தக்காளி சாதம் 2 சமையல் குறிப்பு - 8048 | அறுசுவை


தக்காளி சாதம் 2

food image
வழங்கியவர் : Jaleela Banu
தேதி : செவ்வாய், 01/04/2008 - 06:39
ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு : மூன்று பேருக்கு

 

 • அரிசி - இரண்டு கப்
 • தக்காளி - ஐந்து
 • சின்ன வெங்காயம் - 2
 • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
 • தாளிக்க:
 • ஆலிவ் ஆயில் - ஆறு தேக்கரண்டி
 • கடுகு - ஒரு தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - மூன்று
 • பூண்டு - மூன்று பல் (பொடியாக நறுக்கவும்)
 • கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
 • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
 • முந்திரி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கவும்)
 • சோம்பு - ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - இரண்டு மேசைக்கரண்டி (இரண்டாக கிள்ளி வைக்கவும்)
 • நெய் (அ) பட்டர் - ஒரு தேக்கரண்டி

 

 • முதலில் அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்து உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
 • ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தீயை சிம்மில் வைக்கவும். இடை இடையில் கிளறி விடவும்.
 • தக்காளி வெந்து கூட்டாகி எண்ணெய் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு ஆறியதும் ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நல்ல கிளறி இறக்கவும்.
 • கடைசியில் ஒரு தேக்கரண்டி பட்டர் (அ) நெய் போட்டு கிளறி இறக்கவும்.
 • சூப்பரான தக்காளி சாதம் ரெடி
சோம்பு மணம் ரொம்ப நன்றாக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள இறால் ப்ரை, மட்டன் ப்ரை, வடை, ஊறுகாய்.


ஜலிலக்கா.. வாங்க பிளீஸ்

அக்கா அரிசியை ஊற வைக்க சொல்லிட்டு அப்புறமா ஆற விடனும்னு சொல்லி இருகீங்க கொஞ்சம் பார்த்து சொல்லுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா நல்ல பாருங்கள்

மர்லியா
அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்து உதிரியாக வடித்து ஆற வைக்க வேண்டும்.

நல்ல பாருங்கள்

ஜலீலா .

Jaleelakamal

ஜலிலக்கா..

ஓஹ் வென்னீரில் ஊற வைக்கனுமா?அய்யோ இப்பதான் அடுப்பில் வைத்துட்டு வந்தென்..பரவாஇல்லைக்கா பண்ணிட்டு சொல்ரேன்..முந்திரி பருப்புலாம் டிப்ரெந்தா இருக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அய்யோ மர்லியா

அய்யோ மர்லியா என்னப்பா குழப்புகிறீர்கள்

அரிசியை களைந்து பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
பிறகு அகலமான சட்டியை உலை கொதிக்க போட்டு ஊறவைத்த அரிசியை பதமா குழையாமல் உதிரியா வடித்து ஒரு பெரிய போளில் கொட்டி ஆறவைக்கனும்.
பிறகு தாளித்ததை கொட்டி கிளறனும்.

நாளைக்கு நான் தக்காளி சாதம் தான் செய்ய் போறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலக்கா..

ஹி ஹி ஜலிலாக்கா பயம் வேணாம்..செம சூப்பரா வந்து இருக்கு..முடிந்தால் போட்டோ எடுத்து போடறேன்..ஆலு சிக்கன் சைய்சிஷ் பண்ணினேன் அருமையா உதிரியா இருக்கு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜலீலா அக்கா எப்படி

பிளான் செய்கிறீர்கள்????
ஒரு வாரத்தில் என்ன சமைப்பது.. எந்த காம்பினேஷனில் சமைப்பது என்று எப்படி பிளான் செய்கிறீர்கள்... நான் பார்தவரை.. உங்கள் உணவில் புரதமும் கார்போஹ்ய்ட்ரேட்ட்டும்.. சரியான விகிததில் இருக்கு... எங்களுக்காக ஒரு உங்க வீட்டில் இந்த வாரம் என்ன சமையல் என்று ஒரு தனி த்ரெடில் எழுதினால் எல்லோருக்கும் பயனாக இருக்கும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தக்காளி சாதம்

மர்லியா, ரொம்ப நன்றி .

இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

போட்டோவுடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

கூட்டாஞ்சோறு ரெஸிபி

இலா நீங்க சொல்வது நூரு சதவீதம் சரி .
பிளான் செய்து தான் செய்வேன்.
ஒரு வாரத்தில் எந்த ரெஸிபியும் ரீபீட் ஆகாது.
சிம்பிளா செய்யனும் அதுவும் டிபெரெண்டா இருக்கனும்,
அதே மாதிரி தான் காலை உண்டவும் ரிபீட் ஆகாது.
நிறைய டைம் இருந்தால் ஏதாவது புதுசா டிரை பண்ணுவது.
வரம் இரு முறை கூட்டாஞ்சோறு ரெஸிபி, இரண்டு வரத்திற்கு ஒரு முறை யாரும் சமைக்கலாமில் உள்ள ரெஸிபி.

ஜலீலா

Jaleelakamal

அய்யோ ஜலிலாக்கா

அய்யோ ஜலிலாக்கா என்னால் போட்டோ எடிக்க முடியாம்ல போஇட்டு உங்களிடம் பேசிட்டு போனதும் உடனே கெஸ்ட் வந்துட்டாங்க எனக்கு ஒரே டெங்ஷன் ஆ போச்சு..அதில் மறந்துட்டேன் சாரிக்கா இப்ப உங்க பதிவை பார்த்ததும் மனசு கஸ்டா இருக்கு..அடுத்த முறை பண்ணுறப்ப கண்டிப்பா அனுப்புறேன்...இன்று உங்க சிக்கன் பிரைட் ரைஸ் தான்...ரொம்ப சூப்பர்..போட்டோ ஓகே கொஞ்ச நேரத்தில் அனுப்பிடுவேன்..அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi jaleela

hi jaleela,

today i prepared ur thakaali sadam.. delicious.superb...tasty..

i think last week i asked ur suggestion but u didnt reply.

last week i prepared ginger garlic paste after 2 days it became light greenish color,though i add turmaric also,this is the first time it happend to me,plez let me know the reason.
thanks