காரட் அல்வா

தேதி: March 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துருவிய காரட்- கால் கிலோ
நீர்- அரை கப்
பால்- அரை கப்
சீனி- 5 மேசைக்கரண்டி
கண்டென்ஸ்ட் மில்க்- 1 மே.கரண்டி
நெய்- 2 மே.க
முந்திரிப்பருப்புத்துண்டுகள்- 1 மே.க
உலர்ந்த திராட்சை- 1 மே.க
ஏலப்பொடி- அரை ஸ்பூன்


 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
துருவிய காரட், நீரை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை மெதுவான தீயில் சமைக்கவும்.
பிறகு பாலைச் சேர்த்து அது சுண்டும் வரை சமைக்கவும்.
அதன் பின் கண்டென்ஸ்ட் மில்க், சீனி சேர்த்து கிளறவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் கொட்டவும்.
அல்வா திரண்டு, அடியில் பிடிக்காது, ஒட்டாது சுருண்டு வரும்போது இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மேடம் எப்படி இருக்கீங்க? அறுசுவையை பார்த்து இன்றைக்கு ஸ்வீட் ஏதாவது செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் என்று நினைத்திருக்கிறேன். உங்களது காரட் அல்வா ரெசிபியை செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன். ஆனால், கண்டென்ஸ்ட் மில்க் தவிர மற்ற எல்லா பொருட்களும் இருக்கிறது. கண்டென்ஸ்ட் மில்க் போடாமல் செய்யலாமா? போடாமல் செய்தால் எத்தனை மேசைக்கரண்டி சீனி சேர்க்க வேண்டும். நன்றி

கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பது சுவையை இன்னும் அதிகமாக்குவதற்குத்தான். அது இல்லாமலும் காரட் அல்வா செய்யலாம். மேலும் ஒரு மேசைக்கரண்டி சீனியை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
நான் ஊரில் இல்லாததால் உடனடியாக என்னால் பதில் தர முடியவில்லை. தாமதத்திற்காக வருந்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.

என் சந்தேகத்தை தீர்த்ததற்கு மிக்க நன்றி. நான் இன்னும் இந்த காரட் அல்வா செய்ய வில்லை உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தேன். இப்போதுதான் உங்கள் பதிலை பார்த்தேன். இன்றைக்கு செய்து பார்த்துவிட்டு பதில் போடுகிறேன். நன்றி.

பதிலை தாமதமாக கொடுப்பதற்கு ஸாரி. காரட் அல்வா செய்து பார்த்தேன் நன்றாக வந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. என் கணவருக்கு காரட் அல்வா பிடிக்காது இருந்தாலும் நான் செய்ததை சாப்பிட்டு விட்டு நல்லா இருக்குனு சொன்னார். எனக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியலா நன்றி மேடம்.

பதில் தாமதமாக வந்தாலும் நீங்கள் இந்த இனிப்பை செய்து பார்த்து, அதற்கு உடனே feedbackம் தந்தது எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது. எந்த புதிய சமையல் குறிப்பையும் புதிதாகச் செய்யும்போது அது சுவையாகவும் வெற்றிகரமாகவும் அமைந்து உற்றவர்களின் பாராட்டுக்களையும் பெற்றால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்!!