உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கீரை மசியல்

 


தேவையானப் பொருட்கள்

  • கீரை பொடியாக அரிந்தது- 3 கப்
  • சீரகம்- கால் ஸ்பூன்
  • தனியா- கால் ஸ்பூன்
  • சிறிய வெங்காயம்-7
  • சிறிய பூண்டு-7
  • பெரிய தக்காளி-1
  • பச்சை மிளகாய்-2
  • வெந்த பருப்பு- 1 மேசைக்கரண்டி
  • புளி- 1 அரை நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி

செய்முறை

  • ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
  • தனியா, சீரகம், இவற்றை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  • பிறகு அதே எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளியை நன்கு வதக்கவும்.
  • பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அனைத்தையும் வெந்த பருப்பு, புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

குறிப்பு:

இது நெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்ற மசியலாகும்.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 15 நிமிடங்கள் 15 நிமிடங்கள்
random food image


comments
அன்புள்ள மனோக்கா,
மார்ச் 30, 2008 - 2:00pm - வழங்கியவர் thalika

சுகமாய் இருக்கிரீர்களா?நல்லெண்ணையை வாங்கி விட்டேன்..அதனை சமையலுக்கு இதுநாள் வரை பயன்படுத்தியதில்லை..நல்ல இருக்குமா இல்லையா என்ற சந்தேகத்திலேயே இருந்தேன்..அப்ப கரெக்டா உங்க குறிப்பு அதுவும் நல்லெண்ணையில்....எதற்கெல்லாம் நல்லெண்ணை பொருந்தும் ஊறுகாய்,இட்லி பொடி தவிற என்று சொல்லுவீர்களா
இடனை பாலக் கீரையில் செய்யலாமா..இல்லை சிவப்பு கீரையில் செய்யலாமா

நல்லெண்ணை
மார்ச் 31, 2008 - 1:23am - வழங்கியவர் Jaleela Banu

தளிக்கா எல்லா சமையலுக்கும் நல்லெண்ணை பயன் படுத்தலாம்,
எண்ணை கத்திரிகாய், மருந்து சோறு, தோசைக்கு கூட பயன் படுத்தலாம். மீன் பொருக்க,
இப்ப எல்லாம் ரசத்துக்கு ஆலிவ் ஆயில் பயன் படுத்து கிறேன்.

ஜலீலா

நல்ல எண்ணை
மார்ச் 31, 2008 - 1:35am - வழங்கியவர் T S JAYANTHI

தளிகா, நல்லெண்ணையை காரக் குழம்பு, கலந்த சாதங்கள் (தேங்காய் சாதம் தவிர), தொக்குகள் செய்ய பயன் படுத்தலாம்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மீன் குழம்பு.
மார்ச் 31, 2008 - 2:52am - வழங்கியவர் Jaleela Banu

ஆ புளி சாத்திற்கு ரொம்ப நல்ல இருக்கும், வத்த குழம்பு, புளி குழம்புகள், மீன் குழம்பு.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
அனால் நல்ல சித்து கொண்டு தான் இருக்கிறோம் நோய் தான் விட்ட பாடில்லை
ஹி ஹி ஹா ஹா

ஜலீலா

நல்லெண்ணை
மார்ச் 31, 2008 - 3:13am - வழங்கியவர் thalika

அப்படியா செஞ்சுட்டா போச்சு .இன்று சாம்பார் வைக்கவா ??.மீன் பொரித்து பார்க்கனும்..எனக்கு தேங்காய் எண்னை என்றால் கொள்ளைப் பிரியம்..
அது போல் என் அம்மா விளக்கெண்ணையை எதுவோ ஒரு பருப்பு குழம்பில் ஊற்றுவார்கள் நல்ல சுவை தரும் என்பார்கள்..எதற்கு என்று தெரியவில்லை...உங்களுக்கு தெரியுமா?

அன்புள்ள தாளிகா!
மார்ச் 31, 2008 - 11:38am - வழங்கியவர் Mrs.Mano

இந்த மசியலை பாலக் கீரையிலும் செய்யலாம். ருசி மிகவும் நன்றாக இருக்கும். சிகப்பு கீரையில் நான் செய்ததில்லை. ஆனால் அதுவும் வித்தியாசமான ருசியில் இருக்குமென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் கேரளத்துக்காரர்கள் சிகப்புக்கீரையை அதிகம் செய்து நான் பார்த்திருக்கிறேன். அதைத்தவிர, முளைக்கீரையிலும் செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும்.

விளக்கெண்ணெயில் மருத்துவ குணம் இருப்பதாலும், பருப்பை அது நன்கு குழைய வேக வைப்பதாலும் சிலர் அதில் பருப்பை வேக வைக்கும்போது சில சொட்டுகள் விளக்கெண்ணெய் விடுவதுண்டு.

நல்லெண்ணெயை பொதுவாக எல்லா சமையல் பக்குவங்களிலும் சேர்க்கலாமென்றாலும் புளியோதரை, கட்டு சாதங்கள், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, புளிக் குழம்புகள், வற்றல் குழம்புகள், ஊறுகாய்கள்-இவையெல்லாம் நல்லெண்ணெய் சேர்த்தால் மட்டுமே அதிக ருசியும் சுவையும் தரும்.

இன்று கடல் பற்றிய நியூ டாபிக்[anjali]
மார்ச் 31, 2008 - 11:55am - வழங்கியவர் anjali73

ஹாய் அறுசுவை தோழிகளே,எல்லோரும் நலமாக இருக்கீங்களா ? naan anjali, இன்று கடல் பற்றிய நியூ டாபிக். இன்டரஸ்டிங்காக இருக்குமென்று நினைக்கிறேன். படிச்சு பாருங்க புடிச்சா எழுதுங்க எனக்கு ஒ.கே ! bye,bye.