உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கேரட் பொரியல்

 


தேவையானப் பொருட்கள்

  • கேரட் - கால் கிலோ
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • தாளிக்க
  • =======
  • எண்ணை - இரண்டு தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • காஞ்ச மிளகாய் - இரண்டு
  • உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
  • கடலை பருப்பு - ஒரு டேக்கரண்டி
  • வெங்காயம் - அரை
  • கருவேப்பிலை - சிறிது
  • பச்ச மிளகாய் - ஒன்று
  • கொத்து மல்லி தழை - சிறிது
  • தேங்காய் துருவல் - முன்று மேசை கரண்டி

செய்முறை

  • முதலில் கடலை பருப்பை ஊறவைக்கவும்.
  • கேரட்டை பொடியாக அரிந்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும் வெந்ததும் அதிலேயே தண்ணீரை சுண்ட விட்டு இரக்கவும்.தண்ணீரை வடித்தல் அதில் உள்ள சத்து போய் விடும்.
  • ஒரு வானலியை காய வைத்து அதில் எண்ணை விட்டு கடுகு, காஞ்சமிளகாய், உளுத்தம் பருப்பு,ஊறிய கடலை பருப்பு, போட்டு தாளித்து அரை வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேன்டும்.
  • பிறகு வெந்து வைத்துள்ள கேரட்,பச்ச மிளகாய் பொடியாக அரிந்து போட்டு, தேங்காய் துருவலும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொத்து மல்லி தழை தூவி இரக்கௌம்.
  • சுவையானா கேரட் பொரியல்ரெடி.

குறிப்பு:

பிறகு என்ன குழந்தை களுக்கு உடனே செய்து கொதுங்கள் மோர் குழம்புடன். பார்க்க கலர் புல்லாக இருக்கும். கேரட்டில் ஆரஜ்சு, வெள்ளை, பச்சை, மோர் குழம்பு மஞ்சள் கலரில் இந்த கலருக்கே கூட இரண்டு புடி சேர்த்து சாப்பிடுவார்கள்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 person 15 min 15 min
random food image


comments