வெளிநாடுகளில் சவர்மா ரொம்ப பிரசித்தம் அதனுடன் சாப்பிட சாலட் கொடுப்பார்கள். இதையும் டிரை செய்து பாருங்கள்.மெயினா கர்பிணி பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
ரொம்ப நல்ல புளிப்பாக இருக்கும் வாய்க்கு ருசிபடும்
தேவையானப் பொருட்கள்
- வெள்ளை வினிகர் - அரை கப் (50 மில்லி)
- கத்திரிக்காய் - இரண்டு
- வெள்ளரிகாய் - ஒன்று
- ரெட் முல்லங்கி - ஒன்று
- பச்ச மிளகாய் - நன்கு
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- பச்சை ஆலிவ் காய் - ஆறு
செய்முறை
- காய் களை வட வடிவமாகவும்,சதுரவடிவமாகவும் அரிந்து கொள்ள் வேண்டும்.
- எல்லாவற்றையும் போட்டு உப்பு வெள்ளை வினிகர் சேர்த்து ஏழு நாள் குலுக்கி விட்டு ஊற வைத்து பிற்கு எடுத்து சாப்பிடவும்.
-
குறிப்பு
இது நாம் வடு மாங்காய் ஊற வைப்பது போல்.
சவர்மா என்றில்லை எல்லா வகையான உணவுகளுக்கும் சாப்பிடலாம்.