தேவையானப் பொருட்கள்
- கீரை பொடியாக அரிந்தது- 3 கப்
- சீரகம்- கால் ஸ்பூன்
- தனியா- கால் ஸ்பூன்
- சிறிய வெங்காயம்-7
- சிறிய பூண்டு-7
- பெரிய தக்காளி-1
- பச்சை மிளகாய்-2
- வெந்த பருப்பு- 1 மேசைக்கரண்டி
- புளி- 1 அரை நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
செய்முறை
- ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
- தனியா, சீரகம், இவற்றை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
- பிறகு அதே எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளியை நன்கு வதக்கவும்.
- பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அனைத்தையும் வெந்த பருப்பு, புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
-
-
-
குறிப்பு
இது நெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்ற மசியலாகும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 |
15 நிமிடங்கள் |
15 நிமிடங்கள் |