தேவையானப் பொருட்கள்
- இறால் - 1/2 கிலோ
- எண்ணெய் - அரை கப்
- வெங்காயம் - 5
- இஞ்சி - 1 அங்குலம்
- பூண்டு - 2பல்
- தக்காளி - 3
- மிளகாய்தூள் - 2
- தேக்கரண்டிகரம் மாசாலா - 1 தேக்கரண்டி
- மிளகு - அரைதேக்கரண்டி
- மஞ்சள்தூள் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை
- முதலில் இறாலை சுத்தம் செய்துகொள்ளவும்.
-
- வெங்காயம், தக்காளியை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
- கொத்தமல்லித்தழை பொடிபொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
- இஞ்சி,பூண்டை விழுதாக அரைக்கவும்.
-
- ஒரு கடாயில் நிறைய எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமான சூட்டில் வெங்காயத்தினைப் போட்டு வதக்கவும்.
-
- அத்துடன் பூண்டு, இஞ்சி விழுதினைச் சேர்க்கவும். அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும்.
-
- பிறகு தக்காளியும் உப்பும் சேர்த்து, சற்று தீயை அதிகமாக்கிவதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து, பின் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு,மிளகுதூள்,கரம் மாசாலா போட்டு வதக்கிபிறகு அதில் இறால்களைச் சேர்த்து, நன்கு கலக்கவும் மிதமான தீயில் வேகவிடவும்.
-
- வற்றியது போல் இருந்தாலும் ,தண்ணீர் சேர்க்க கூடாது. சற்று தீயை குறைத்து மூடி போட்டு வேகவைக்கவும். இறால் நன்கு வேகும் வரை தீயில் வைத்து இருக்கவும். வெந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
குறிப்பு
வற்றியது போல் இருந்தாலும் ,தண்ணீர் சேர்க்க கூடாது. சற்று தீயை குறைத்து மூடி போட்டு வேகவைக்கவும். இறால் நன்கு வேகும் வரை தீயில் வைத்து இருக்கவும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
5 நபர்களுக்கு |
அரைமணிநேரம் |