உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கத்திரிக்காய் ரசம்

 


தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய் - கால் கிலோ
  • வெங்காயம் - ஐம்பது கிராம்
  • தக்காளி - ஐம்பது கிராம்
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • பச்ச மிளகாய் - ஒன்று
  • கார்ன் பிளார் மாவு - ஒரு டேபுள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு ( ஒன்னறை தேக்கரண்டி)
  • தாளிக்க
  • --------
  • எண்ணை - இரண்டு தேக்கரண்டி
  • காஞ்ச மிளகாய் - முன்று
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • சீறகம் - கால் தேக்க்ரண்டி
  • கருவெப்பிலை - ஐந்து ஆர்க்
  • பூண்டு - முன்று பல் (தட்டி கொள்ளவும்)
  • கொத்து மல்லி தழை - கடைசியில் மேலே தூவ சிறிது

செய்முறை

  • கத்திரிக்காயை நீளவாக்கி நான்காக அரிந்து கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து வைக்கவும்.
  • புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், உப்பு,மஞ்சள் தூள் போட்டு அரிந்து வைத்துள்ள கத்திரிக்காயும் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ,கரைத்து வைத்துள்ள புளியையும் ஊற்றி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து கத்திரிக்காயை வேகவிட விடவும்.
  • கத்திரிக்காய் வெந்து புளி மசாலா வாடை அடங்கியதும்
  • கார்ன்பிளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
  • கட்டியாக இருந்தால் இன்னும் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.

குறிப்பு:

இதற்கு தொட்டு கொள்ள ஏதாவது பொரியல் (அ) கறி வடை, இறால் வடை போன்றவை நல்ல இருக்கும். ஊற்றி சாப்பிடும் படி ரசம் பதத்திற்கு இருக்கனும்.

வழங்கியவர்

ஜலீலா


comments
கத்திரிக்காய் ரசம் ஜலிலாக்கா!!
நவம்பர் 13, 2008 - 11:00am - வழங்கியவர் menaga

இன்று உங்க கத்திரிக்காய் ரசம் செய்தேன் அக்கா,சூப்பரா இருந்தது.வித்தியாசமா இருக்குன்னு செய்துப்பார்த்தேன்.சுப்பர்ர்ர்
ர்ர்!!

டியர் மேனகா- கத்திரிக்காய் ரசம்
நவம்பர் 13, 2008 - 2:49pm - வழங்கியவர் Jaleela Banu

டியர் மேனகா- கத்திரிக்காய் ரசம் செய்து பார்த்து உங்கள் பின்னூட்டத்துக்கு.மிக்க நன்றி

இது செய்து தொட்டு கொள்ள கறி வடை செய்வோம்.
ஜலீலா