தேவையானப் பொருட்கள்
- இறால் - ஆறு பெரிய இறால்
- பச்சமிளகாய் - இரண்டு
- உப்பு - அரை தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
- வெங்காயம் - அரை
- தேங்காய் துருவல் - ஒரு டேபுள் ஸ்பூன்
- கொத்து மல்லி தழை - ஒரு டேபுள் ஸ்பூன்
- பொட்டு கடலை - இரண்டு டேபுள்ஸ்பூன்
- எண்ணை - 3 1/2 ஸ்பூன்
செய்முறை
- இறாலை தோலை உரித்து சுத்தம் செய்து முதுகிலும், வயிற்றிலும் உள்ள அழுக்கை நீட்டாக கத்தியால் கீறி எடுக்கவும்.
- அதில் மஞ்சள் தூள்,உப்பு,இஞ்சி பூண்டு போட்டு சுருட்டவும்.
- பிறகு அரை தேக்கரண்டி ஆயில்,பச்சமிளகாய் பொடியாக அரிந்து போட்டு, தேங்காய் துருவல் சேர்த்து,வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி கடசியில் கொத்து மல்லி தழையும் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
- மிக்சியில் முதலில் பொட்டுகடலையை போட்டு பொடித்து தனியாக வைக்கவும்.
- பிறகு ஆறிய இறாலை போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும், அத்துடன் பொட்டுகடலை பொடியையும் சேர்த்து கொஞ்சம தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பிறகு பிரிட்ஜில் வைத்து கெட்டியானதும் எடுத்து நான் ஸ்டிக் தவ்வாவில் முன்று ஸ்பூன் எண்ணை விட்டு பொரித்தெடுக்கவும்.
- சிறிய எலுமிச்சை அளவு உர்ண்டை எடுத்து வடைகளாக தட்டி பொரிக்கவும்.
- நல்ல இரண்டு பக்கமும் வெந்து பிரவுனானதும் எடுக்கவும்.
- சுவையான இறால் வடை ரெடி
-
-
குறிப்பு
பிரிட்ஜில் வைக்காமலும் சுடலாம்.
கலவை கெட்டியாக இருக்கனும்.
எண்ணை தேவைபட்டால் மறுபடியும் கொஞ்சமா ஊற்றி பொரிக்கவும்.
சுவையான இறால் வடை ரெடி
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 person |
20 min |
10 min |