உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஹலீம் கஞ்சி

 


தேவையானப் பொருட்கள்

  • பாதியாக உடைத்த பச்சரிசி -அரைகப்
  • பாதியாக உடைத்த கோதுமை -ஒரு கப்
  • துவரம்பருப்பு -முக்கால் கப்
  • கடலைப்பருப்பு -அரைகப்
  • கோழி -350கிராம்
  • வெங்காயம் -1
  • தக்காளி ௧-2
  • இஞ்சி பூண்டு விழுது -3கரண்டி
  • கரம்மசாலா -2ஒருகரண்டி
  • மிளகாய் தூள் -இருகரண்டி
  • மஞ்சள்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் -நான்கு
  • தேங்காய் -ஒன்று
  • எண்ணெய் +நெய் =100கிராம்
  • உப்பு -தேவையான அளவு
  • அவல் -2ஸ்பூன்
  • மல்லி பொதினா தலா -ஒரு கட்டு
  • எலுமிச்சை பழம் -ஒன்று

செய்முறை

  • அரிசி கோதுமை பருப்புஅனைத்தையும் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவிடவும்
  • வெங்காயம் தக்காளியை நிட்டாக வெட்டவும்
  • தேங்காயை பால் எடுத்து வைக்கவும்
  • கோழியை சுத்தம் செய்யவும்
  • ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி எல்லா தூள்களையும் போட்டு வதக்கி அதில் கோழியைப்போட்டு கிளறி பாதி மல்லி பொதினாவை போட்டு உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  • கோழி வெந்தவுடம் கோழியை மட்டும் எடுத்து இதழ் இதழாக பிய்த்துக்கொள்ளவும்
  • இப்பொழுது அடிப்பில் பெரிய சட்டியை வைத்து அதில் வெந்த அரிசி பருப்பு பிய்த்த கோழி அதில் உள்ள குருமா அனைத்தையும் ஒன்றாக ஊற்றி 3கப் தண்ணீர் ஊற்றி நன்கு மலரவிடவும் முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி கொதிக்கவிடவும் எலுமிச்சைபழத்தை பிழிந்து அதில் ஊற்றவும் கடைசியில் அவலைதூவி பத்துநிமிடம் கழித்து மேலே மல்லி பொதினா தூவி சூடாக பரிமாறவும்

குறிப்பு:

இது கொஞ்சம் காரமாக இருந்தால்தான் நன்றாக இருக்கும் காரம் குறைக்க நினைப்பவர்கள் குறைத்துக்கொள்ளலாம்..புளி சம்பாலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

வழங்கியவர்

ஜீலைஹா நஜீர் -ஃப்ரான்ஸ்

random food image


comments