www.arusuvai.com
முப்பருப்பு வடை
தேவையானப் பொருட்கள்
- கடலை பருப்பு - 100 கிராம்
- உளுத்தம் பருப்பு - 50 கிராம்
- துவரம் பருப்பு - 50 கிராம்
- இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
- பூண்டு - இரண்டு பல்
- சோம்பு - அரை தேக்கரண்டி
- பட்டை - ஒரு சிறிய துண்டு
- பச்ச மிளகாய் - ஒன்று
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - கால் கப் (பொடியாக அரிந்தது)
- பச்ச மிளகாய் - இரண்டு
- கருவேப்பிலை - முன்று மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
- புதினா - முன்று மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
- எண்ணை - அரை கப் (பொரித்தெடுக்க)
செய்முறை
- கடலை பருப்பை முன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரரை வடிக்கவும்.
- மிக்சியில் முதலில் சோம்பு,பட்டை, இஞ்சி பூண்டு, காஞ்ச மிளகாயை பொடிக்கவும் பிறகு அதில் கொர கொரப்பாக மிக்சியில் விப்பரில் திருப்பி அரைத்து எடுக்கவும்.
-
- அரைத்த வடை மாவில் உப்பு, சின்ன வெங்காயம்,கருவேப்பிலை, புதினா,பச்சமிளகாயை நல்ல பைனாக சாப் செய்து வடை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
- எண்ணையை காய வைத்து ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி எடுக்கவும்.
- வடை எல்லா சாதத்திற்கும் சூட்டாகும்.ரசம் சாதத்திற்கு ரொம்ப நல்ல இருக்கும்.
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 person |
1 hour 15 min |
15 min |