உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மஞ்சள் வாடா

 

இந்த வாடா வடை வைகையைச் சார்ந்தது. இதன் பெயரில் மரியாதை இல்லாததை போல தோன்றினாலும் இதன் ருசி மிகவும் சுவை மிக்கது. எங்கள் ஊர் காயல்பட்டணத்தின் ஸ்பெஷல் இந்த வாடா.இதை செய்வதற்க்கு கொஞ்சம் மெனகெடனும் செய்து சாப்பிட்டுவிட்டால் இதன் ருசி உங்களை விடாது.

தேவையானப் பொருட்கள்

  • அரிசிமாவு - 1 கப்
  • தேங்காய் - 1/4 மூடி (துறுவியது)
  • மஞ்சள் தூள் - சிறிது
  • எண்ணெய் - பொரிக்க
  • உப்பு - தேவைக்கு
  • பூரணத்திற்க்கு :
  • வெங்காயம் - 3 சுமாரானது
  • பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  • தேங்காய்பூ - 3 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • மஞ்சள் தூள் - சிறிது
  • கருவேப்பிலை - சிறிது
  • கீரைப்பொடி - 2 தேக்கரண்டி
  • மாசித்தூள் - 1 தேக்கரண்டி
  • இரால் - 15 வரட்டியது
  • மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி (காரம் அதிகமாக தேவையானால்)

செய்முறை

  • முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் பூரணம் தயார் செய்துக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி,அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு,வரட்டிய இரால் இவற்றை சேர்த்து வைக்கவும்.
  • இவற்றை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வைத்து வதக்கவும் தேவையானால் சிறிது நீர் தெளித்துகொள்ளலாம்.
  • நன்கு வெந்ததும் இறக்கி மாசித்தூளும்,கீரைப்பொடியும் சேர்த்து நன்கு பிரட்டி ஆறவிடவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1 1/2 கப் ஊற்றி கொதிக்கவிடவும்.பின் தேங்காய் பூ,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதித்ததும்,அரிசிமாவை போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
  • பின் ஒரு மர அகப்பையால் நல்ல கிண்டி ஆறியதும் ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
  • மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
  • பின் இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின் மேல் செய்து வைத்த பூரணத்தை ஒரு மேசைக்கரண்டி அளவு வைத்து அதன் மேல் தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு சுற்றிவர ஒட்டிவிடவும் மாவு பிய்ந்தால் பொரிக்கும் போது உள்ளே வைத்த பூரணம் வெளியில் வந்துவிடும்.அதனால் கவனமாக ஒட்டிவிடவும்.
  • இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி தட்டிய ஒரு வட்டத்தின் மேல் பூரணத்தை வைத்து அதன் மேல் மற்றொரு தட்டிய வட்டத்தை வைத்து மூடிவிடவும்.
  • பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • மிகவும் சுவையான மஞ்சள் வாடா தயார்.

குறிப்பு:

இரால் பெரியதாக இருந்தால் நறுக்கி சேர்க்கலாம். சிறியதாக இருந்தால் முழுசாகவே சேர்க்கலாம். முதல் முறையாக வாடா தட்டுறது செய்யும் போது உடனே வந்துவிடாது செய்து பார்க்க பழகிடும். முதலில் தட்டுவதற்க்கு சிரமமாக இருக்கும்.மாவு ஒட்டிக்கும் இல்லைன்னா பூரணம் வைக்கும் போது பிய்ந்துவிடும் அப்படி இருந்தால் ஒன்னு மாவு கெட்டியாக இருக்கா, இல்லைனா மாவு தண்ணியாக இருக்கான்னு பாருங்க இதற்க்கு மாவு கிண்டுறதுதான் கொஞ்சம் பக்குவமாக செய்யனும். காட்டண் துணியை அப்படியே விரித்து விடாமல் தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்துவிட்டு அதை விரித்து அதன் பிறகு மாவு தட்ட ஆரம்பிக்கவும். வாடா தட்டி பூரணம் வைத்து எல்லாம் செய்து சுடுறதுக்கு எடுக்கும் போது கையால் பிய்த்து எடுக்காதீர்கள் துணியை ஓரத்தில் தூக்கினால் ஈஸியாக எடுக்க வரும். அதே போல் வாட எல்லா வற்றையும் தட்டி வைத்து விட்டு பொறிக்கவும் நினைக்காதீர்கள் காய்ந்துவிட்டாலும் சிரமம்.அதனால் முதல் முறையாக செய்யும் போது ஒரு 3 வாடா செய்துவிட்டு பொரிக்க ஆரம்பியுங்கள். பழகின பின்னாடி நீங்க வாடாவை தட்டிக்கொண்ட்டே ஒரு கையால் பொரித்து எடுக்கலாம்.

வழங்கியவர்

செய்யது கதீஜா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 பேர் 1 மணி நேரம் 1/2 மணி நேரம்
random food image


comments
மஞ்சள் வாடா
ஏப்ரல் 6, 2008 - 2:19am - வழங்கியவர் tamizhi

வணக்கம் செய்யது கதீஜா
கீரைப்பொடி,மாசித்தூள்,இரால் வரட்டியது இவைகள் எல்லாம் எங்கு கிடைக்கும்? என்ற விவரம் அல்லது இவைகள் எல்லாம் என்ன? என்ற விவரம் தேவை.
அன்புடன் தமிழி

இனிமையான தமிழி
ஏப்ரல் 6, 2008 - 7:11am - வழங்கியவர் MarliyaNoohu

டியர் தமிழி உங்கள் பெயர் உச்சரிக்க மிகவும் இனிமையாக இருக்கு...இதுதான் உங்கள் நிஜ பெயரா?
கதீஜா க்கு தற்சமயம் உடல் சரி இல்லை...எனவெ நான் விளக்கம் தருகிறேன் சரியா
கீரைப்பொடி :இது எங்கள் ஊரில் கீரை சமைக்க,வடைக்கு,வாடாக்கு இப்படி பயன்படுத்துவோம்.....திரித்து வைத்துக்கொண்டால் யூஸ் ஆகும் உங்களுக்கு தேவைனா சொல்லவும் அளவு தருகிறேன் அருமையாக இருக்கும்.....
மாசித்தூள்:இது ஒருவக மீனில் இருந்து நமக்கு கிடைக்கும் அதை மற்றவைகள் எப்படி சொல்லுவார்கள்னு தெரியாது நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என விளக்கம் தந்தால் கிடைக்கும் இடத்தை சொல்ல வசதியாக இருக்கும்...
இரால் வரட்டியது:அப்படின்னா இராலை சுத்தம் செய்து மசாலா,உப்பு வாசனைக்கு கொஞ்சம் கருவப்பிள்ளை போட்டு இளம் தண்லில் வைத்து வதக்கவும்...(கருவப்பிள்ளையை வதக்கியதும் வாடாக்கு போடாமல் எடுத்து விடவும்)...இவைகளஎல்லாம் (மாசி ஐ தவிர்த்து)நாம் வீட்டில் பண்ணுவதுதான் கடையில் கிடைக்காது...விளக்கம் போதுமா?:-)
புரியலனா கேட்கவும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

மாசித்தூள்
ஏப்ரல் 6, 2008 - 7:33am - வழங்கியவர் அதிரா

மாசித்தூள் (ஒருவகை மீன் கருவாடு)என்றால் மாசிக்கருவாடு என்றும் சொல்வார்கள்( maldiv fish ) இது வெளிநாடுகளில் இலங்கை, இந்தியக் கடைகளில் போத்தல்களில் அடைத்து விற்கப்படுகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கஸ்டமா இருக்குப்பா....
ஏப்ரல் 6, 2008 - 8:28am - வழங்கியவர் MarliyaNoohu

அய்யோ அருசுவை ஓப்பன் ஆவதற்கு ரொம்ப கஸ்டமா இருக்குப்பா....
பாபு அண்ணா நலமா?அண்ணி நல்லா இருக்காங்களா?
என்ன நிறைய பிரண்ஸ்,அக்காமார்கள்,தங்கைமார்
களைலாம் கானோம் எனக்கு ஒரு பதிவு போடுங்கப்பா நான் பாட்டுக்கு ஈ ஓட்டிட்டு இருக்கேன்....அருசுவை கிடப்பதே அறிது அதைவிட நீங்கலாம் ஆஜராவது அதிவிட அறிதா இருக்கு....பிள்ளைதாட்சிகளெல்லா
ம் நல்லா இருக்கீங்களா?

செல்விக்கா உங்களுக்கு நடந்த சம்பவம்தான் எனக்கும் ஆச்சு கதீஜா சொல்லி இருப்பான்னு நினைக்குறேன்...வீட்டு வேலை கஸ்டம்தான் ஒரு பழமொழிக்கூட உண்டு
யானை அசைந்து தின்னும்
வீடு அசையாமல் தின்னும்...
அப்புறம் தூக்கத்திலும் இமேஜின் வரும் இப்படி பண்ணினால் நல்லா இருக்குமா அப்படி பண்ணினால் நல்லா இருக்குமான்னுலாம்...உடம்பிலும் கவனம் செலுத்துங்க...உடம்பை ந்ல்லா பார்த்துகங்க டைம் கிடைத்தால் போன் போடுங்க..
ஜலீலாக்கா அல்லாஹ் உங்கள் உம்ரா ஹாஜத்தையும்,உம்மவின் ஹஜ் ஹாஜத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றி தருவான் ஆமீன்..
என் மாமியாரும் ஹஜ் போக இருக்காங்க துஆ செய்யவும்

கதீஜா எனக்கு எந்த திரட்டும் ஓப்பன் ஆகல அதான் இதில் அனுப்பி இருக்கேன் என் பிரண்டுதானேன்னு டென்ஷன் ஆகாதே

அன்புடன்,
மர்ழியாநூஹு

கதீஜா!
ஏப்ரல் 6, 2008 - 8:48am - வழங்கியவர் kulasaisulthan

நன்றி! நன்றி! நன்றி! கடைசியில் நான் கேட்ட வாடா செய்முறை(காயல் methodல்) கொடுத்ததற்கு மிக்க நன்றி! அண்ணியிடம் ஒரே தொந்தரவு உடனே செய்து தரும்படி. தரவில்லையென்றால் ஊருக்கு பெட்டியை தூக்க வேண்டியது தான்.(வாடா சாப்பிட)
குலசை சுல்தான்

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சகோ.மர்ழியா!
ஏப்ரல் 6, 2008 - 8:56am - வழங்கியவர் kulasaisulthan

கீரைப் பொடி எந்த கீரையில் செய்தால் நன்றாக இருக்கும்? கீரை பொடி எப்படி செய்வது? விளக்கம் தரவும்.
குலசை.சுல்தான்

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சகோதரர் சுல்தான்
ஏப்ரல் 6, 2008 - 9:41am - வழங்கியவர் MarliyaNoohu

அன்பு புது சகோதரர் சுல்தான் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்....
வீட்டில் அனைவரும் நலமா?கண்டிப்பாக அளவு தருகிறேன்...அண்ணியிடம் இருந்து தப்பித்து கொள்ளுங்கள் :-)
வத்தல் 100
சோம்பு 50
சீரகம் 50
இவைகளை தனித்தனியாக லேசான தணலில் நிறம் மாறாமல் வாசனை மட்டும் வரும்வரை வறுக்கவும்...ஆறியதும் மிக்ஸியிநன்கு பவுடர் பண்ணாமல்,ரொம்பவும் சொர,சொர வென இல்லாதவாறு திரித்து எடுக்கவும்(இன்னும் அதிக வாசனை வேண்டுமானால் கொஞ்சம் பொரி அரிசியையும் சேர்த்துக்கவும்)ஒரு நல்ல கண்டைனரில் போட்டு வைக்கவும்..தேவைக்கேற்ப்ப எடுத்துக்கலாம்....

அன்புடன்,
மர்ழியாநூஹு

பெட்டியை தூக்கிட்டு வாருங்கள்
ஏப்ரல் 6, 2008 - 9:59am - வழங்கியவர் MarliyaNoohu

சாகோதரர் சுல்தான் அவர்களுக்கு,நாளை என் வீட்டில் வாடா,கறிகஞ்சியும் இந்த இரு காம்பினேஷனும் சூப்பவ்வா இருக்கும்....ஊருக்கு செல்வதை விட அண்ணியுடன் இங்கு வாருங்கள் சாப்பிடலாம்
அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா,
ஏப்ரல் 6, 2008 - 11:45am - வழங்கியவர் அதிரா

மர்ழியா,
இன்னும் நீங்க மாறவே இல்லை. யாரும் இருக்கீங்களா.... எனக் கூவுவதை விடவே இல்லை. ஒரு மனிசரை சுகம் விசாரிக்கிறதெண்டால்... பத்து வேலைக்கிடையில் ஓடிவந்து சுகம் கேட்கோணும்... இது என்னவென்றால்.... பொழுது போகவில்லையே என்று ஊரிலுள்ள எல்லோரையும் சுகம் கேட்கிறீங்களே இது சரியாப் படவில்லை எனக்கு. கேட்டதுதான் கேட்டீங்க என்னை மறந்திட்டீங்களே?....... அதுக்குத்தான் இது....
கீரைப்பொடி என்றதும் சுல்தான் அங்கிள் மாதிரி நானும் நினைத்தேன், ஏதோ கீரையை அரைப்பதாக்கும் என்று... இப்பத்தானே தெரிகிறது...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா....இது சரி இல்லை
ஏப்ரல் 6, 2008 - 12:00pm - வழங்கியவர் MarliyaNoohu

அதிரா....இது சரி இல்லை அந்தரங்கத்தை சொல்ல வேணான்னு இருக்கேன்.....
நானா சும்மா இருக்கேன்...இது நியாயமா இப்படி சொல்லுவது?வேலை ஒரு புறம் என் வீட்டு மாஹாரானி ஒரு புரம்..இதுக்கு இடயே அப்பப்ப மைன்ட் ஐ பிரீயா வைக்க,தனிமை த்ரியாமல் இருக்கன்னு அகப்பையும் கையுமா,வெலலக்குமாறும் கையுமா,அருசுவைக்கு வந்தால் அம்மணி என்னமா இமேஜன் பண்ணுறீங்க.....உங்களுக்கு என்ன சண்டை போட ஆள் இருக்குள்ள அந்த எண்ணத்தில் பேசுறீங்க...ஒருவரை சுகம் விசாரிப்பது பெரிய தப்பா ?
எந்த ஊர் நியாயம் இது?
அப்புறம் அதிரா எனக்கு கொஞ்சம் குனிந்து வேலை செய்தால் பேக் பெய்ன் வருகிறது ஏதாவது கை மருந்து இருக்கா?யாருக்காவது தெரியுமா?
அன்புடன்,
மர்ழியாநூஹு

கீரைப்பொடி
ஏப்ரல் 6, 2008 - 12:35pm - வழங்கியவர் tamizhi

அன்புள்ள மர்ழியாநூஹு , நலமா?
கீரைப்பொடி அளவு தேவை சொல்லவும்
மீண்டும் சந்திப்போம்
தமிழி

அப்பிடியா மர்ழியா
ஏப்ரல் 6, 2008 - 1:25pm - வழங்கியவர் அதிரா

அப்பிடியா மர்ழியா.... நான் ஏதோ தப்புக் கணக்குப் போட்டிட்டன்... சரி போகட்டும்.... குழந்தை பிறந்தபின் யாரைப்பாருங்க இடுப்புவலிதான். எனக்கும்தான் அடிக்கடி வரும். நான் எப்பவுமே 2 பனடோல் போடுவேன் அவ்வளவுதான். பிள்ளைகளைத்தூக்கியபடி படி ஏறினால் வரும். காலில் குளிர் பிடித்தால் வரும். குளிர் உணவுகள் உண்டால் வரும். குளிரானவைகள் தலிஅக்கு வைத்தால் வரும். இவற்றில் கவனம் தேவை. தொடர்ந்து வேலை செய்யாது, இடையிடை உட்காருங்கள். எனக்குக் கை வைத்தியம் பெரிதாக தெரியாது. உணவில் நல்லெண்ணெய், சுறா வறுத்து சாப்பிட்டால் இடுப்புக்குத் தைரியம் என்பார்கள். இது எல்லோருக்குமே பொதுவான ஒரு வருத்தம்தான்(என்னைப்பொறுத்து)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சகோ.மர்ழியா!
ஏப்ரல் 6, 2008 - 10:49pm - வழங்கியவர் kulasaisulthan

அழைப்பிற்கு நன்றி. நீங்கள் அழைத்ததே வாடாவும் கறி கஞ்சியும் சாப்பிட்டது போல் திருப்தியாக இருக்கு.
அண்னிக்கு ரோசம் வந்து இன்று வாடா செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். கையில்(வாயில்) கிடைத்தால் தான் உறுதி.(இன்ஷா அல்லாஹ்)

குலசை சுல்தான்.
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

தமிழி என் சந்தேகத்தை
ஏப்ரல் 7, 2008 - 1:21am - வழங்கியவர் MarliyaNoohu

தமிழி என் சந்தேகத்தை தீர்க்கவில்லையே?இது உங்கள் நிஜ பெயரா?என கேட்டேனே?
கீரை பொடி அளவு....மேலே கொடுத்து இருக்கேன் பார்க்கவும்....ஓர் இரு தினத்தில் படத்துடன் தருகிறேன் சரியா...நான் நலம் நலம் விசாரித்தமைக்கு ந்ன்றி
அன்புடன்,
மர்ழியாநூஹு

அதிரா,சகோதரர் சுல்தான்
ஏப்ரல் 7, 2008 - 1:21am - வழங்கியவர் MarliyaNoohu

அதிரா என் வேண்டுகோள் அடிக்கடி இப்படி மாத்திரை போட கூடாது கேன்ஸர் அபாயம் நிறைய இருக்கு..அப்புறம் கட்டியும் கூட...
சகோதரர் சுல்தான்,கவலை வேணாம் சுட சுட அண்ணி வாடாவை தருவார்கள்....சாப்பிட்டபின் சொல்லவும்

மர்ழியா
ஏப்ரல் 7, 2008 - 1:34am - வழங்கியவர் thalika

ரொம்ப பேசாம எனக்கு 2 வாடா செஞ்சு கொடு மர்ழியா.இறாலை வரட்டிடலாம் கீரைப் பொடி ரெடியா இருக்கு..ஆனால் மாசி அது இல்லாட்டி?

மறிழியா.........
ஏப்ரல் 7, 2008 - 2:03am - வழங்கியவர் அதிரா

மறிழியா......... பெரிதாக பயப்பட வேண்டாம்... பனடோல் மிகவும் பவர் குறந்த மருந்துதான். அதற்காக அடிக்கடி எடுக்கக்கூடாது. வலி தங்க முடியாவிட்டால் எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாசி
ஏப்ரல் 7, 2008 - 2:03am - வழங்கியவர் MarliyaNoohu

தாலிப்பு சட்டியில் இருக்கேன்...னைட் சமயலுக்கு........
மாசி,இரால்,கீரை பொடி இவைலாம் டிப்ரன்ட் டேஸ்ட் தரும்...மாசி இல்லைனா பரவா இல்லை தாராலமாக பண்ணலாம்....இதோ பிடிச்சுக்க...0 (ஒரு வாடா) 0(இரு வாடா) :-)))

அன்புடன்,
மர்ழியாநூஹு

இது நல்லாவே இல்லை
ஏப்ரல் 7, 2008 - 2:10am - வழங்கியவர் அதிரா

இது நல்லாவே இல்லை.... கேட்டா மட்டும்தான் கொடுப்பதா? எனக்கெல்லாம் இல்லையா? நான் பிறந்ததற்கு இப்பதான் இந்தப் பெயரையே அறிகிறேன்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஓஹ் அதிரா உங்களுக்கு இல்லாமலா
ஏப்ரல் 7, 2008 - 2:18am - வழங்கியவர் MarliyaNoohu

கதீஜா திட்ட போகிறாள் திரட்டை இப்படி அரட்டைக்கு யூஸ் பண்ணுறதுக்கு...
ஓஹ் அதிரா உங்களுக்கு இல்லாமலா எங்கள் ஊரில் இது ரொம்ப பேமஸ்.....காயல் கங்சியும் கூட அதை யாராவது போட்டாங்களான்னு தெரியல...இல்லைனா நான் போடுறேன்...அதுக்கும் வாடாக்கும் தா தான்னு கேட்கும்...நம் இருவருக்கும் இடையில் ஒரே ஒரு சின்ன கடல் மட்டும்தான் இருக்கு சீக்கிரம் ஒரு பஸ் பிடித்து வாங்க..தாரேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

சகோ.மர்ழியா!
ஏப்ரல் 7, 2008 - 6:14am - வழங்கியவர் kulasaisulthan

வாடா உடனான கறி கஞ்சி(super compination) காயல் method ல் குறிப்பு தெரிந்தால் தாருங்களேன்.வாடா, கறி கஞ்சிக்காகவாவது நோன்பு சீக்கிரம் வரனும் என்று தோன்றுகிறது. (நாக்கை கட்டுபடுத்த முடியலையா என என் முதுகுக்கு பின் எதோ முனுமுனுப்பு கேட்கிறது.)

குலசை சுல்தான்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

தமிழி
ஏப்ரல் 7, 2008 - 11:14am - வழங்கியவர் tamizhi

தமிழி எனது நிஜ பெயர்த்தான், இதில் உங்களுக்கு என்ன அவ்வள்வு சந்தேகம்?
ஆனாலும் இந்த wbsite அருமையாக உள்ளது. மேன்மேலும் வளர எனது உளமர்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் தமிழி

குலசை அண்ணா
ஏப்ரல் 7, 2008 - 11:52am - வழங்கியவர் seyedkatheeja

எப்படி இருக்கிறீர்கள் அண்ணி நலமா. நீங்கள் கேட்ட அன்றே நான் வாடா குறிப்பை கொடுத்துவிட்டேன். உங்களுக்காக கறிகஞ்சி,காய்கறி கஞ்சி,பிரியாணி கஞ்சி எல்லாம் டைப்ண்ணி வச்சிருக்கேன். எனக்கு உடம்பு சரியில்லாததால் அனுப்ப முடியலை இதோ இப்ப அனுப்பிடுறேன் செய்து பார்த்துவுட்டு உங்க பின்னூட்டம் அனுப்புங்க. மேலும் எதுவும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.

அன்புடன் கதீஜா.

ஹாய் தமிழி
ஏப்ரல் 7, 2008 - 11:53am - வழங்கியவர் seyedkatheeja

எப்படி இருக்கீங்க நீங்கள் கேட்டதுக்கு பதில் மர்ழியா தந்துவிட்டாள். செய்து பார்த்து பதில் தாங்க. கீரைபொடி செய்முறை இந்த லிங்கில் போய் பாருங்கள். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.http://
www.arusuvai.com/tamil/node/
3082

அன்புடன் கதீஜா.

அன்புடன் கதீஜாவிற்கு
ஏப்ரல் 7, 2008 - 12:09pm - வழங்கியவர் tamizhi

அன்புடன் கதீஜாவிற்கு ,

உடம்பு சரியாகி விட்டதா?

என்றும் தமிழி

அன்ப் தமிழி
ஏப்ரல் 7, 2008 - 12:52pm - வழங்கியவர் seyedkatheeja

உடம்பு எனக்கு சரியாகிவிட்டது விசாரித்ததற்க்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

அன்பு தமிழி
ஏப்ரல் 7, 2008 - 12:52pm - வழங்கியவர் seyedkatheeja

உடம்பு எனக்கு சரியாகிவிட்டது விசாரித்ததற்க்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

ALL WOMEN ITS A REQUEST PLEASE READ THIS,
ஏப்ரல் 7, 2008 - 2:50pm - வழங்கியவர் kamali laxman

THIS ARTICLE IS THRU THE KIND COURTESY OF MS SUREKHA RAMCHANDANI. ONE WOMAN'S STORY ON SOYA...

PLEASE pass this info to all your female friends... It may save their lives!

Something to take note of. This is my true story,nothing altered. These are facts, as they relate to my experience,my opinions based on what I have read and felt. I am relating them to warn other young health-conscious women who are unwittingly harming themselves.

In 1989, I graduated from high school in Texas and couldn't wait to hit the big college city. One of the changes I wanted to make was to eat healthier. Once I moved to health-conscious Austin, Texas, I began to fortify my body with the best and healthiest foods I could find. Tofu was the main ingredient in every healthy dish and I bought soya milk almost everyday and used it for everything from cereal to smoothies or just to drink for a quick snack. I bought soya muffins, miso soup with tofu, soybeans, soybean sprouts, etc. All the literature in all the health and fitness magazines said that soya protected you against everything from heart disease to breast cancer. It was the magical isoflavones, the estrogen-like hormones that all worked to help you stay young and healthy. I looked great, I was working out all the time, but my menstrual cycle was off. At 20, I started taking birth control pills to regulate my menstrual cycle. In addition to this I began to suffer from painful periods. I began to get puffy, it was as though I was losing my muscle tone. I began to suffer from depression and getting hot flushes. I mistook all this for PMS since my periods were irregular. By the time I was 25, my periods were so bad, I couldn't walk. The birth control pills never made them regular or less painful so I decided to stop taking them. I went on like this for another two years until I realized my pain wasn't normal. At 27, my gynecologist found two cysts in my uterus. Both were the size of tennis balls. I went through surgery to have them removed and thank God they were benign. The gynecologist told me to go back on birth control pills. I didn't. In 1998, he discovered a lump in my breast. Again, I went through surgery and again it was benign.

In November 2000 my glands swelled up and my gum became inflamed. Thinking I had a tooth infection I went to the dentist who told me that teeth were not the problem. After a dose of antibiotics the swelling still did not go down. At this point I could feel a tiny nodule on the right side of my neck. I told my mother I had thyroid trouble. She thought I was being silly. No one in the family suffered from thyroid trouble. Going on a hunch I saw a specialist who diagnosed me with Papillary Thyroid Carcino ma. After a series of tests he told me it was cancer. My fiance and I sat stunned. We were not prepared and I was so scared. We scheduled surgery right away. The specialist told us that it would only be after the operation that a pathologist would be able to tell us for sure if it was cancer. They found a tumor in my right lobe composed of irregular cells and another smaller tumor growing on the left, so the entire thyroid was removed. They told me that after undergoing radioactive iodine I would be safe and assured me that I could live a long life. After treatment I began to search for the cause of all these problems. I never once thought it could be all the soya I had consumed for nearly ten years. After all, soya is healthy. I came upon a web page that linked thyroid problems to soya intake and the conspiracy of soya marketed as a health food when in fact it is only a toxic by-prod uct of the vegetable oil industry. This was insane, after all, the health and fitness magazines had said nothing about soya being harmful. I visited a herbalist who was d iagnosed with thyroid cancer in 1985. She informed me that soya was the culprit. She had a hysterectomy due to cysts and other uterine problems. A few months later another acquaintance who had consumed soya came down with thyroid cancer. A girl in England I met through the Internet in a thyroid cancer forum had just undergone surgery and she was only 19. What was going on????

Breast cancer is linked to estrogen. What mimics estrogen in the female body, SOYA! But I never suspected soya because until now I never once found a single article that stated soya could be dangerous. Women who took soya prior to thyroid problems will continue to take it after if they are not aware of what soya actually does, what it contains and how it reacts in the female body. I think this is the reason that women with thyroid cancer often develop breast cancer later. My co-worker is big into soya and I see her losing hair and gaining weight despite a walking workout during her break and after work, and apples and oranges for lunch. She just had cysts removed from her uterus too. I warned her to stay off soya. I referred her to websites but until it is on the evening news on all four networks, women will suffer. Since the thyroidectomy. I do not touch soya, haven't for two years.

Dear readers, please use my story in any way you can. There are so many young girls who are consuming soya because they think they are taking care of themselves, and women taking soya because they want to be healthy. It is so unfair that the information about the dangers of soya isn't more widely circulated. It is sad. There are many out there who feel this way and it is a terrible blow when you realize you are not as healthy as you thought and that the information that you depended on was wrong.

இது எனக்கு வந்த மைல். sorry இதை இதற்கு முன் அனுப்ப try பண்ணுபோது தவறு ஆகிவிட்டது.
அன்புடன்,
கமலி

__._,_.___

soya ஆபத்தா?
ஏப்ரல் 7, 2008 - 7:34pm - வழங்கியவர் ambuli

எதுக்கு ரிஸ்க்? விட்டுடலாம்.
Please eat natural. Nowadays I avoid food items containing MSG(ajino motto), even sauces as they might contain preservatives.Cook at home and eat. That is always healthy.Nan maggi noodles kooda ippo vangaradhillai. The tastemaker contains MSG.

soya ஆபத்தா?
ஏப்ரல் 7, 2008 - 7:35pm - வழங்கியவர் ambuli

எதுக்கு ரிஸ்க்? விட்டுடலாம்.
Please eat natural. Nowadays I avoid food items containing MSG(ajino motto), even sauces as they might contain preservatives.Cook at home and eat. That is always healthy.Nan maggi noodles kooda ippo vangaradhillai. The tastemaker contains MSG.Please avoid Ready to Eat foods, especailly the readymade parathas, ready to eat 'anything'.

33 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »