அரிசி பருப்பு சாதம்

தேதி: April 2, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

புழுங்கல் அரிசி - 2 டீ கப்
துவரம் பருப்பு - 3/4 டீ கப்
நெய் - 3 தேக்கரண்டி
பட்டை - அரை இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
இஞ்சி,பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சதுரங்களாக நறுக்கிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 10 இலைகள்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கைப்பிடி
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

முதலில் அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்
பின் ஒரு பரந்த குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.
அவை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் பருப்பு சேர்ப்பதால் 1 கப் சேர்த்து மொத்தம் 5 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்து கழுவிய அரிசியையும், கழுவிய பருப்பையும் போட்டு குக்கரை மூடி விசில் இட்டு ஒரு விசில் வந்ததும் தீயை அணைத்து விடவும்.
ஒரு சில அரிசி சீக்கிரம் வேகும் அப்படி இருந்தால் ஒரு விசில் வருவதற்கு சற்று முன்பே தீயை அணைத்து விட்டு ஆவி அடங்கியதும் திறந்து பரிமாறவும்.


இதை செய்து முடித்ததும் குக்கரை திறந்து ஒரு கிளறு கிளறி வைக்கவும். இல்லாவிட்டால் சாதம் கட்டை கட்டையாய் இருக்கும். இதனுடன் அப்பளம் இருந்தால் கூட சுவையாக இருக்கும். ஜலீலாவின் கள்ளுக் கடை முட்டை, கத்திரிக்காய் வறுவல் கூட சாப்பிட அமோகமாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுஸ்ரீ

நல்லா இருக்கீங்க தானே...ஹிஹீ இப்ப தான் பாத்தேன்..எப்பவோ செஞ்சிருக்கீங்க..நானே என் குறிப்பை மறந்துட்டேன் எப்படின்னு பாக்க வந்தேன் பாத்த பிண்ணூட்டம்..ரொம்ப சந்தோஷம் .பிறகு செஞ்சு பாத்தீங்களா ஸ்ரீ

அன்புடன்,
தளிகா

அக்கா தளிகா அக்கா... 2 நாள் முன்னாடி இந்த சாதம் செய்து ஓஹோன்னு பேர் வாங்கி ஏகமா ருசிச்சும் சாப்டேனாக்கும் :) அதை சொல்ல இத்தனை நாளான்னு கேட்க கூடாது... வனி பிசி ;) ஹிஹிஹீ. கத்திர்க்காய் துவையல், அப்பளம், வாழைக்காய் வறுவல்னு அசத்திட்டோம்ல காம்பினேஷன். ரொம்ப சூப்பரா இருந்தது... எல்லாருக்கும் பிடிச்சுது. நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி..ரொம்ப சந்தோஷம்..எனக்கு ரொம்ப புடிச்ச சாதம்.சூப்பர் ஐடம்ஸோட கலக்கிட்டீங்க

சுகமா? இன்னக்கி உங்களோட இந்த சாதம் தான் செய்ய போறேன் அக்கா. இந்த சைட் டிஷ் தவிர வேறு என்ன இதுக்கு சூட் ஆகும் அக்கா. இத பாத்தீங்கன்னா சொல்லுங்க இல்லைனா நான் முட்டையே செய்துடுறேன்.

எனக்கு என் அம்மா இதை ஸ்கூலுக்கு போரப்ப கொடுத்தனுப்புவாங்க..அப்ப கூட அப்பளம் or முட்டை தருவாங்க..அப்படியே சாப்பிட்டு பழகிட்டதாலோ என்னவோ அது தான் நியாபகத்துக்கு வருது..தேங்காய்த் துவையல்,ஊறுகாய் கூட நல்ல இருக்கும் காயத்ரி.செஞ்சு பாருங்க பிடிக்கும்.

சூப்பர் பருப்பு சாதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த டேஸ்ட் நானும் அப்பளம் செய்தேன் அதோடு தேங்காய் துவையல் செய்தேன் அக்கா நல்ல காம்பினேஷன் ரொம்ப நன்றி அக்கா நான் எப்போதும் ரொம்ப சிம்புளா உள்ளது தான் செய்து பழகுவேன். output நல்லா வந்தால் அடுத்தது செய்வேன் இல்ல அவ்வளவுதான் back to position ன்னு எனக்கு தெரிந்ததே செய்துக் கொண்டு இருப்பேன். once again ரொம்ப நன்றி

காயத்ரி தேன்க்ஸ்மா..எனக்கு ரொம்ப சந்தோஷம்
இன்னைக்கே கொடுத்து இன்னைக்கே செஞ்சுட்டியே..இதற்கு கத்தரிக்காய் வறுவலும் நல்ல இருக்கும்..அந்த குறிப்பு கொடுக்க நேரம் இல்லாமல் போய்விட்டது...நல்ல பக்குவமா ஒட்டாமல் வந்ததா?

சிம்பிலா புடிக்கும்னா உனக்குன்னே நிறைய குறிப்பு இருக்கு...என் குறிப்பில் கீழ் போனா கத்திரிக்காய் பாஜி இருக்கும்.அது கூட தேங்காய் சட்னி க்லந்து தோசை இட்லிக்கு சூப்பராக இருக்கு..ஏன் சொல்ரேன்னா இன்னைக்கு எங்க வீட்டில் அதான்

நல்லா ஒட்டாமல் வந்துச்சு நீங்க சொன்ன மாதிரியே கிளறி விட்டேன். ஓ நிறைய சின்ன சின்ன குறிப்புகள் இருக்கா தோ உள்ள போய் ஒரு அலசு அலசிடுறேன். ரொம்ப நன்றி தாளிகா அக்கா.

அன்புள்ள தளிகா!
உங்களின் அரிசி பருப்பு சாதம் செய்தேன். நன்றாக வந்தது. ஆனால் 1 தம்ளர் அரிசிக்கு ஒன்றரை தம்ளர் தண்ணீர் என்பது சரியாக வராது என்பதால் நான் 2 தம்ளர் தண்ணீர் உபயோகித்தேன். இன்னும் குழைவாக சாதம் இருக்க வேண்டுமென்றால் இன்னும் அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். குக்கர் விசிலுமே இன்னும் 2,3 கூட்ட வேண்டும். ஆனால் சுவை நன்றாக இருந்தது. தேங்காய் சம்மந்தி செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது.

அன்புள்ள மனோ அவர்களுக்கு
நலமா?அதிகம் காணவில்லையே அதான் கேட்டேன்.நீங்கள் என் குறிப்பை செய்து பின்னூட்டம் தந்தது என்னை பெரும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி .நீங்கள் சொன்ன அளவில் நான் மேலே மாற்றி விடுகிறேன்.

ஹாய் தளிகா,
ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி. நலம்தானே? குழந்தைகள் இருவரும் நலமா? முதல்ல பிடிங்க இந்த பாராட்டை.
நேத்து, வேலை முடிந்து ரொம்ப லேட்டா வீடு திரும்பியதும், என்னவாவது ஈஸியா, ஒன் பாட் மீல் செய்யலாமென்று தேடிக்கொண்டு இருந்ததில், உங்களோட அரிசி பருப்பு சாதம் கிடைத்தது. நைட் டின்னர் இதுதான். நான் அப்பளத்தோட பரிமாறினேன். எப்பவும் சாதம்னாலே கொஞ்சம் வம்பு பண்ணும் என் குட்டி பையனும் சரி, என் பெண்ணும் சரி, ஒண்ணும் சொல்லாமல் மட மடவென்று சாப்பிட்டு முடித்தார்கள். அடுத்து என் ஹஸ், என்ன இது, டிப்ரெண்ட்டா இருக்கே, நல்லா ப்ளேவரா டேஸ்ட்டாவும் இருக்கு என்று சொல்லி சாப்பிட்டார். இன்னைக்கி என் லன்ச் பாக்ஸ்‍க்கும் இதான்!. ரொம்ப எளிமையான, சுவையான நல்ல குறிப்புக்கு ரொம்ப நன்றி தளிகா. (குறிப்பை நம்ம விருப்பப்பட்டியல்ல‌ சேர்த்தாச்சில்ல! : ))

அன்புடன்
சுஸ்ரீ

ரூபி,இப்போ அடிக்கடி உன்னுடைய அரிசி பருப்பு சாதம் செய்கிரேன்.ரொம்ப நல்லா இருக்கு,இதோடு எத்தனை முறை செய்தாச்சு,ஆனால் பின்னூட்டம் கொடுக்காமல் ருசிச்சி மட்டும் சாபிட்டாச்சு.
தப்பு தான்.இதோ இப்போ கூட இதை செய்து சாப்பிட்டு விட்டு தான் உனக்கு பின்னூட்டம் கொடுக்க வந்தேன்.
தோழிகளே.எல்லோரும் இதை மிஸ் பண்ணாமல் செய்து பாருங்க,கன்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்,ஏன் சொல்றேனா,இந்த ரெசிப்பி என் அம்மாவிர்க்கும்,அக்காவிர்க்கும் சொன்னேன்,அவங்க வேற மாதிரி செய்வாங்க,
இதை ஒரு தடவை செய்து பார்த்துட்டு இப்போ அடிக்கடி அவங்களும் செய்ரேன்னு சொன்னாங்க.அக்கா,தன் மகளுக்கு ஸ்கூல்க்கு செய்து அனுப்பிருக்கா,அவள் தோழிகளுக்கும் பிடித்து போயிருச்சு.
ரூபி,புதினா சட்னி நல்ல காம்பினேஷன் ந்னு சொன்ன ஆனால்,புதினா,இங்கே கிடைக்காது,அதனால் மல்லி சட்னி தான் செய்வேன்,ரொம்ப நல்லாருக்கும்.
நன்றி ரூபி,இந்த சிம்பிள் ஆனால் சூப்பர் ரெசிப்பிக்கு.

ரொம்ப ரொம்ப தேன்க்ஸ் ஹிபா..என்னை விட அதிக முறை உங்க வீட்டில் தான் செய்தீங்க போலிருக்கு.
எனக்கு பிடித்தமானது தான் இது.எல்லோருக்கும் குறிப்பையும் கொடுத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.வர்டா

இன்று அரிசி பருப்பு சாதம் செய்தேன்.குக்கரில் சாதம் வைத்தால் எப்போதும் எனக்கு குழை சோறு தான் கிடைக்கும். குழைந்தால் கணவருக்கு பிடிக்காது. எனவே எப்பொழுதும் தனியாக அரிசியை வேக வைத்து தான் ஏதும் செய்வேன். இன்று பயந்தவாறே தான் குக்கரில் சமைத்தேன்.அதிசயம் ஆனால் உண்மை நல்ல பதமாக வந்தது,ருசியாகவும் இருந்தது. குறிப்பிற்கு நன்றிப்பா.தளி கொண்டைகடலை வறுத்தரைத்த குழம்பும் செய்தாயிற்று. அதுவும் பிரமாதம். அதற்கும் எனது நன்றிகள்.அத்தோடு தப்பை தப்பு என்று ஒத்துக்கொள்வது தான் சரி.தப்பை சரி என்று சொல்வது தான் தப்பு.தப்பை தப்புனு தான் சொல்லனும் சரினு சொல்ல முடியாது.சரியை தான் சரினு சொல்லனும் சரியா?இது எப்படி இருக்கு???????????????. ஹஹ்ஹாஆஆ

ஹஹஹஹா சுகு.எப்பவாவது வந்தாலும் கொஞ்சம் வம்பு பன்னிட்டு போவீங்க அது எனக்கு பிடிச்சிருக்கு.என்ன அதிசயம் எனக்கே முதல் முறை நல்லா வரலை தண்ணி அதிகமா ஊத்திட்டேன்.பரவாலையே உங்களுக்கெல்லாம் நல்ல வந்தது ..எனக்கு ரொம்ப சந்தோஷம்

எப்படி இருக்கிங்க?ரீமா குட்டி இருக்காங்க?உங்கள் பருப்பு சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.இதுக்கு முன்னும் நான் சாப்பிட்டதில்லை.சோறும் உதிரி உதிரியா இருந்தது செய்வும் ஈஸி டேஸ்டும் குட்.நல்ல ரெஸபி thanks thalika

எப்படி இருக்கிங்க?ரீமா குட்டி இருக்காங்க?உங்கள் பருப்பு சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.இதுக்கு முன்னும் நான் சாப்பிட்டதில்லை.சோறும் உதிரி உதிரியா இருந்தது செய்வும் ஈஸி டேஸ்டும் குட்.நல்ல ரெஸபி thanks thalika

ஹாய் ஜாஸ்மின்..மகள் நன்றாக இருக்கிறாள்...இது கொங்கு நாட்டி உணவு என்று நினைக்கிறேன்.அங்கு சர்வசாதாரணமாக செய்வார்கள்..ரொம்ப மகிழ்ழ்சியாக இருந்தது உங்கள் பின்னூட்டம் கண்டு..நன்றி:-)

நேத்து அரிசி பருப்பு சாதம் செய்தேன்.. ரொம்ப அருமை..

என்னோட அம்மா இந்த சாதம் செய்வாங்க .. ஆனா இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி தழைலாம் போடாம வெறும் வரமிளகாய் கிள்ளி போட்டு அரிசி பருப்பு சேர்த்து செய்வாங்க...சின்ன வயசுல சாப்பிடறதுண்டு..ஆனா இப்பல்லாம் அந்த சாப்பாடு எனக்கு ஒத்துக்காம வாமிட் வரும்..ஏன்னே தெரியல...

உங்க சாதம் ட்ரை பண்ணும்போது கூட பயம்மாதான் இருந்தது..But to my surprise it was too good...
எனக்கு ரொம்ப பிடிச்சிட்டது... ஆத்துக்காரருக்கும்தான் :-)

இனிமே அடிக்கடி செய்வேன்... செய்முறையும் ஈஸில்ல... அதனால ஆஃபிஸ் போற நாள்ல கூட சமைக்கலாம் :-)

அப்பறம் ஒரு டவுட். .. இந்த சாதம் பிரியாணி மாதிரி இருக்கணுமா, இல்ல குழைவா இருக்கணுமா ? குழைவாதான் செஞ்சேன்.. நல்லா இருந்தது..

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

தேன்க் யூ சங்கீதா
இது பிரியாணியும் இல்லாம குழைவாவும் இல்லாம இருக்கும்..பார்த்தா குழைந்த மாதிரி ஆனால் சாப்பிடையில் வழவழான்னு இல்லாம தனிதனியா சாதம் பிரியும் அப்படி இருக்கும்..தண்ணீர் அளவு அதன் படி மாற்றி கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னி ஊத்தி பாத்தா இன்னும் செய்ய செய்ய நல்லா வரும்..i am so happy

நான் அறுசுவைக்கு புதிது, இன்று உங்கள் அரிசி பருப்பு சாதம் செய்தேன், மிகவும் சுவையாக இருந்தது. என் கணவரும், மகனும் விரும்பி சாப்பிட்டார்கள். வழக்கமாக புதிதாக எது சமைத்தாலும், என் ஸ்டைலிற்கு சிறிது மாற்றி சமைத்தால் தான் சாப்பிடுவார்கள். இன்று, பூண்டு மட்டும் தான் கொஞ்சம் முழுசாகவும் (10 பல்லு) போட்டு செய்திருந்தேன். நாங்கள் மூவுரும் விரும்பி சாப்பிட்டோம். தங்கள் ரெசிப்பிற்கு நன்றி............(கோவையில் நாங்கள் வேறு விதமாகத்தான் செய்வோம், இது வித்யாசமாகவும்,ருசியாகவும் இருந்தது.)

உத்தமி.

மிக்க் நன்றி உத்தமி..கூட்டாஞ்சோறு கண்டோ என்னவோ இம்முறை நிறைய புதிய உருப்பினர்கள் பீன்னூட்டம் தருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..மிக்க நன்றி உத்தமி.

தளிகா இந்த சாதம் பிரியாணி மாதிரி ரொம்ப வாசனையா இருந்தது.என் ஹஸ்க்கு இந்த மாதிரி சாதவகையெல்லாம் பிடிக்காது ஆனால் இதை விரும்பி சாப்பிட்டார்.அப்பளமும்,ஊறுகாயும் சூப்பர் காம்பினேஷன்.அதனால் நீங்க பாஸாயிட்டிங்க.

பாசாயிட்டீங்கன்னு சொன்னப்ப நெஜமாவே ஒரு சந்தோஷம் மேனகா:-D.நன்றி

சுவையும் மணமும், ஸ்பைசி ஆம்லேட் காம்பினேசனுடனும் நன்றாக இருந்தது சாப்பிடும் போது.
நான் செய்யும் போது, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்க்க மாட்டேன். உங்கள் குறிப்புப்படி இவைகளையும் சேர்ப்பதால் சுவையும் மணமும் அபாரம். நன்றி

indira

ரொம்ப சந்தோஷம் இந்திரா..இந்த வாரம் எனக்கு ஜேக்பாட் தான்

ஒரு சில நாட்களாக எனக்கு சமையல் ஒழுங்காக வரலைனு என் ஹஸ் சொலிட்டு இருந்தார் ரொம்ப "கவலை ஆப் இந்தியா"வா இருந்ததா அப்பனு பாத்து உங்க ரெசிப்பி கண்ணுல பட்டது நீங்க சொல்லீருக்கர அதஎ அளவு போட்டு பண்ணினேன் "நாளைக்கும் இதே பண்ணி தருவிய"னு கேட்டு ஒரே பாராட்டு மழை தான் போங்க!!!ரொம்ப்ப நன்றி அக்கா.......

நன்றி அம்மு...உங்களுக்கு சமையல் நல்லா வரனும் அது தானே?சில டிப்ஸ்

1)பொறுமையாக நல்ல யோசித்து நேரம் எடுத்து செய்யலாம்..கடசி நேரத்தில் hurryburryaaஒன்றிரண்டா வதக்கி கலக்கின்னா சுவை வராது
2)வெங்காயத்தை இஞ்சி பூண்டை நல்லா வதக்கனும்..மசாலா பொடிகளையும் வதக்கனும் அப்போ சுவை கிடைக்கும்
3)சைவ சமையலில் மசாலா கம்மியா அசைவத்தில் கூடுதாலா போடலாம்
4)எது ஒன்றுக்கும் வேகும் அளவு சரியா இருக்க வேண்டும்..குறிப்பா காய்கறிகள் கொஞ்சம் குறிஅச்சலா வெந்தா கூட பரவாயில்லை நல்ல வெந்துட்டா சுவை குறிஅயும்
5)எது சமைத்தாலும் மீதம் வராத அளவு இருவருக்கும் மட்டுமாக கொஞ்சமாக சமையுங்கள்..அப்ப தான் சாப்பிட நல்லா இருக்கும்.
6)அறுசுவை குறிப்புகள் ஏராளம் உள்ளது அதில் எல்லோருடைய குறிப்பும் செய்து பார்த்து சரியா வராவிட்டாலும் கேட்கலாம்.உதவுவார்கள்

thanx ammu

எனக்கு திருமணம் அகி நேத்தோட 2 வருஷம் முடிஞ்ஜது.இந்த 2 வருஷமா தன் சமைக்க பளகிட்டு இருக்கேன்.நான் விசேஷ நாள்ள கிட்சன் பக்கம் சமைக்க போனலே ஒரு சில சமய்யம் பயத்துல சொதப்பிடரேன்.நல்ல வேளை நானும் என் ஹஸ் மட்டும் தான் யுஎஸ் ஸில் இருக்கோம்.இல்லாட்டி என் மானமே போயிருக்கும்....

எனக்கு திருமணம் அகி நேத்தோட 2 வருஷம் முடிஞ்ஜது.இந்த 2 வருஷமா தன் சமைக்க பளகிட்டு இருக்கேன்.நான் விசேஷ நாள்ள கிட்சன் பக்கம் சமைக்க போனலே ஒரு சில சமய்யம் பயத்துல சொதப்பிடரேன்.நல்ல வேளை நானும் என் ஹஸ் மட்டும் தான் யுஎஸ் ஸில் இருக்கோம்.இல்லாட்டி என் மானமே போயிருக்கும்....உங்களை அக்கா என்று கூப்பிடலாமா இல்ல சேம் ஏஜ் இருப்பீங்களானு தெரியலை.என் வயது 21.சேம் ஏஜா இருந்தா சாரி... :-)

தாராளமா என்னை அக்கான்னே கூப்பிடுங்க..உனக்கு என் தங்கை வயது...எனக்கு 25 வயது..