உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கத்தரிக்காய் வறுவல்

 


தேவையானப் பொருட்கள்

  • கத்தரிக்காய் - 6
  • உப்பு - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
  • இஞ்சி&பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1 சிட்டிகை
  • ஜீரகத் தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை

  • கத்தரிக்காயை கழுகி அதனை மேலிருந்து கீழ் பாதியாக காம்பை நீக்கி முறிக்கவும்
  • பின் பாதி கத்திரிக்காயில் காம்புப் பகுதி மட்டும் ஒட்டியுக்குமாறு கீழிருந்து காம்பு நோக்கி 4 முறிகளாக்கவும்.
  • அப்படியே எல்லா துண்டுகளுக்கும் கீறி வைத்து அதில் மற்ற மசாலா பொடிகளை ஒன்றாய் கலந்து கத்தரிக்காயில் மீனில் மசாலா இடுவது போல் தேய்க்கவும்
  • பின் 1 மணிநேரம் உப்பு பிடிக்க ஊறவிடவும்
  • பின் ஒரு பரந்த தவாவில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் வெட்டியபாகம் தண்ணீரில் படும்படி எல்லா துண்டுகளையும் கவிழ்த்துவைக்கவும்
  • பின் மிதமான தீயில் தண்ணீர் வற்றும்வரை மூடியிடவும்.இப்பொழுது கத்தரிக்காய் பாதி வெந்திருக்கும்
  • பின் ஒரு தவாவில் 3 ஸ்பூன் எண்ணை காயவைத்து பாதி வெந்த கத்தரிக்காயை மீன் பொரிப்பது போல் இரண்டு புறமும் மொருகும் அளவு வறுத்து எடுக்கவும்
  • சில கத்தரிக்காய் சீக்கிரம் வெந்து உடைந்து விடும்..அதற்கு தண்ணீர் ஊற்றி வேக விட தேவையில்லை நேரடியாக எண்ணையிலேயே பொரித்து எடுக்கலாம்
  • சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி

வழங்கியவர்

தளிகா


comments