிபி நான் குபூஸ் கொடுக்கும் போதே கொடுக்க வேண்டியது ஆனால் இவ்வளவு விரிவாக எழுத சோம்பேறி தனம் ஒகே ஒரு வழியா கொடுத்தாச்சு.

ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

ஹஹஹா என்னை பயமா இருக்கா..நானே குலசை அண்ணனுக்கு பயந்து தான் ஒழுங்காக ஆரம்பிச்சேன்