ஒட்டு வேலை - வால் ஹேங்கர் செய்வது எப்படி?

தேதி: March 31, 2008

5
Average: 4.2 (5 votes)

 

பின்னல் நூல் - பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, நாவல், வெள்ளை
அட்டை - 2' X1.5'
துணி - 1 யார்
பிளாஸ்டிக் கண்கள் - 1 சோடி
பசை/கோந்து
கலர் பென்சில்கள் அல்லது பெயிண்ட்கள்

 

குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும்.
அட்டையை சுற்றி துணியால் மூடி பின் பக்கமாக ஒட்டவும்.
ஒரு பேப்பரில் புறாக்கள் மற்றும் பெரிய பூக்கள் (06), இலைகளை வரையவும்.
என்ன நிறங்களில் பூக்கள் வேண்டுமோ அந்த நிற பென்சில்/பெயிண்டால் பூக்களுக்கு வண்ணம் தீட்டவும்.
பின்னர் பூக்களின் வண்ணத்திற்கேற்ப ஒவ்வொரு இதழ்களாக பின்னல் நூலினால் நெருக்கமாக ஒட்டவும். (ஏற்கனவே வண்ணம் தீட்டியிருப்பதால் நூலை ஒட்டும் போது சிறிய இடைவெளி ஏற்பட்டாலும் தெரியாது).
பூக்களின் நடுவில் நூலினால் வட்டமாக சுற்றி சுற்றி ஒட்டவும். இவ்வாறு எல்லா பூக்களுக்கும், இலைகளுக்கும் நூலை ஒட்டி காய விட்டு வெட்டவும்.
புறாக்களுக்கும் இதே போல வெள்ளை அல்லது பலவர்ண நூலால் ஒட்டி வெட்டவும். பின்னர் புறாக்களுக்கு பிளாஸ்டிக் கண்களை வைத்து ஒட்டவும்
பின்னர் துணி ஒட்டிய அட்டையின் இரு கரைகளிலும் பூக்களை நேராக வைத்து ஒட்டவும். நடுவில் உள்ள இடைவெளியில் பச்சை நிற நூலால் கொடிகளைப்போல வளைத்து ஒட்டவும்
பின்னர் கொடிகளின் மேல் இரு புறாக்களையும் ஒட்டவும்
பூக்களின் இடையில் இலைகளையும் ஒட்டவும். விரும்பினால் இடையிடையே பல வர்ண சம்கி, கற்களை வைத்தும் ஒட்டலாம்.
இப்போது அழகான வால் ஹங்கர் தயார். இதனை பிரேம் செய்தோ அல்லது அப்படியே சுவரில் மாட்டலாம்.
இதே போல பிடித்தமான டிசைன்களை வரைந்து நூலால் ஒட்டி அழகுபடுத்தலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. நர்மதா அவர்கள் இதனை செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வால் ஹேங்கர்

திருமதி நர்மதாவின் படைப்பு மிக நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

ரமாமணி

"Always Keep Smiling"

"Always Keep Smiling"

வணக்கம் நர்மதா,

நான் காயத்ரி உங்கள் wall hanging ரொம்ப அழகா இருந்தது,ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் . நீங்கள் காமித்த அட்டை நோட் புக்குக்கு போடுவதா அல்லது கார்போர்டு (cardboard) அட்டையா .அதில் ஒட்டும் (white) துனி என்ன வென்று சொன்னால்(cotton,gaada???) உதவியா இருக்கும்.

நன்றி,
காயத்ரி கணேஷ்

வணக்கம் காயத்ரி,

அது சிறிது தடிப்பான foam மட்டை. இதற்கு card board மட்டை, மெல்லிய ply woodம் பாவிக்கலாம். நான் பாவித்தது foam தான். note book மட்டையில் செய்தால் stiff ஆக இல்லாமல் வளையப் பார்க்கும். சூரியகாந்தி பூ போட்டது ply woodஇல்.

துணி: பொதுவாக cotton துணியில் செய்தால் ஒட்டுவது சுலபம். நான் cotton பாவித்தது துணிதான். வேறு துணிகளும் பாவிக்கலாம். பழைய புடவைகளைகூட வெட்டி பாவிக்கலாம்.
-நர்மதா :)

ரொம்ப அழகா இருக்கு மேடம் இது. இந்த வால் ஹாங்கிங் செய்யலாம்ன்னு இருக்கேன். மேடம் புறாவிற்கு நூல் ஒட்டுவதை பற்றியும், இலை செய்வது பற்றியும் இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் உதவியாக இருக்கும். நீங்கள் ஒய்வாக இருக்கும் போது பதில் தந்தால் போதும். நன்றி மேடம்

வணக்கம் நர்மதா,

மிக்க நன்றி பதில் அளித்ததீற்கு.நான் செய்து
பார்த்து விட்டு பிறகு சொல்கிரேன்.
நன்றி

அன்பின் நந்தினி,

இலைகளுக்கும், புறாவுக்கும் நூல் ஒட்டுவது பூக்களுக்கு ஒட்டியது போலதான். இலை, புறா படத்தை பேப்பரில் வரைந்துவிட்டு (பேப்பரின் இரு பக்கமும் வரைந்தால் பின்னர் வெட்டுவது சுலபமாக இருக்கும்). கம் தடவி நூலினை சிறிய துண்டுகளாக வெட்டி நெருக்கமாக ஒட்டவும். இலைகளாயின் முதலில் இலையின் ஓரங்களிலிருந்து ஆரம்பித்து சுற்றி வர ஒட்டி பின் நடுவில் வைத்து முடிக்கவும். ஒரே நூலினையே பாவிக்காமல் சிறு துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு வரியாக போடவும். இப்படி செய்தால் neat ஆக இருக்கும். இடைவெளியும் வராது.

புறாவிற்கும் இவ்வாறே செய்யவும். முதலில் புறாவின் உடம்பிற்கு ஒட்டிவிட்டு பின்னர் இறக்கைகளிற்கு ஒட்டவும். புறாவின் வால் ஓரங்கள் மற்றும் இறக்கையின் வெளி ஓரங்களை அழுத்தமக வெட்டாமல் நூலினை அளவாக எடுத்து ஒட்டி அப்படியே விட்டால் இயல்பாக இருப்பது போல தோன்றும். நான் புறாவிற்கு multi colour yarn பாவித்துள்ளேன். நீங்கள் வெள்ளை நூலும் பாவிக்கலாம்.
வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள். மற்றது, நர்மதா என்று குறிப்பிட்டல் மட்டும் போதும். மேடம் எல்லாம் வேண்டாமே :)
-நர்மதா:)

ரொம்ப நன்றி மேடம். விளக்கம் தந்ததற்கு, நிச்சயம் இதை செய்து பார்த்து விட்டு பதில் தருகிறேன்.

உங்கள் இந்த கைவினைப் பொருள் ஒரு நல்ல கற்பனை. நூல் என்பது உல்லன் என்று நினைக்கிறேன். படத்தில் உல்லன் போலத்தான் தெரிகிறது. கொஞ்சம் தடிமனான பேப்பராக இருந்தால் நூலை ஒட்டாமல் ஊசியில் கோர்த்து தைக்கலாமா? நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. இன்னும் நிறைய செய்முறைகள் தர வாழ்த்துக்கள்..

அன்பின் அன்னு,

தைப்பைதை விட ஒட்டுவது சுலபம். நான் தைத்து செய்து பார்க்கவில்லை. அது நன்றாக வருமா என்றும் தெரியவில்லை. விரும்பினால் முயற்சித்துப் பாருங்கள்.
-நர்மதா :)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta