உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

இத்தாலியன் சாலட்

 

குழந்தைகள் காய் கறி சாப்பிடவில்லையா கவலையை விடுங்கள். இப்படி கொடுத்து பாருங்கள் ஒரு சிறிய பவுளில் ஸ்பூன் போட்டு நல்ல விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானப் பொருட்கள்

  • சக்கரை வள்ளி கிழங்கு - ஐம்பது கிராம்
  • ஆப்பில் - ஒன்று
  • கார்ன் - ஐம்பது கிராம்
  • பைனாப்பிள் - இரண்டு சிலைஸ்
  • கேரட் - ஒன்று
  • பிரஷ் கிரீம் - நூரு மில்லி
  • மையானஸ் - நூருகிராம்
  • வொயிட் பெப்பர் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒன்னறை தேக்கரண்டி

செய்முறை

  • எல்லா காய்கள், பழங்களை ஒரே சீராக அரிந்து இட்லி பானை (அ) மைக்க்ரோவேவில் சிறிது உப்பு சேர்த்து அவித்து வெந்து தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு வாயகன்ற பவுலில் வைக்கவும்.
  • அதில் முதலில் நெஸ்லே பிரெஷ் கிரீமை போட்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு வொயிட் பெப்பர், உப்பு, லெமென் ஜுஸ் சேர்த்து நல்ல கலக்கி மையானஸையும் கலக்கி பரிமாறவும்.
  • சூப்பரான இத்தாலியன் சாலட் ரெடி.

குறிப்பு:

. இதில் சக்கரை வள்ளி கிழங்கு இல்லாதவர்கள், உருளை கிழங்கும் சேர்க்கலாம், பீன்ஸ் சேர்த்தாலும் நல்ல இருக்கும்.

வழங்கியவர்

ஜலீலா


comments